அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-9

ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி   சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார். தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். உயர்கல்வி கற்க இலண்டனில் உள்ள ‘பேர்மிங்ஹாம்’பல்கலைக்கழகத்திற்கு சென்றது தான் இரட்ணாவின் அரசியல் பாதையை மாற்றியது. மார்க்சிய தத்துவத்தை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்த இரட்ணா- அதனைச் சரிவர கற்றுக்கொண்டாரோ இல்லையோ- தன்னை ‘ஈழத்து லெனின்’ என்று மிக உயர்ந்த பட்சமாக நினைத்துக் கொண்டார். ‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களது நட்பு இரட்ணாவுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
ஈழப்போராளிகளுக்கு பாலஸ்தீன இயக்கப் பயிற்சி
முதன் முதலில் கடத்தப்பட்டு வந்த வெளிநாட்டு ஆயுதம்
பலஸ்தீன தொடர்பு
ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் (ஈரோஸ்) குழுவின் தலைவர் இரட்ணசபாபதி   சுருக்கமாக இரட்ணா என்று அழைக்கப்படுவார்.


தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
உயர்கல்வி கற்க இலண்டனில் உள்ள ‘பேர்மிங்ஹாம்’பல்கலைக்கழகத்திற்கு சென்றது தான் இரட்ணாவின் அரசியல் பாதையை மாற்றியது.
மார்க்சிய தத்துவத்தை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்த இரட்ணா- அதனைச் சரிவர கற்றுக்கொண்டாரோ இல்லையோ- தன்னை ‘ஈழத்து லெனின்’ என்று மிக உயர்ந்த பட்சமாக நினைத்துக் கொண்டார்.
‘பேர்மிங்ஹாம்’ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களது நட்பு இரட்ணாவுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பல்வேறு அமைப்புக்கள் உள்ளன. அதில் முக்கியமானது யாசீர் அரபாத்தின் தலைமையிலான ‘அல்பட்டா’ என்னும் அமைப்பு.
அந்த ‘அல்பட்டா’அமைப்பின் உறுப்பினர்களோடு தான் இரட்ணாவுக்கு பரிச்சயம் ஏற்பட்டது.
ஈழப்போராட்டத்திற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் இராணுவப் பயிற்சி வழங்கலாம் என்றும் ‘அல்பட்டா’ உறுப்பினர்கள் கூறினார்கள்.
உண்மையில் அந்தக் காலகட்டத்தில் அது ஒரு அரிய வாய்ப்புத் தான்.
இலண்டனிலேயே திருமணத்தையும் (இலங்கைப் பெண்ணை) முடித்துக் கொண்ட இரட்ணாவின் மிகப் பெரிய பலவீனம் இடைவிடாமல் குடிப்பது.
எந்த மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும் என்று சொல்வார்கள்.


இருக்கலாம்.ஆனால் ஒருவனது பலவீனம் அவனை அடிமையாக்கிக் கொள்ளுமானால் அவன் அந்த பலவீனத்தின் கைதியாகி விடுகிறான்.
இரட்ணா மதுவின் கைதி. மார்க்சிசம், புரட்சி பற்றியெல்லாம் பேசிய இரட்ணா தனது வாழ்க்கைத் துணைவியாக வந்தவரை தினமும் உதைப்பதில் புரட்சி செய்தார்.
இலண்டனில் இரட்ணா தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த அருளர், அருளரிடம் “அண்ணர் இரட்ணா இலண்டனில் என்ன பணி செய்தார்?|| என்று கேட்டேன்.
அதற்கு அருளர் சொன்ன சுவாரசியமான பதில்
“குடிப்பது பெண்டிலுக்கு அடிப்பது!||
இதனை இங்கே கூறுவது ஏன் என்றால் அடிப்படையிலேயே தான் சொல்வதை தனது வாழ்வில் கடைப்பிடிக்கமுடியாத ஒருவராக இரட்ணா இருந்தார் என்பதை தெரிவிக்கவேண்டியிருக்கின்றது.
புரட்சி பற்றிப் பேசிய சிலர் இப்படித் தான் இருந்தார்கள்.
அதனால் தான் அவர்களால் புரட்சியும் நடத்த முடியவில்லை.
நிகழ்ச்சி நிரலில் தமது சாதனைகளையும் பதிய வைக்க இயலவில்லை.
பாலஸ்தீன விடுதலை அமைப்பான ‘அல்பட்டா’வில் இராணுவப் பயிற்சி பெற முடியும் என்ற செய்தியோடு இலண்டனில் சில தமிழ் இளைஞர்களைத் திரட்டினார் இரட்ணா.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக இருந்த க. பத்மநாபா அப்போது இலண்டனில் இருந்தார்.
