அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 78

கிட்டு காதலியை பார்க்கச் சென்றபோது மாத்தையா அணியனர் வீசிய ‘கிரனேட் குண்டு!! : கிட்டுவின் கால் ஒன்று துண்டிக்கப்பட்டது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -78)


கிட்டு யாழ் தளபதியாக தொடர்ந்து இருந்தமையால் மாத்தையா அணியினர் கிட்டுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள். கிட்டுவின் நடமாட்டங்கள் மாத்தையாவின் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தன. கிட்டுவை அவரது மெய்ப்பாதுகாவலர்களுடன்   இருக்கும்போது நெருங்குவது கடினம். மோதல் ஏற்படக்கூடிய வாய்ப்பே கொடுக்காமல் தீர்த்துக்கட்டுவதுதான் முக்கியம் என்று மாத்தையா திட்டமிட்டார். தனக்கு விசுவாசமான, நம்பிக்கையான ஆள் ஒருவரை கிட்டுவை   தீர்த்துக் கட்டுவதற்காக தெரிவு செய்தார் மாத்தையா.   யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் கிட்டுவின் காதலியின் வீடு இருந்தது. அவரது பெயர் சிந்தியா. யாழ் பல்கலைக்கழக மாணவியாக இருந்தவர். (பின்னர் அவருக்கும் கிட்டுவுக்கும் திருமணம் நடந்தது). இரண்டாம் குறுக்குத்தெரு வீட்டுக்கு கிட்டு சென்று வருவதை மாத்தையா குழுவினரும் அறிந்துகொண்டனர். கிட்டுவை தீர்த்துக்கட்ட அதுதான் சரியான இடம் என்று முடிவு செய்து விட்டார் மாத்தையா.
• கந்தன் கருணைப் படுகொலைகள்: வெலிக்கடைப் படுகொலைகளைவிட மிக மோசமாக புலிகளால் நடத்தப்பட்ட படுகொலையில் 70 பேர்வரை கொல்லப்பட்டனர்.
• கிட்டு யாழ் தளபதியாக தொடர்ந்து இருந்தமையால் மாத்தையா அணியினர் கிட்டுவை தீர்த்துக்கட்ட திட்டம்
• மாத்தையா அணியினரால் கிட்டுமீது வீசப்பட்ட ‘கிரனேட் குண்டு கிட்டுவின் முழங்கால் துண்டிக்கப்பட்டது
கிட்டுவுக்கு வீசிய குண்டு
• கிட்டுவின் காதலியின் பெயர் சிந்தியா. யாழ் பல்கலைக்கழக மாணவியாக இருந்தவர்.
தொடர்ந்து…..

பிரபா தப்பினார்
கைதடியில் புலிகள் அமைப்பினரின் வெடிமருந்து பவுசர் வெடித்த சம்பவம் சம்பவம் தொடர்பாக கடந்தவாரம் விபரித்திருந்தேன்.
அதனைப் படித்துவிட்டு ஒருசக பத்திரிகையாளர் மேலும் சில அனுபவங்களைச் சொன்னார். அப்போது அவர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிந்தவர்.
அவர் கூறியதில் இருந்து.
“பவுசர் வெடிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னர்தான் அங்கிருந்து பிரபாகரன் சென்றார்.தாக்குதல் ஏற்பாடுகளை கவனிப்பதற்காக வந்த பிரபாகரன் பவுசரைப் பார்வையிட்டார்.
எல்லாம் சரியாக இருக்கிறது. குறித்த நேரத்தில் புறப்படவேண்டியதுதான் என்று பொன்னம்மான் கூறினார். அதன் பின்னர்தான் பிரபாகரன் புறப்பட்டுச் சென்றார்.
கிட்டு மோட்டார் சைக்கிளில் முன்னால் செல்ல, அவருக்கு பின்னால் தனது பாதுகாவலர்களுடன் பிரபாகரன் சென்றார்.
பத்து நிமிட வித்தியாசத்தால் அன்று உயிர் தப்பினார் பிரபாகரன்.
