அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 7

திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக்கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை. அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது. 1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக காத்திருந்தவர் திரு.உமா மகேஸ்வரன். நில அளவையாளராக கொழும்பில் கடமையாற்றியவர் திரு.உமா மகேஸ்வரன். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையிலும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். உமா மகேஸ்வரன் பின்னர் புளொட் அமைப்பின் செயலதிபராக இருந்தவர் என்பது பரவலாக தெரிந்த விசயம். பரவலாக அறியப்படாத விசயமும் ஒன்று இருக்கின்றது. சிலருக்கு அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்.

கியூபாவுக்கு கூட்டணி அனுப்பிய புலிகள்
இரத்தத் திலகமிட்ட இளைஞர்களும் தலைவர்களின் புன்னகையும்
உமாவின் பாத்திரம்
திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக்கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை.
அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது.
1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக காத்திருந்தவர் திரு.உமா மகேஸ்வரன்.
நில அளவையாளராக கொழும்பில் கடமையாற்றியவர் திரு.உமா மகேஸ்வரன். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையிலும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

உமா மகேஸ்வரன் பின்னர் புளொட் அமைப்பின் செயலதிபராக இருந்தவர் என்பது பரவலாக தெரிந்த விசயம்.
பரவலாக அறியப்படாத விசயமும் ஒன்று இருக்கின்றது. சிலருக்கு அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம்;.
தமிழ் புதிய புலிகள் (TNT) இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாறியபோது ஐந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
அந்தச் செயற்குழுவில் பிரபாகரனும் அங்கம் வகித்தார். முக்கியமானவராக இருந்தார். ஆனால் செயற்குழுவின் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரன்.
1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கலந்து கொண்டவர் தளபதி அமிர்தலிங்கம்.


புலிகளில் மட்டுமல்ல, அக்காலகட்டத்தில் இயங்கிய சகல தீவிரவாத தமிழ் குழுக்களில் இருந்த சகல இளைஞர்களின் விபரமும் அவருக்குத் தெரியும்.
அமுதர் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவான ஒருவராகவே தீவிரவாத இளைஞர்கள் பலரால் கருதப்பட்டார். அமுதரும் அந்தக் கருத்துக்கு ஏற்பவே நடந்து கொண்டார்.
தந்தை செல்வா காலத்தோடு அகிம்சை வழியில் மட்டுமே பிரச்னைகளைத் தீர்க்கும் காலகட்டம் முடிந்துவிட்டது.
தளபதி அமுதர் தலைமையில் ஆயுதப்போர் மூளும் என்று இளைஞர்கள் நம்பினார்கள்.
77ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை அடுத்து அமுதர் பொதுக்கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார்:
“தமிழர்கள் சிங்களப் படைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தமிழர்கள் தமக்கென்று ஒரு சொந்தப் படையை உருவாக்கிக் கொள்ளும் அவசியம் ஏற்பட்டு விட்டது||
கரகோசம் வானைப் பிளக்கும்.


இரத்தத் திலகம்

அமுதர் உட்பட மு.சிவசிதம்பரம் போன்றவர்களும் அமர்ந்திருந்த பொதுக்கூட்ட kasi-anandanமேடைகளில் கவிஞர் காசி ஆனந்தன் பேசுவார்:
“பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போல் இங்கும் ஓர் இயக்கம் உருவாகும். அது வானை அதிர வைக்கும்||
தலைவர்கள் புன்னகைத்தபடி இருப்பார்கள்.
பொதுக்கூட்ட மேடைகளில் நீண்ட கியூ வரிசைகளில் இளைஞர்கள் காத்திருப்பார்கள்.
தமது வீரத்தலைவர்களுக்கு கைகளை பிளேட்டால் கீறி இரத்தப் பொட்டு வைப்பதில் போட்டி போட்டு முண்டியடிப்பார்கள்.
தலைவர்கள் தடுக்கமாட்டார்கள். ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் நடத்துவதே எமது நோக்கம். இரத்தப் பொட்டு வைப்பது அகிம்சையை கறைப்படுத்தும்’என்று அன்று எந்தவொரு தலைவரும் சொன்னதே கிடையாது.
இதனை ஏன் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது என்றால் தற்போது கூட்டணித் தலைவர்கள் சிலர் கேட்கிறார்கள், “நாங்களா ஆயுதம் ஏந்தச் சொன்னோம்? நமது வழி அகிம்சை என்று நாடே அறியும் அல்லவா|| என்று கேட்கிறார்கள்.
இன்றைய கூட்டணியில் உள்ளவர்களில் திரு.மாவை சேனாதிராஜாவுக்கு மட்டும் தான் தீவிரவாதகுழுக்களோடு கூட்டணி நடத்திய பேச்சுக்கள் பற்றியும் உறவு பற்றியும் தெரிந்திருக்கும்.
திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும் 1977ம் ஆண்டு  பொதுத்தேர்தலில் இரத்தப் பொட்டு வைக்கப்பட்டவர் தான்.
காந்திகளின் கோபம்
கூட்டணியில் இன்று உள்ள திரு.ஆனந்தசங்கரி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது வீட்டில் தான் பரந்தன் ராஜன் போன்ற தீவிரவாத இளைஞர்கள் நடமாடினார்கள். தமக்கு செல்லப்பிள்ளைகளாக இருந்தவரையும் தீவிரவாத இளைஞர்களைப் பார்த்து தலைவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். தங்களைப் பார்த்து கேள்விகள் கேட்க ஆரம்பித்த போதும், தங்கள் கட்டுப்பாட்டை மீறி இளைஞர்கள் தனிவழி சென்றபோதும் மட்டும் தலைவர்கள் ‘காந்தி’களாக மாறிவிட்டார்கள்.
‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று போதிக்கத் தொடங்கினார்கள். வேளாண்மை தங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என்றால் இந்தக் காந்திகள் தீவிரவாத இளைஞர்களைக் கட்டியணைத்துக் கொண்டே இருந்திருப்பார்கள்.
சிறுபிள்ளைகளை சிங்கக்குட்டிகள் என்று சிரசு தொட்டு வாழ்த்தியிருப்பார்கள்.
சாந்தன், யோகேஸ்வரன் ஆகிய மூவரும் கலந்து கியூபா மாநாட்டில் கலந்து கொண்டனர்.
கியூபா மாநாட்டில் காசி ஆனந்தன் வாசித்த கவிதையில் சில வரிகள்-
“நாங்கள் இதழ்கள் உள்ள பறவைகள்
ஆனால் பாடமுடியவில்லை
நாங்கள் சிறகுகள் உள்ள பறவைகள்
ஆனால் பறக்கமுடியவில்லை
நாங்கள் அடிமைகள்………||
கியூபா மாநாட்டில் புலிகள் சார்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் இருந்த கையொப்பம் உமா மகேஸ்வரனுடையது.
இளைஞர் பேரவையினர் என்று இலங்கை அரசை ஏமாற்றிக் கூட்டணியினர் புலிகள் மூவரை 1978ல் கியூபாவுக்கு அனுப்பியது அகிம்சைக்கு ஆரத்தி எடுக்கத் தான் என்று சொன்னால் விழுந்து சிரிக்கத்தான் வேண்டும்.
கூட்டணித் தலைவர்கள் காந்தியின் அகிம்சையை மறந்தது பற்றி வருத்தமில்லை. ஆனால் காந்தி சொன்ன சத்தியத்தையும் மறந்துவிட்டுப் பேசுவது தான் வருத்தமாக இருக்கின்றது.
கட்சி மாறிய பட்சி
1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டணி அறிமுகப்படுத்திய வேட்பாளர்களில் ஒருவர் திரு.கனகரத்தினம்.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு அவரும் தமிழீழம் அமைக்க ஆணை கேட்டார்.
நல்ல விசயம்.தமிழ் ஈழத்தை அமையுங்கள் என்று கூட்டணியினரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தார்கள்  வாக்காளப் பெருமக்கள்.
கனகரத்தினமும் தெரிவானார். போராட்ட வரலாற்றில் அனுபவமும் ஈடுபாடும் உள்ள பலர் இருக்க கனகரை வேட்பாளராக நியமித்தபோதே அதிருப்தி எழுந்தது.
‘வடலி வளர்த்தவர்கள் பயனை அனுபவிப்பவர்கள் யாரோ’ என்ற கதையாக எம்.பி.பதவி கிடைத்தது கனகருக்கு. அவரிடம் பணம் இருந்தது. அது தான் தகுதி.
கூட்டணியில் ஊறி வளர்ந்த திரு.இராசதுரை வெற்றி பெறுவதைக் கூட அமுதரால் சகிக்கமுடியாதிருந்தது.
போட்டிக்கு காசி ஆனந்தனையும் மட்டக்களப்பில் நிறுத்தினார்.
இராசதுரை உதயசூரியன் சின்னத்திலும் காசி ஆனந்தன் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் போட்டியிட்டனர்.
அப்போது மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி.
நியாயமாக ஒரு தமிழரும் ஒரு முஸ்லிம் உறுப்பினருமாக இருவர் தெரிவாக வேண்டும்.
ஆனால் கூட்டணி உட்கட்சிப் பூசலால் முஸ்லிம்களை மறந்தது. இரண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் வெற்றி பெற்றது இராசதுரை தான்.
இராசதுரை தீவிரமாக இயங்கவில்லை என்ற குறை இளைஞர்களிடம் அப்போதிருந்தது உண்மை. ஆனால் இராசதுரை மீது தீவிரம் காணாது என்ற கோபம் கூட்டணிக்கு இருந்திருந்தால் கனகரத்தினம் என்ற போராட்ட அனுபவமற்ற ஒருவரை பொத்துவிலில் எப்படி நிறுத்த முடிந்தது?
தேர்தல் முடிந்தது. பொத்துவில் கனகர் குத்துக்கரணம் அடித்தார்.
கட்சியை வளர்த்திருந்தால் அல்லவா கட்சி விசுவாசம் இருந்திருக்கும்? தவறு கனகர் மீதல்லவே. தவறான ஒருவரை தெரிவு செய்தவர்கள் மீது தானே!
ஆனால் கூட்டணியினர் கனகர் துரோகி என்றார்கள்.
அப்போது கூட்டணியின் குரலாக வெளிவந்த ‘சுதந்திரன்’ பத்திரிகை தனது முன் பக்கத்தில் சவப்பெட்டிக்குள் கனகர் இருப்பது போல் கருத்துப்பட அவரது படத்தை வெளியிட்டது.
“பொத்துவில் கனகரத்தினம் குத்துக்கரணம் .ஐ.தே.கட்சியில் சேர்ந்துவிட்டார்|| என்ற செய்தி போட்டது சுதந்திரன்.
மன்னார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் திரு.சூசைதாசன்.
கனகர் கட்சி மாறிய பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது.சூசைதாசன் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் மேடையில் பாடியது இது:
“போகாதே போகாதே என் கனகா
பொல்லாத சொர்ப்பனம்
நான் கண்டேன்||
கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தார்கள்.சூசைதாசன் என்ன சொல்கிறார் என்று மக்கள் புரிந்துகொண்டனர்.
1978ம் ஆண்டு 28ஆம் திகதி காலையில் தினசரிகளின் நெற்றியில் ஒரு செய்தி.
“பொத்துவில் கனகருக்கு துப்பாக்கிச் சூடு!||
பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கனகரத்தினம் இனம் தெரியாத இரு இளைஞர்களால் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுடப்பட்டார்.
“திரு.கனகரத்தினத்திற்கு நெஞ்சிலும் வலது காதிலும் முதுகிலுமாக மூன்று சூடுகள் மட்டுமே பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது||
பத்திரிகைச் செய்திகளை படித்த மக்கள் அது கூட்டணி இளைஞர்களின் வேலை தான் என்று நினைத்துக் கொண்டனர்.
கூட்டணியினர் கண்டிப்பது என்பது மக்களைப் பொறுத்தவரை ஒரு புத்தசாலித்தனமான நடவடிக்கையாகவே கருதப்பட்டது. உண்மையும் அது தான்.
கனகர் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பங்கு கொண்டவர்கள் இருவர். ஒருவர் பிரபாகரன்;; மற்றவர் உமா மகேஸ்வரன்.
கனகரத்தினம் மீது வைத்த குறி தப்பியது.அவர் உயிர் தப்பிக் கொண்டார். எனினும் சூடுபட்ட காயங்கள் காரணமாக அவர் மரணமானார்.
உமா மகேஸ்வரன் சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் குறி தப்பியதாக புலிகள் தற்போது தமது உறுப்பினர்களுக்கு நடத்தும் வகுப்புக்களில் கூறி வருகின்றனர்.
பொலிசார் வலை விரித்துத் தேடினார்கள். பிரபா தப்பி யாழ்ப்பாணம் சென்றார். துப்பாக்கிப் பிரயோகத்தில் ஓர் உயரமான இளைஞர் சம்பந்தப்பட்டதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
அவர்கள் மாவை சேனாதிராசாவைப் பின் தொடர்ந்தார்கள். இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா உயரமாக இருந்தமையால் ஏற்பட்ட சந்தேகம் அது.
கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து பின்னர் பொலிசார் ஓரளவு விபரம் அறிந்தனர்.
பஸ்தியாம்பிள்ளை குழுவினர்
பொத்துவில் கனகர் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை வளைத்துப்  பிடிக்கவும் தீவிரவாத இளைஞர்களை மடக்கிப் பிடிக்கவும் யாழ்ப்பாணத்தில் ஒரு பொலிஸ் குழு தயாரானது.
அதன் தலைவர் சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை.
பஸ்தியாம்பிள்ளை தனது குழுவினருடன்07.04.78 அன்று ஒரு தேடுதல் வேட்டைக்குப் புறப்பட்டார்.
தாம் எங்கே போகிறோம் என்று சக அதிகாரிகளுக்கு அவர் கூறவில்லை.
அது ஏன் காரணம் இல்லாமல் இல்லை
தொடரும்..

No comments:

Post a Comment