அழைப்பு வந்தது ஆட்கள் இல்லை
புலோலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டவர் பத்மாநாபா.
பத்மநாபாவை கைது செய்த இன்ஸ்பெக்டர் பத்மநாதனுக்கு நெருங்கிய சிநேகிதராக இருந்தவர் பத்மநாபாவின் உறவினர் ஒருவர்.
இலஞ்சம் வாங்குவதில் கெட்டிக்காரரான பத்மநாதன் அதற்கு உதவியாக இருந்த தனது சிநேகிதரின் வேண்டுகோளின்படி க.பத்மநாபாவை விடுதலை செய்தார்.
அதன் பின்னர் பத்மநாபாவை அவரது குடும்பத்தினர் இலண்டனுக்கு அனுப்பி வைததிருந்தனர்.
ஒரு அதிகாரியின் பலவீனத்தை பயன்படுத்தி பத்மநாபா தப்பிக் கொண்டமையை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் குடும்பத்தினரின் விருப்பப்படி இலண்டனுக்குச் சென்றமையைச் சரியென்றும் கொள்ள முடியாது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்து போன 75இன் பிற்பகுதியில்தான் இரட்ணாவின் புதிய பிரவேசம் ஆரம்பமாகியது.
க.பத்மநாபா, தற்போது ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகமாக உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட இலண்டனில் இருந்த இளைஞர்களை அழைத்து தனது புதிய கருத்துக்களை கொட்டினார் இரட்ணா.
அவர்களும் இரட்ணாவை ஒரு இரட்சகராக நினைத்துக் கொண்டனர். இதற்கிடையே பாலஸ்தீன இராணுவ பயற்சிக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் சில இளைஞர்கள் இரட்ணாவை விட்டு விலகிவிட்டனர்.
அந்த நேரத்தில் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புமாறு ‘அல்பட்டா’பச்சைக் கொடி காட்டியது.
பயிற்சிக்கு அழைப்பு வந்துவிட்டது அனுப்பி வைக்க ஆட்கள் இல்லை. தனது வீட்டில் இருந்த அருளரோடு ஆலோசித்தார் இரட்ணா. பொறியியலாளரான அருளர் தானும் பயிற்சிக்கு செல்ல ஒப்புக் கொண்டார்.
கடத்தப்பட்ட ஆயுதம்
ஈழப் போராட்டத்தில் முதன் முதலாக வெளிநாட்டு இராணுவப் பயிற்சிக்கு இலண்டனில் இருந்து ஒரு குழு புறப்பட்டுச் சென்றது.
ஈழப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்தது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதற்கு முன்னரே – 78 இன் பிற்பகுதியில், ஈழப்போராளிகளுக்கு பயிற்சியளித்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்புக்களில் ஒன்றான ‘அல்பட்டா’.
இந்தியா ஈழப்போராளிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் அதற்கு முன்னரே ‘அல்பட்டா’வின் ஆயுதம் ஈழத்திற்கு வந்தது.
அது ஒரு கைக்குண்டு. அதனைக் கொண்டு வந்தவர் டக்ளஸ் தேவானந்தா.
(இப்போது ஈபிடிபி செயலாளர் நாயகம்) விமான நிலைய சோதனைகளையும் ஏமாற்றிவிட்டு டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்த அந்த கைக்குண்டு தான் ஈழப்போராளிகளுக்கு வெளிநாடு மூலம் முதலில் கிடைத்த ஆயுதம்
இதில் ஒரு சுவாரசியமான சம்பவமும் உண்டு.
டக்ளஸ் தேவானந்தா கைக்குண்டோடு புறப்படும்போது தன்னோடு பயிற்சியில் இருந்த அருளரிடம் விசயத்தைச் சொல்லி விட்டுத் தான் புறப்பட்டார்.
அவர் மாட்டிக்கொள்ளாமல் சென்றுவிட்டார் என்பதையறிந்த அருளர் தானும் சாகசம் செய்ய நினைத்தார்.
சூட்கேஸ் நிறைய கைக்குண்டுகளையும் வெடிமருந்துகளையும் நிரப்பிக் கொண்டு பயணத்திற்காக ‘பெய்ரூட்’ விமான நிலையம் சென்றார் அருளர்.
அவரது கெட்ட நேரம், சோதனையில் மாட்டிக்கொண்டார்.
இது நடந்தது 78ம் ஆண்டு. 15 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் ‘அல்பட்டா’வின் தலையீட்டால் அருளர் விடுதலை செய்யப்பட்டார்.
யோசிக்காமல் மாட்டியவர்கள்
“இலங்கைப் பொறியியலாளர் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது.வெடிமருந்துகளோடு சிக்கிக்கொண்டார்|| என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகியது.