பவுசர் வெடித்த சம்பவத்தில் பொது மக்கள் உயிரிழந்ததை தெரியப்படுத்த புலிகள் விரும்பவில்லை.
புலிகள் இயக்க உறுப்பினரான காக்கா என்பவர் யாழ்ப்பாணத்தில் இருந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று, கைதடி சம்பவம் தொடர்பாக தாம் தெரிவிக்கும் செய்திகளைத் தவிர, வேறு எதனையும் வெளியிடக்கூடாது என்று சொல்லிவிட்டார்.
50க்கு மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி இருந்தனர். எங்கும் சதைத்துண்டங்கள் சிதறிக்காணப்பட்டன.
கடை ஒன்றுக்குள் குழந்தை ஒன்று நசுங்கிக்கிடந்தது. கடைக்கு பொருட்கள் வாங்க வந்த தாயாருடன் வந்திருக்க வேண்டும். தாயின் உடலைக் காணமுடியவில்லை.
பல கல்வீடுகளின் அத்திவாரம் மட்டுமே மிஞ்சியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டுமைல் சுற்றளவுப் பிரதேசம் பாதிக்கப்பட்டிருந்தது.
அத்தனை சம்பவங்கள் நடந்தும் மறுநாள் வெளியான யாழ்ப்பாண பத்திரிகைகளில் அது தொடர்பான ஒருவரிகூட காணப்படவில்லை.
அஞ்சலிக்கூட்டம்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே லெப்டினன்ட் கேணல் பொன்னம்மானின் படத்தை வைத்து புலிகள் அஞ்சலி செய்தனர்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் 10 பேருடன், வெடிமருந்து பவுசரை தயார்படுத்திய பொறியியலாளர் ரஞ்சனும் வெடிவிபத்தில் பலியாகியிருந்தார்.
ரஞ்சன் பொன்னம்மானுக்கு உறவினர். வெளிநாட்டில் வேலை செய்தவர் ரஞ்சன். அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து புலிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்துவந்தார்.
புலிகளுக்கு விமானம் ஒன்றை தயாரிக்கும் எண்ணம் வந்திருந்தது. அதனால் ரஞ்சனின் உதவியைக் கோரினார்கள். அவரும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்.
தண்ணீர் பவுசரை இரண்டு பகுதியாகப் பிரித்து மேலே தண்ணீரும், கீழே வெடி மருந்தும் நிரப்பும் திட்டம் என்பதால், ரஞ்சனை பவுசர் தயாரிப்பிலும் ஈடுபடுத்தினார் பொன்னம்மான்.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தமது உறுப்பினர்களின் மறைவுக்காக அஞ்சலிக் கூட்டம் ஒன்றை புலிகள் நடத்தினார்கள்
அக்கூட்டத்தின் மூலம்தான் புலிகள் தரப்பில் 10 பேர் வெடிவிபத்தில் பலியான செய்தியை பொதுமக்கள் அறிந்துகொண்டனர்.
அந்த அஞ்சலிக்கூட்டத்திலும் வெடிவிபத்தில் பலியான மக்கள் தொடர்பாக புலிகள் மௌனம் சாதித்தனர்.
அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றியவர்களில் ஒருவர் யோகி என்றழைக்கப்படும் யோகரத்தினம் யோகி.
யோகி பொன்னம்மானின் உடன் பிறந்த சகோதரர். பொலிஸ் வேலையில் சேருவதற்கு முயன்று, அது கைகூடாததால் இலண்டனுக்குச் சென்றிருந்தவர்.
பின்னர் புலிகள் அமைப்புடன் இணையத் தீர்மானித்து இந்தியா வந்து சேர்ந்தார். யாழ்ப்பாணம் வந்ததும் அவர் பங்கு கொண்ட பகிரங்க நிகழ்ச்சி அஞ்சலிக் கூட்டம்தான்.
கூட்டத்தில் யோகி உரையாற்றிய லாவகத்தைப் பார்த்துவிட்டு, அவரை அரசியல் பிரசார வேலைகளில் பயன்படுத்தலாம் என்று பிரபாகரன் முடிவு செய்துவிட்டார்.
