அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 48

மூன்று தடவைகள் செய்யப்பட்ட ‘சுதந்திர ஈழப் பிரகடனம்’ : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48


“போர் நிறுத்தம்” மேலும் நீடிக்கப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நிறுவப்பட்டது. போர் நிறுத்த மீறல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன. பலவீனமடைந்துவிட்ட இயங்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருதார் அத்துலத் முதலி.   ‘இந்திய டூடே ‘ சஞ்சிகைக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது. “தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான காலெக்கெடு டிசம்பர் மாதம் அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை தொடரமாட்டோம்.“போர் நிறுத்தம்” மேலும் நீடிக்கப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நிறுவப்பட்டது. போர் நிறுத்த மீறல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன.
பலவீனமடைந்துவிட்ட இயங்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருதார் அத்துலத் முதலி.
ஜே.ஆரின் பேட்டி
‘இந்திய டூடே ‘ சஞ்சிகைக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
“தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான காலெக்கெடு டிசம்பர் மாதம் அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை தொடரமாட்டோம்.
இந்தியா 24 மணி நேரத்தில் சிறிலங்காவை கைப்பற்றி என்னைக் கைது செய்துவிடலாம். அப்படி நடந்தால் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழர்கள் பிரச்சனைக்குள்ளாக நேரிடும்”
யாழ்பாணத்தை கட்டுப்படுத்துவது கஷ்டமல்ல. அதற்கு முன்னர் மற்றப் பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.
யாழபாணக் குடாநாட்டுக்கு உணவு விநியோகத்தை தடை செய்வதன் மூலம் ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளை அழித்தொழித்து விடலாம்.” என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் ஜே.ஆர்.
இயக்கங்களின் திட்டம்
போர் நிறுத்தக் காலதோடு படையினரை முகாம்களுக்குள் முடக்கிவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் திட்டம் என்று முன்னரே கூறியிருந்தேன்.
ஆனால், யாழ் குடாநாட்டை தவிர ஏனைய பகுதிகளில் படையினர் திடீர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டே வந்தனர்.
சோதனை நடிவடிக்கைகளும் அடிக்கடி நடைபெற்றன.
படையினரின் போர் நிறுத்த மீறல்களை இயக்கங்கள் கண்டித்த போதும். போர் நிறுத்த மீறல்கள் நடைபெறுவதை அவை ஒருவகையில் விரும்பவும் செய்தன.
அப்படியானால்தான் போர் நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையையும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சமாதானத்தைத் தீர்வுக்கு எப்போதும் முன்வரக்கூடியவரல்ல என்பதை இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கு எப்படியாவது புரியவைத்துவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
சுருக்கமாகச் சொல்வதானால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றுமானால், அது இயக்கங்களுக்கு செய்தியாகிவிடும்.
அதனால்தான், போர் நிறுத்தத்தை தாங்கள் சரியாக கடைப்பிடிப்பதாகவும், படைகள் அதனை மீறிவருவதாகவும் சகல இயக்கங்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன.
குறிப்பாக இந்தியாவில் இருந்த இயக்கத் தலைமைகள் அதனைத் திறம்பட செய்துகொண்டிருந்தன.
இதேவேளை 1985 யூலை 8ம் திகதி திம்புவில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்திய அரசின் முயற்சியால் திம்புவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
1985 ஆகஸ்ட் 12ம் திகதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
இலங்கை அரசின் சார்பில் சமர்பிக்கப்பட்ட யோசனைகள் மாவட்ட சபைகள், மாகாண சபைகள் என்ற வட்டத்துக்குள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன.
வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதையோ அரசு தரப்பு ஒரேயடியாக நிராகரித்தது.
இந்தியாவை மீறி பேச்சுவார்த்தையை புறக்கணிப்பது எப்படி என்பதுதான் பிரச்சனை.
போர் நிறுத்தமும் -படையினரின் முற்றுகையும்
திடீர் முற்றுகை
வவுனியா நகரில் இருந்து 10மைல் தொலைவில் உள்ள இறம்பைக்குளம், தோணிக்கல், சூசைப்பிள்ளையார் குளம், கூடாமங்களம், மூன்று முறிப்பு ஆகியகிராமங்கள் சந்தடிகள் அடங்கித் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தன.
திடீரென்று பல வாகனங்கள் வரும் இரைச்சல், நாய்கள் குரைக்கத் தொடங்கின.
சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் திகைத்துப் போனார்கள். 50க்கு மேற்பட்ட ட்ரக்குகளிலும், ஜீப்புககளிலும், கவச வாகங்களிலும் 400க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கிரமங்களுக்குள் புகுந்தனர்.
வேட்டுச் சந்தங்கள் விண்ணைக் கிழித்தன.
அவற்றையும்மீறி அவலச் சந்தங்கள் எங்கும் ஒலித்தன.
வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காடுகளுக்குள்ளும், பற்றைகளுக்குள்ளும் ஓடிப் பதுங்கிக் கொண்டவர்கள் போக, வீடகளில் இருந்தவர்கள் வேட்டுகளுக்குப் பலியானார்கள்.
குடிசைகள் பல எரிக்கப்பட்டன.
இரண்டு நாட்களாக ஒரே அமளி. மூன்றாம் நாள் படையினர் வெளியேறினார்கள்.
40 உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டன.
ஏறக்குறைய 120 பேர்வரை கொல்லப்பட்டனர்.10வயதிற்குட்பட்ட எட்டுக் குழந்தைகளும் பலியானவர்களில் அடக்கம்.
வவுனியாவில் சர்வோதய இயக்கத்திற்குப் பொறுப்பாக இருந்தவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது மனைவி,மகள், தாய், தந்தை ஆகியோரும் விட்டுவைக்கப்படவில்லை. அனைவரும் கொல்லப்பட்டனர்.
திருமலையில்…
திருக்கோணமலையிலும் படையினரின் நடவடிக்கைகள் விசுவரூபமெடுத்தன.
பன்குளம்,இறணைக்கேணி,சாம்பல்தீவு ஆகிய இடங்களில் சாதாரணமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
குடியிருப்புக்களும் தாக்கப்பட்டன.
சாம்பல் தீவில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் வீதிகளுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பன்குளம் என்னும் ஊரில் ஊர்காவல் படையினர் கத்தி,வாள் போன்ற ஆயுதங்களோடு தமிழ் மக்களின் வீட்டுகளுக்குள் புகுந்து தாக்கினார்கள்.
திருமலை மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாட்களில் நூறுபேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் அகதிகளானார்கள்.
சென்னையில் நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) தலைவாகள் கூடி ஆராய்ந்தனர்.
திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாக வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்தையிலிருந்து வெளியேறும் முடிவை புளொட் அமைப்பும் ஏற்றுக்கொண்டது. கூட்டணியும் உடன்பட்டது.
உடனடியாக வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்று திம்புப் பேச்சில் கலந்து கொண்ட இந்திய அரசு பிரதிநிதிகள் இயக்கப்பிரதிகளிடம் வலியுறுத்தினார்கள்,
அதனை சென்னையில் உள்ள தமது தலைவர்களுக்கு தெரிவித்தனர் இயக்க பிரதிநிதிகள்.
“தலைமையின் உத்தரவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுத் திரும்பி வாருங்கள். அங்கு தொடர்ந்து நிற்கவேண்டாம்” என்று சென்னையில் இருந்த தலைவாகள் கண்டிப்பாகக் கூறிவிட்டனர்.
வரதராஜப்பெருமாள்
முதல் முறிவு
சகல பிரதிநிதிகளும் மூட்டை முடிச்சுக்களோடு திரும்ப ஆயத்தமானார்கள். ஒரே ஒருவர் மட்டும் சற்றுபின்னடித்தார்.
அவாதான் வரதராஜப்பெருமாள். ஈ.பி.ஆர் எல்.எஃப் பிரதிநிதிகளும் வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் ஆகியோர் திம்பு பேச்சில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய பிரதிநிதிகள் கூறும்போது முகத்தை முறித்துக்கொண்டு உடனே திரும்புவது முறையல்ல என்பதே வரதராஜப் பெருமாளின் வாதம்
பத்மநாபா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரதராஜப்பெருமாளை உடனடியாக திரும்புமாறு கூறிவிட்டார்
எப்படியோ ஈழப்போராளி அமைப்புக்கள் முதன்முதலாக இலங்கை அரசோடு நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
திம்புப் பேச்சுத்தீர்வுக்கான பாதையைத் திறக்கும் என்று ஆரூடம் சொன்னவர்களும், வரவேற்றவர்களும் வாயடைத்துப்போனார்கள்.
திம்பு பேச்சுவார்த்தை முறிந்தபின்னர் விடுதலைப் புலிகளது தலைவர் வே.பிரபாகரன் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு ஏன் தாம் உடன்பட்டோம் என்பதை அவர் விளக்கியிருந்தார்.
அந்த அறிக்கையிலிருந்து ஒரு பகுதி இது.
“புதிய பாரதபிரதமரின் நேர்மையான நல்லெண்ண முயற்சிகளுக்கு நாம் எவ்வகையிலும் குந்தகமாக இருக்கவில்லை.
ஜெயவர்த்தனா அரசின் சாவாதிகாரக் கொடுங்கோன்மை ஆட்சியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவதோடு, தமிழர் பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசுக்கு எவ்வித விருப்பமம் இருக்கவில்லை. என்பதை பகிரங்கப்படுத்தவும் எமக்கு ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.
ஆகவே நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கினோம். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம்.
நாம் தீர்க்க தரிசனத்துடன் அனுமானித்தபடி தமிழீழ மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தழுவிய எந்தவொரு உருப்படியான தீர்வுத்திட்டமும் சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை என்ற வலைவிரிப்பில் எம்மை சிக்கவைத்து, சுதந்திர வீரர்களான எம்மை அடிமைகளாக்கி அழித்தொழிப்பதுதான் ஜெயவர்்த்தனாவின் சூத்திரதாரத் திட்டம்.
இந்த பொறிகிடங்கில் விழுந்துவிட விடுதலைப் புலிகள் தயாராக இல்லை.
பேச்சுவார்தை என்ற நாடகத்தில் போலி வேடம் புனைந்துகொண்டு, அதே சமயம் தமிழீழத்தில் பயங்கரமான இனக்கொலையை கட்டவிழ்த்து விட்டது சிறீலங்கா அரசு.” என்று குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன்.
ராஜீவுக்கு பாராட்டு
தனது அறிக்கையில் இந்திய ராஜீவ் காந்திக்கும் புகழாரம் சூட்டியிருந்தார். பிரபாகரன். அது இதுதான்.
“ஜெயவர்த்தனா ஒரு சூத்திரதார அரசியல் வாதி என்பதையும் நம்பமுடியாத ஏமாற்றுப் பேர்வழி என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டவர் முன்னாள் பாரதப்பிரதமர் திருமதி காந்தி.
புதிய பாராதப் பிரதமர் (ராஜீவ் காந்தி) சமாதானப்பிரியர். தமிழரின் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறைகொண்டவர். தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்று விரும்புபவர்.
அவரது நற்போக்கையும், நல்லெண்ண முயற்சிகளையும் ஆதரிப்பது போல ஜெயவர்த்தனா அரசு நடிக்கிறது.
இந்திய அரசை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக முடிந்துவிடுவதல் ஈடுபடுகிறது.
ஜெயவர்த்தனாவின் இந்த ராஜதந்திர சூழ்ச்சியை இந்திய அரசும் வெகுவிரைவில் புரிந்து கொள்ளும் என்பதே எமது நம்பிக்கை.

தமிழீழ தனியரசே எமது அசைக்க முடியாத இலச்சியம். இந்த இலட்சியத்தை அடையவே நாம் உயிரை அர்ப்பணித்து போராடிவருகிறோம்.
வேறு எந்த மாற்றுத் திட்டமும் எமது மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையமாட்டாது என்பதே எமது கருத்து.
உலகத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்துவரும் பாரதநாடு ஈழத் தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இந்திய மக்களின் அங்கீகாரம் எமக்கு கிட்ட காலம் பிடிக்கலாம். ஆயினும் நாம் அதற்காக போராடிக்கொண்டேயிருப்போம்.
அதுதான் பிரபாகரன் விடுத்த அறிக்கையின் முக்கிய பகுதிகள்.
எழுத்தாளர் எங்கே?
போர் நிறுத்தம், பேச்சுவார்த்தையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த போது சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.
இலங்கையிலிருந்து வெளியேறி சென்னையில் தங்கியிருந்தவர் காவலூர் ஜெகநாதன்.
சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை மண்வாசனையோடு எழுதிப் பிரபலமானவர்.
காவலூர் என்பது யாழ்பாணத்திலுள்ள ஊர்காவத்துறையைக் குறிக்கும். ஜெகநாதனின் சொந்தஊர் அதுதான்.
சென்னையில் இருந்த காவலூர் ஜெகநாதனை இரவோடு இரவாக சில இளைஞர்கள் அழைத்துப் போனார்கள். அதன்பின்னர் காவலூர் ஜெகநாதன் வீடு திரும்பவில்லை.
அவரது நண்பர்களும் உறவினர்களும் சென்னையில் உள்ள இயக்க அலுவலகங்கள் தோறும் விசாரித்துப் பார்த்தார்கள். பயனில்லை.
நான்கு இயக்கக் கூட்டமைபுக் கூட்டத்தில் காவலூர் ஜெயகாந்தனை பற்றிப்பேச்சு எழுந்தது.
ஈரோஸ் பாலகுமார் சொன்னது
“அவர் மூலம்தான் சென்னையில் உள்ள இயக்கங்களின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்குப்போவதாக நாம் அறிந்திருக்கிறோம்.
தனது எழுத்துலகத் தொடர்புகளை பயன்படுத்தி தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தார்.
சென்னையிலுள்ள இலங்கைத் தூரகம் மூலமாக பணமும் கிடைத்து வந்தது. அவர் ஒரு உளவாளிதான் ஆனால் நாம் அவரை கடத்தவில்லை.” அதுதான் ஈரோஸ் சார்பாக பாலகுமார் சொன்ன விளக்கம்.
பின்னர் உண்மை தெரியவந்தது. காவலுர்ர் ஜெகநாதனை பிடித்துச் சென்று காதும்,காதும் வைத்தது போலக் கதையை முடித்தது யார் தெரியுமா??
ஈரோஸ் இயக்கம்தான்.
பாலமும்-இயக்கமும்
மற்றொரு சம்பவம் 1985 ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழீழ அரசு இயங்கத் தொடங்கும் என்று அறிவித்தது ஒரு குழு.
அதன் பெயர், ஈழப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பெயர் பாலசுப்பிரமணியம்.
ரோகன விஜயவீராவின் கூட்டாளியாக ஜே.வி.பி. அமைப்பில் இருந்த பாலசுப்பிரமணியத்திற்கு தானும் ஒரு தலைவராகும் ஆசைவந்துவிட்டது.
தானும் ஒரு இயக்கம் என்று புறப்பட்டார்.
இயக்கம் என்றால் ஒரு தாக்குதலாவது நடத்தவேண்டுமல்லவா.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது.. தென்னிலங்கையில் ஒரு பாலம் பழுதடைந்து உடைந்துவிட்டது.(இடம் நினைவில்லை)
பாலம் உடைந்த செய்தியை கேள்விப்பட்ட பாலசுப்பிரமணியம் எடுத்தர்ர் லெட்டர் ஹெட்டை ” பாலத்தை உடைத்து தகர்த்தவாகள் நாமே” என்று உரிமை கோரிவிட்டார்.
சில பத்திரிகைகளும் அதனை வெளியிட்டுத் தொலைத்ததுதான் வேடிக்கை.
அந்தப் பாலசுப்பிரமணியம் தான் “1985 நவம்பரில் சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யப்படும். சுதந்திர ஈழ அரசு இயங்கும்” என்று அறிவித்திருந்தார்.
அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
1982 ஆண்டில் யாழ்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி முன்பாக தமிழீழ விடுதலை அணியும் தமிழீழ பிரகடனம் செய்திருந்தது.
பாலசுப்பிரமணியத்தின் ஈழப்பிரகடனம் இரண்டாவதாகும்.
மூன்றாவது ஈழப்பிரகடனம் 1990 இல் ஈ.பி.ஆர். எல. எஃப் இயக்கத்தால் செய்யப்பட்டது. மூன்று ஈழப்பிரகடனங்களுமே புஸ்வாணமாகிப் போயின.
உள்மோதல்கள்
1985 இன் பிற்பகுயில் ஈ.பி.ஆர். எல் எஃப்,புளொட், ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்குள் உள்பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன.
ஈ.பி.ஆர். எல் எஃப் அமைப்புக்குள் மத்திய குழுவுக்கும், இரண்டாம் கட்டத்தலைமைக்கும் இடையே விரிசல்கள் எழத்தொடங்கின.
புளொட் அமைபிலும் இரண்டாம் கட்டத் தலைமை தமது தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தது.
இந்த இரண்டு அமைப்புக்குள்ளும் இரண்டாம் கட்டத் தலைமையினர்தான் இயங்கும் சக்திகளாக இருந்தனர்.
அரசியல் பிரச்சாரம், இராணுவ வேலைகள் போன்றவை இரண்டாம் கட்டத் தலைமைகளாலேயே முன்வைக்கப்பட்டு வந்தன.
புளொட்டை பொறுத்தவரை அதன் தலைவர் உமாமகேஸ்வரன் தாக்குதல் நடவடிக்கைகள் சிலவற்றில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தார்.
ஈ.பி.ஆர். எல் எஃப் தலைவர் பத்மநாபா இராணுவ நடவடிக்கைள் எதிலும் நேரடியாகப் பங்குகொள்ளாமலேயே அரசியல்-இராணுவ இயக்கத் தலைவராக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஈரோஸ் இயக்கத்தலைமையும் உத்தரவுகளை போடுவதோடு நின்று கொண்டது.
இயக்க வேலைகளை முன்னெடுத்த இரண்டாம் கட்டத் தலைமைகள் தமது தலைவர்களின் வழிகாட்டும் திறமை குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள்.
புலிகளைத் தவிர, ஏனைய இயக்கங்கள் உட்கட்சி ஜெனநாயகம் பற்றி பேசிவந்தனர்.
அதே இயக்கங்களுக்குள் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டபோது உட்கட்சி ஜனநாயகம் காற்றில் பறந்தது.
புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் தமது இயக்க உறுப்பினர்களையே உளவு பார்க்க தனது உளவுப்பிரிவை பயன்படுத்தினார்.
இந்தியாவில் இருந்த பயிற்சி முகாம்களில் பல உறுப்பினர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்று சந்தேகப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள்.
ஈரோஸ் இயக்கத்துக்குள்ளும், ஈ.பி.ஆர். எல் எஃப் இயக்கத்துக்குள்ளும் பிரச்சனை வேறு ஒரு கோணத்தில் தோன்றியிருந்தது.

No comments:

Post a Comment