செய்தியைப் பார்த்த இலங்கை உளவுத்துறை அருளரின் பின்னணி பற்றி துருவியது.
அப்போது தான் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டிருந்தனர்.
அருளரின் வீடு வவுனியா- கண்ணாட்டி என்ற இடத்தில் இருந்தது. இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்ட காட்டுப்பகுதி பண்ணைக்கு சமீபத்தில் தான் வீடு இருந்தது.
அங்கும் ஒரு பண்ணையிருந்தது. அங்கும் இளைஞர்கள் குழு ஒன்று தங்கியிருந்தது. பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கிகள் அவர்களிடம் கிடையாது. தடிகளை துப்பாக்கிகளாக பாவித்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஈழப்புரட்சி அமைப்பாளர் குழுவைச் சேர்ந்தவர்கள்.
பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவர்கள் புத்திசாலித்தனமாக வெளியேறியிருக்கலாம். ஆனால் வெளியேறவில்லை. அங்கேயே இருந்தார்கள்.
அருளரின் வீட்டுக்குச் சென்ற பொலிசாருக்கு ‘காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை’யாக கண்ணில் பட்டது பயிற்சி முகாம்.
அங்கிருந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலையோடு சம்பந்தம் இருக்கிறதா என்று கண்டறிய வழக்கமான – கடுமையான கவனிப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.
தாக்குதல் நடத்திய புலிகள் வெற்றிகரமாக தப்பிக் கொண்டார்கள். பாவம்-இவர்களோ தடிகளோடு இருந்து மாட்டி அடிகளும் உதைகளும் பெற்றுக் கொண்டார்கள்.
நிச்சயமாக தங்கள் புத்திசாலித்தனத்தை நினைத்து வருந்தியுமிருப்பார்கள்.
புலிகளுக்கு பயிற்சி
ஈழப்புரட்சி அமைப்பாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு பகுதியினரும் புரிந்துணர்வோடு இணக்கமாக செயற்படுவது என்றும், புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாலஸ்தீன இராணுவப் பயிற்சி பெற்றுக் கொடுப்பது என்றும் முடிவாகியது.
பயிற்சிக்கு அனுப்பும் செலவுகளுக்காக என்று புலிகளிடம் பணம் கேட்டார் இரட்ணா
65ஆயிரம் ரூபா புலிகளால் இரட்ணாவிடம் கொடுக்கப்பட்டது.
அக்காலகட்டத்தில் 65ஆயிரம் ரூபா பெரிய தொகை.
‘வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டால் அரசு தமிழ்பிரதேசங்களில் வங்கிகளை மூடிவிடும். மக்களிடம் நிதி திரட்டவேண்டும்| என்பது ஈழப்புரட்சி அமைப்பாளர்களது கொள்கை.
ஆனால் வங்கிக் கொள்ளை போன்றவற்றால் புலிகள் திரட்டி வைத்திருந்த பணத்தில் உதவி கேட்க அந்தக் கொள்கை தடையாக இருக்கவில்லை என்பது தான் வேடிக்கை.
புலிகள் சார்பில் இரண்டு பேரை பாலஸ்தீன விடுதலை இயக்க இராணுவ பயிற்சிக்கு கேட்டார் இரட்ணா.
புலிகள் இயக்கத் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன், விச்சுவேஸ்வரன் ஆகியோர் புலிகள் அமைப்பின் சார்பாக பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.
புலிகள் இயக்க இராணுவத் தளபதியாக இருந்த பிரபாகரன் வெளிநாட்டு பயிற்சிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். புலிகள் அமைப்பை பொறுத்தவரை பிரபாகரன் மூத்த உறுப்பினராக இருந்த போதும் உமா மகேஸ்வரன் மத்திய குழு தலைவராக இருப்பதற்கு பிரபா சம்மதித்தார்.
தலைமைப் பதவி மீது தணியாத தாகம் பிரபாவுக்கு இருந்தது என்று கூறப்படும் விமர்சனங்களை அந்த நடைமுறை கேள்விக்குள்ளாக்குகிறது. பிரபாவின் சம்மதமும் விருப்பமும் இல்லாதிருந்தால் உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.
திருப்பிக் கேட்ட பணம்
பாலஸ்தீன ‘அல்பட்டா’ இயக்கத்திடம் பயிற்சிக்குச் சென்ற உமா மகேஸ்வரனும் விச்சுவேஸ்வரனும் திரும்பி வந்தனர்.
தமக்கு ஒழுங்காகப் பயிற்சி தரப்படவில்லை. முகாமில் வெறுமனே இருக்க வைத்துவிட்டார்கள். எனவே இரட்ணா பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கேட்டார்கள்.