கைதடியில் பவுசர் வெடித்து நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் தோல்வியில் முடிந்தமையால் கிட்டுவே தொடர்ந்தும் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்தார்.
பொன்னம்மான் பலியாகாமல் இருந்திருந்தால் கிட்டு மன்னார் மாவட்ட தளபதியாகவும், பொன்னம்மான் யாழ் மாவட்ட தளபதியாகவும் இருந்திருப்பார்கள்.
உண்மையில் பொன்னம்மான் கிட்டுவைவிட இயக்கத்தில் சீனியர். எனவே அவரை யாழ் மாவட்டத் தளபதியாக நியமிப்பதை யாரும் குறை சொல்லியிருக்க முடியாது.” இவைதான் அந்தப் பத்திரிகையாளர் சொன்னது.
ஷெல் மழை
1987 மார்ச் மாதம் 7ம் திகதி யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி ஷெல்கள் ஏவப்பட்டன.
ஏவப்பட்ட ஷெல்கள் சில யாழ்ப்பாணம் வின்சன்ட் தியேட்டர் அருகில் வந்து விழுந்து வெடித்தன.
17 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.
மற்றொரு ஷெல் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை மீதும் விழுந்தது. நல்ல வேளையாக யாரும் உயிரிழக்கவில்லை. முதன் முறையாக மருத்துவமனைமீது விழுந்த ஷெல் அதுதான்.
ஷெல் ஏவப்படும் தூரம் அதிகமாகிக் கொண்டே வந்தமையால், யாழ்ப்பாணத்தில் மக்கள் நடமாடவே அஞ்சினார்கள். வீடுகளில் இருப்பதுகூட எந்த நேரம் கூரையில் n~ல் விழுமோ என்ற பயத்தோடுதான்.
கிட்டுவுக்கு குறி
கிட்டு யாழ் தளபதியாக தொடர்ந்து இருந்தமையால் மாத்தையா அணியினர் கிட்டுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள்.
கிட்டுவின் நடமாட்டங்கள் மாத்தையாவின் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தன.
கிட்டுவை அவரது மெய்ப்பாதுகாவலர்களுடன் இருக்கும்போது நெருங்குவது கடினம். மோதல் ஏற்படக்கூடிய வாய்ப்பே கொடுக்காமல் தீர்த்துக்கட்டுவதுதான் முக்கியம் என்று மாத்தையா திட்டமிட்டார்.
தனக்கு விசுவாசமான, நம்பிக்கையான ஆள் ஒருவரை கிட்டுவை தீர்த்துக் கட்டுவதற்காக தெரிவு செய்தார் மாத்தையா.
யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் கிட்டுவின் காதலியின் வீடு இருந்தது. அவரது பெயர் சிந்தியா. யாழ் பல்கலைக்கழக மாணவியாக இருந்தவர். (பின்னர் அவருக்கும் கிட்டுவுக்கும் திருமணம் நடந்தது).
இரண்டாம் குறுக்குத்தெரு வீட்டுக்கு கிட்டு சென்று வருவதை மாத்தையா குழுவினரும் அறிந்துகொண்டனர்.
கிட்டுவை தீர்த்துக்கட்ட அதுதான் சரியான இடம் என்று முடிவு செய்து விட்டார் மாத்தையா.
கிட்டுவை தீர்த்துக்கட்டும் நாளும் குறிக்கப்பட்டது. அது மார்ச் 29ம் திகதி இரவு.
அசைந்த உருவம்
கிட்டு காரை விட்டு இறங்குவதற்கு முன்னர் கைக்குண்டை காருக்குள் போட்டுவிடவேண்டும் என்பதுதான் திட்டம்.
மார்ச் 29ம் திகதி மாலையில் இருந்து மாத்தையாவின் ஆள் கைக்குண்டுடன் இரண்டாம் குறுக்குத் தெருவில் காத்திருக்கத் தொடங்கினார்.
ஒரே ஒரு மெய்ப்பாதுகவலருடன் கிட்டு முகாமிலிருந்து புறப்பட்டார்.
இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள சிந்தியாவின் வீட்டருகே இருந்த மின்சார கம்பத்தில் இருந்த மின்குமிழ் அன்று எரியவில்லை.
வீட்டின் எதிரே காரை நிறுத்தி விட்டு கிட்டு இறங்க முற்பட்டபோது, பக்கவாட்டில் இருளில் ஒரு உருவம் அசைவதை கண்டுவிட்டார்.
எதோ விபரீதம்தான் என்று அவரது உள்ளுணர்வு எச்சரிக்க, அந்த உருவம் காரை நெருங்கி கைக்குண்டை உள்ளே போட்டுவிட்டது.
விழுந்தது ‘கிரனேட்’தான் என்று தெரிந்து, காரைவிட்டு குதிப்பதற்கு கதவைத் திறப்பதற்கு இடையில், ‘கிரனேட்’ வெடித்தது.
கிட்டுவின் அருகில் இருந்த மன்னாரைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் பலியானார்.
கிட்டுவுக்கு உயிர் இருந்தது. வெளியே இறங்க முயன்றார். கால் ஒன்று காரின் ஸ்ட்ரியறிங்’கிற்குள் சிக்குப்பட்டிருந்தது. இழுத்தெடுத்தார்.
முழங்காலுக்கு கீழே கால் துண்டாகியிருந்தது.
அப்படியே காரில் இருந்து கீழே விழுந்த நேரத்திலும், மீண்டும் தான் தாக்கப்படலாம் என்ற உள்ளுணர்வால் தனது ரிவோல்வரை எடுத்து இருளை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார் கிட்டு.
இரத்தம் வெளியேறிக்கொண்டிருக்க நினைவு மங்குகிறது. மீண்டும் அவன் வருவான் என்ற உள்மன எச்சரிக்கை நினைவு மங்காமல் இழுத்து பிடித்து வைத்திருக்கிறது.
முழங்காலுடன் துண்டாகிப்போன காலுக்கு தனது ஜீன்ஸைக் கிழித்து கட்டுப் போட்டுக் கொண்டார்.
எப்படித்தான் வைராக்கியமாக இருந்தாலும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே. மயக்கம் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
மயக்கமாகும் கடைசி நொடியில் ரிவோல்வரில் சுடப்பட்ட ரவைகளுக்குப் பதிலாக புதிய ரவைகளை மாற்றிப் போட்டுவிட்டு, அந்த ரிவோல்வரை இறுகப் பற்றியபடியே மயங்கிப் போனார் கிட்டு.
அதற்குள் புலிகள் இயக்கத்தினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்.
மயங்கிய நிலையில் கிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டதால் கிட்ட உயிர்பிழைத்தார்.
மருத்துவர்களால் கிட்டுவின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததே தவிர, அவரது காலை காப்பாற்ற முடியவில்லை.
பழி வேறிடத்தில்
இதற்கிடையே கிட்டுவின் உயிருக்கு உலைவைக்க முயன்றவர்கள் ஏனைய இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் என்று கிட்டுவின் விசுவாசிகள் நம்பினார்கள்.
தம்மால் தடைசெய்யப்பட்ட ரேலோ அல்லது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களில் ஒன்றுதான் கிட்டு கொலை முயற்சிக்கு காரணம் என்று புலிகள் நினைத்து விட்டனர்.
தமது பிரதித்தலைவர் மாத்தையாதான் கொலை முயற்சிக்கு சூத்திரதாரி என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்.
முன்னர் பிடித்துவைத்திருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட ஏனைய இயக்க உறுப்பினர்கள் மீண்டும் பிடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டார்கள்.
“கிட்டண்ணாவுக்கு யாரடா குண்டு வீசியது?” என்று கேட்டு ஏனைய இயக்க உறுப்பினர்களை அடித்து நொறுக்கினார்கள் புலிகள்.
ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களை தடை செய்தபோது புலிகளால் பிடிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
நல்லூரில் ‘கந்தன் கருணை’ என்னும் பெயருடைய மாடிவீடும் சித்திரவதைக் கூடமாக பயன்படுத்தப்பட்டது.
அதே போல நல்லூர் பிரவுண் றோட்டிலும் ஒரு மாடி வீடு இருந்தது. யாழ்-இந்துக்கல்லூரிக்கு அருகிலும் மற்றொரு சிறைக்கூடத்தைப் புலிகள் வைத்திருந்தனர்.
படையினருடன் நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில் விடுதலையான அருணாவுக்கு கிட்டு தாக்கப்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது.
ஒரு எல்.எம்.ஜி. துப்பாக்கியோடு நல்லூரில் உள்ள கந்தன் கருணை முகாமுக்குச் சென்றார் அருணா.
அங்கு அறைகளில் வைத்து பூட்டப்பட்டிருந்தனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்.
அறைகளை திறக்குமாறு அங்கு காவலுக்கு நின்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார் அருணா.
அறைகள் திறக்கப்பட்டன.
அடுத்த நொடியே எல்.எம்.ஜி. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத்தள்ளினார் அருணா.
சிறைக்கூடம் கொலைக்களமானது. இரத்தம் வெள்ளமாய் பாய்ந்தது.
மற்றொரு அறைக்குள் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும், மரண ஓலங்களும் தெளிவாகக் கேட்டன.
தாமும் கொல்லப்படப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது.
வேறு வழியில்லை. கரணம் தப்பினால் மரணம்தான். எப்படியாவது தப்பிச்செல்வது என்று முடிவு செய்தனர். அவர்களது அறைக்கதவும் திறக்கப்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியோடு நின்றனர்.
அவர்கள்மீது பாய்ந்தனர் கைதிகள். அவர்களிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள்மீதே திருப்பிச் சுட்டனர்.
இருவரும் வீழ்த்தப்பட்டதும் அந்த அறையில் இருந்த கைதிகள் தப்பிச் சென்றனர்.
இல்லாவிட்டால் அவர்களும் அன்று சுட்டுக்கொல்லப்பட்டிருப்பர்.

கந்தன் கருணை படுகொலை
கைதிகளில் 70 பேர்வரை கொல்லப்படடதாக புலிகளின் சிறையில் இருந்து தப்பியவர்களில் ஒருவர் தகவல் கூறினார்.
‘கந்தன் கருணைப் படுகொலைகள்’ என்று அந்தச் சம்பவம் அழைக்கப்படுகிறது.
வெலிக்கடைப் படுகொலைகளைவிட மோசமானது கந்தன் படுகொலைகள் என்று ஏனைய இயக்கங்கள் விமர்சனம் செய்தன.
கந்தன் கருணைப்படுகொலைகளின் போது கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களில் மிக முக்கியமானவர்கள் இரண்டுபேரும் அடங்குவர்.
ஒருவர் பெஞ்சமின், மலையகத்தைச் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவர். மருத்துவ மாணவன். ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.
இன்னொருவர் ஈஸ்வரன். யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவின் தாக்குதல் பிரிவு தலைவர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்தவர்.
ஈஸ்வரனின் உயிரற்ற உடலை மேல் மாடியிலிருந்து தூக்கி கீழே எறிந்தனர் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.
புலிகள் அறிக்கை
கிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மாத்தையா யாழ்ப்பாணத்திலும் தனது ஆளுமையை செலுத்தத் தொடங்கினார்.
கிட்டுமீதான கொலை முயற்சி தொடர்பாக, ‘தேசத்துரோகிகளின் சதி’ என்று பிரசாரம் செய்யப்பட்டதால் மாத்தையாவமீது பெரிதாக சந்தேகம் வரவில்லை.
கந்தன் கருணைப் படுகொலைகள் தொடர்பாக முதலில் மௌனமாக இருந்தனர் புலிகள். பின்னர் செய்திகள் ஓரளவு மக்கள் மத்தியில் தெரியத் தொடங்கியதால் ஏப்ரல் 6ம் திகதி புலிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
“விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள், அவர்களுக்குக் காவலுக்காக நின்றவர்களின் துப்பாக்கிகளை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டனர்.
அப்போது நடைபெற்ற மோதலில் 18 கைதிகளும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் இரண்டு பேரும் பலியானார்கள்” என்று தெரிவித்தனர் புலிகள்.

No comments:

Post a Comment