இரட்ணாவிடம் பணமில்லை. தனது குழுவின் உறுப்பினர்கள் பணம் கேட்டுச் செல்லும்போதே, கரத்தில் மது கிளாசுடன் இருந்து, “போராட்டம் என்றால் பசி பட்டினி இருக்கத் தான் வேண்டும்|| என்று உபதேசிப்பவரிடம் பணம் மிஞ்சியிருக்க முடியுமா?|
இரட்ணாவின் இவ்வாறான குணாம்சம் ஈழப்புரட்சி அமைப்பாளர் குழுவிற்குள் முரண்பாடுகளை தோற்றுவித்தது.
ஈழப்புரட்சி அமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஈழமாணவர் பொது மன்றம் (Gues) அப்போது ஓரளவு வேலை செய்யத் தொடங்கியிருந்தது.
உள் முரண்பாடுகளை இரட்ணா கண்டு கொள்ளவில்லை. தன்னை சிவப்பு சிந்தனையாளர் என்றவர் தினமும் குடித்து சிந்தனையை தழைக்கச் செய்து கொண்டிருந்தார்.
ஈழமாணவர் பொதுமன்றம்
ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் இரண்டு பிரிவானார்கள்.
ஒரு பிரிவு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்)(பாலகுமாரால் கலைக்கப்படவில்லை என்று கொழும்பில் ஒரு சாராரால் கூறப்படுவதும் இந்த அமைப்புத் தான்)
மறுபிரிவு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்று தன்னை அழைத்துக் கொண்டது. இந்தப் பிரிவினரோடு ஈழமாணவர் பொதுமன்றமும் இரட்ணாவின் கையை விட்டுப் போனது.
இரட்ணாவை இரட்சகராக நம்பி அவரோடு இருந்தவர்களில் முக்கியமானவர்கள் வே.பாலகுமார், சங்கர்ராஜி, சின்னபாலா எனப்படும் பால நடராஜா (தற்போது ஈழநாதம் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார்) கைலாஸ், அன்னலிங்கம் ஐயா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இரட்ணாவின் தனிப்பட்ட நடைமுறைகளால் வெறுப்புற்று பிரிந்தவர்களில் க.பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், குணசேகரன், பேரின்பராசா ஆகியோர் முக்கியமானவர்கள்.
ஈழமாணவர் பொதுமன்றம் (Gues) புதுவேகத்துடன் செயற்பட்டது. இதன் மத்திய குழுவில் சிறீதரன், ரமேஷ், செழியன், தயாபரன், சேகர், சிவா, குமார், நடேசலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்கள். டேவிற்சன் இந்த மாணவர் அமைப்பின் மத்திய குழுவில் முதலில் இல்லாதபோதும் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் முக்கிய பங்கெடுத்தார்.
ஈழமாணவர் பொதுமன்றம் வெளியிட்ட ‘ஈழ மாணவர் குரல்’ பத்திரிகை தமிழர் விடுதலைக் கூட்டணியை அம்பலப்படுத்தியது. கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலமும் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட மாபெரும் சுவரொட்டி பிரசாரம் மூலமும் கூட்டணித் தலைமைக்கு சவாலாக மாறியது ஈழ மாணவர் பொதுமன்றம்
கூட்டணிக்கு சாட்டை
இதனால் தலைவர் அமிர்தலிங்கம் ஈழமாணவர் பொதுமன்றம் குறித்து பொது மேடைகளில் காரசாரமாகக் கண்டித்தார்.
ஈழ மாணவர் பொது மன்றத்தின் அரசியல் வளர்;ச்சியை எடுத்துக்காட்ட ஒரு நல்ல உதாரணம் 82ம் ஆண்டு நடைபெற்ற மே தினம். ஈழ மாணவர் பொதுமன்றம் யாழ். முற்றவெளி மைதானத்தில் டேவிற்சன் தலைமையில் மே தினக் கூட்டத்தை நடாத்தியது. அங்கே மக்கள் வெள்ளம்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தனது மே தினக் கூட்டத்தை யாழ்.நகரசபை மண்டபத்தின் உள்ளே நடத்தியது.
முற்றவெளிக் கூட்டத்தில் டேவிற்சன் இப்படிச் சொன்னார்: “மைதானத்தில் கூட்டம் நடத்தியவர்கள் இன்று மண்டபத்திற்குள் சென்றுவிட்டார்கள். மண்டபத்திற்குள் இருந்த நாம் இன்று மைதானத்திற்கு வந்துவிட்டோம்||
இனி நாம் மீண்டும் 1978ற்கு செல்லவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment