அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 36

புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தமது கவச வண்டிகள் சகிதம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. உண்மையில் அக்காலகட்டத்தில் கவச வாகனங்களைப் பயன்படுத்தி மோதல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை. இராணுவம் குறித்து பயம் கலந்த பிரமையை ஏற்படுத்துவதற்காகவே கவச வாகனங்கள் சகிதம் ரோந்துகள் நடைபெறுவதுண்டு. அப்போதெல்லாம் புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புக்களும் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலத்தில் மட்டுமே இருந்தனர். இயக்கங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் முகாம்கள் காவலரண்கள் என்பவற்றை நிறுவி செயற்படவும் ஆரம்பிக்கவில்லை. நேரடி மோதல்களிலும் பெரிதாக ஈடுபடும் பலம் இருக்கவில்லை. கெரில்லா தாக்குதல் நடத்திகிறவர்கள் மீது கவச வாகன தாக்குதல்கள் நடத்துவது பெரிய பயனை ஏற்படுத்தாது. முக்கியமாக டாங்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது. (தொடர் கட்டுரை)


இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு.
இராணுவ ரீதியில் அவரதுசெயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாக இருந்தமையால் பிரபலமானவராக அறியப்பட்டார்.
கவச வாகனங்கள்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தமது கவச வண்டிகள் சகிதம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. உண்மையில் அக்காலகட்டத்தில் கவச வாகனங்களைப் பயன்படுத்தி மோதல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை.
இராணுவம் குறித்து பயம் கலந்த பிரமையை ஏற்படுத்துவதற்காகவே கவச வாகனங்கள் சகிதம் ரோந்துகள் நடைபெறுவதுண்டு.
அப்போதெல்லாம் புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புக்களும் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலத்தில் மட்டுமே இருந்தனர்.
இயக்கங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் முகாம்கள் காவலரண்கள் என்பவற்றை நிறுவி செயற்படவும் ஆரம்பிக்கவில்லை. நேரடி மோதல்களிலும் பெரிதாக ஈடுபடும் பலம் இருக்கவில்லை.
கெரில்லா தாக்குதல் நடத்திகிறவர்கள் மீது கவச வாகன தாக்குதல்கள் நடத்துவது பெரிய பயனை ஏற்படுத்தாது.
முக்கியமாக டாங்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது.
ஆடுகள் சிக்கின
உதாரணத்திற்காக ஒரு சம்பவம் கூறுகிறேன்.
1983 மார்ச் 4ம் திகதி பரந்தனுக்கருகே உமையாள்புரத்தில் புலிகள் ஒரு தாக்குதல் நடத்தியது பற்றி முன்னரே கூறியிருந்தேன்.
இத் தாக்குதலுக்காக நிலகண்ணி வெடிகளை புதைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.
கண்ணிவெடிகளைக் கையாள்வதில் பூரண தேர்ச்சி பெறாத காலகட்டம் அது.
கண்ணிவெடிகளை புதைத்திருந்த இடத்திற்கு அருகே இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
வாகன இரச்சலுக்குப் பயந்து ஆட்டுக்குட்டிகள் மிரண்டு ஓடத்தொடங்கின. ஓடிய ஆடுகள் கண்ணிவெடிகளை மிதித்தபோது அவை வெடித்து விட்டன.
எதிர்பாராத இச்சம்பவத்தால் புலிகளில் பத்துப்பேர் கொண்ட குழு திகைத்தபோது இராணும் கவச வாகன்கள் துப்பாக்கி ரவைகளை பொழிந்தன.
வீதிக்கு அருகே தண்டவாளம். அதன் இரு புறமும் வெட்டை வெளி. கிட்டுவின் கையில் ஜி.3.ரகத்துப்பாக்கி இருந்த்து.
கவச வாகனத்தை நோக்கி கிட்டு சுடத்தொடங்கினார். சாரதி காயமடைந்து போக கவச வாகனம் சரிந்து கவிழ்த்து.
இதன் பின்னரே கிட்டுவை இயக்கத்தின் தாக்குல் பிரிவின் இரண்டாவது பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்திருந்தார்.
இனி 84 இல் நடந்த தாக்குதலுக்கு செல்லுவோம்.
குறியில் கேணல்
கேணல் ஆரியப் பெருமவும் இரண்டு கவச வாகனங்கள் சகிதம் ரோந்து சென்று கொண்டிருந்தார். கவச வாகனங்களுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த ஜீப்பொன்றில் அவர் அமர்ந்திருந்தார்.
கட்டுவன் தெல்லிப்பளை வீதியில் நிலக்கண்ணிவெடிகளை புதைத்து வைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.
முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப்வண்டி நிலக்கண்ணியில் சிக்கியது. பின்னால் வந்த கவச வாகனங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
கேணல் ஆரியப் பெரும உட்பட எட்டு இராணுவத்தினர் அந்த நிலகண்ணி வெடித்தாக்குதலில் பலியானார்கள்.
கப்பரன் பண்டிதர்,
பண்டிதர், கிட்டு ஆகியோரும் புலிகளின் தரப்பில் அத்தாக்குதலில் பங்கு கொண்டனர்.
யாழ் பிராந்தியத்திற்கு புலிகளின் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் பண்டிதர்.
கேணல் ஆரிய பெரும குழுவினர் மீது தாக்குதல் நடந்த்து 19.11.84 இல். தாக்குதலில் பலியான ஆரிய பெருமவுக்கு ஜே. ஆர்.ஜயவர்த்தனா பிரிகேடியர் பதவி வழங்கி கௌரவித்தார்.
தொடர் தாக்குதல்
இத் தாக்குதல் நடவடிக்கை வடக்கில் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் யாழ் குடா நாட்டில் இரண்டு நிலக்கண்ணி வெடித் தாக்குதல்கள் புலிகளால் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தொலைவில் உள்ள அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒரு நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று நாசமானது.
ஒன்பது இராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டனர். மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர்.
2.11.84 அன்று தொண்டமானாறு பலாலி வீதியில் இராணுவ கவசவண்டி ஒன்று புலிகளின் கண்ணிவெடியில் சிக்கியது. இராணுவத்தினர் ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
இலங்கை நிலவரங்கள் தொடர்பாக வெளியுலகம் பொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றை தெரியப்படுத்திவிட்டு மேலே தொடரலாம்.
“நீயூஸ் வீக் பார்வையில்”
அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படும் ‘’நியூஸ் வீக்” சஞ்சிகை வெளியிட்ட விமர்சனத்தின் ஒரு பகுதி இது.
“கொல்லப்படும் தமிழர்களில் மிகச் சிலரைத்தவிர ஏனையோர் பயங்கர வாதிகளே” என்று அரசாங்கம் கூறுவதை சிங்கள மக்களில் பலர் கூட நம்ப மறுக்கின்றார்கள்.
இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தி வருகிறது.
இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும், சிங்களவர்களும் தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் விரைவாகத் தீரும் என்னும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். {நியுஸ் வீக் 27.8.84}
ஐ.நா.வில் பேச்சு
இனப்பாதுகாப்பு தொடர்பாக ஆராய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு குழு இருக்கிறது, அக் குழுவின் செயற்குழு 21.8.84. அன்று ஜெனீவாவில் கூடியது.
இக்குழுவில் இந்தியாவின் உறுப்பினர் சி.எம்.சி.பண்டாரே.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார் பண்டாரே.
திரு.பண்டாரே அங்கு பேசியதில் முக்கியமான பகுதிகள் இவை-
” எனது கருத்துப்படி தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தவில்லை.
தமிழர்களுக்கு எதிரான வன்முறை என்பது இலங்கை அரசின் நேரடி நடவடிக்கையாகிவிட்டது. இதற்கே அரசு படைகளை பயன்படுத்துகிறது.
அரச பயங்கரவாதத்தை தார்மீக ரீதியில் நியாயப்படுத்தவே முடியாது. சமாதான- சாத்வீக வழிகளில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும். 
அத்தீாவு தமிழ் மக்களை பாதுகாக்பதாகவும், மறுபடியும் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்ப்பதாகவும் அமைய வேண்டும.” அது இந்திய பிரதிநிதியின் பேச்சு.
“பிளிட்ஸ்” பாச்சல்
இந்தியாவின் பிரபலமான முற்போக்கு பத்திரிகையான பிளிட்ஸ் (BLITZ) 18.08.84 எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி இது
“சாதாரணக் குடிமக்களுக்கு எதிராகத் தமிழர்வாழும் வட இலங்கையில் இராணுவமும் கடற்படையும் சேர்ந்து நடத்திய வன்செயல்களால் உயிரிழந்தவர்கள் பல நூற்றுக்கணக்கானோர்.
அதே சமயம் தமிழ் பகுதிகள் பல பேய்கள் நடமாடும் வெட்டவெளிக் காடுகள் ஆக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இராணுவ டாங்குகளும், கவச வண்டிகளும் கிராமங்களை தரைமட்டமாக்கி உள்ளன.
தனது சொந்தக் குடிமக்களையே சிறீலங்கா அரசு குண்டுவீசி அழித்துள்ளது.
பஞ்சாயில் இடம்பெற்ற பயங்கரவாதம் பிந்திரன்வாலே கூட்டத்தினால் பின்பற்றப்பட்டது. இலங்கையிலோ பயங்கரவாதத்தில் அரசாங்கமே ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு கடும் விமர்சனம் வெளியிட்டிருந்தது. ‘பிளிட்ஸ்’ பத்திரிகை. வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் வில்லியம் கௌயர் எழுதிய குறிப்பில் படைகளது நடவடிக்கைகள் பழிவாங்கும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
அவரது குறிப்பிலிருந்து ஒரு பகுதி இது.
இவையெல்லாம் 1984 ஆகஸ்ட் செப்டம்பர் மாத காலத்தில் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளையடுத்து எழுந்த விமர்சனங்களாகும்.
இரகசிய வானொலி
இக்கால கட்டத்தில் புளொட் அமைப்பினரால் இரகசிய வானொலிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து இயங்கிய அந்த வானொலிச் சேவையின் பெயர் “தமிழீழத்தின் குரல்”
சிங்களத்திலும் ‘தமிழீழத்தின் குரல்‘ ஒலிபரப்பப்பட்டது. சிங்கள மக்கள் பலர் அந்த ஒலிபரப்பைக் கேட்டு வந்தனர். தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசவும் பட்டது.
‘தமிழீழத்தின் குரல்’ ஒலிபரப்பைக் கேட்டு வந்தவர்களில் முக்கியமான ஒருவர் அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசா.
இலங்யின் முதலாவது இரகசிய வானொலி சேவை அதுதான்.
இதன்பின்கர்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரால் தமிழ் நாட்டிலிருந்து “ஈழவானொலி”சேவை ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது வடக்கில் புலிகளால் இரகசிய வானொலி ஒலிபரப்பு நடத்தப்பட்டு வருகிறது. “புலிகளின் குரல்” என்பது அதன் பெயர்.
பாதுகாப்பு நிதி
தேசிய பாதுகாப்பு நிதி திரட்டுவதில் அமைச்சர் அத்துலத்முதலி தீவிரமாயிருந்தார். இதனையடுத்து புலிகள் தாமும் தேசிய பாதுகாப்பு நிதி திரட்டப’போவதாக அறிவித்தனர்.
“தமிழீழ தேசியப் பாதுகாப்பு நிதி” என்று தமது நிதிதிரட்டலுக்கு பெயர் சூட்டிய புலிகள் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் நிதிகோரி வோண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக பிரபாகரனால் பிரத்தியோக வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டது.
அந்த வேண்டுகோளில் பிரபா வெளியிட்ட சில கருத்துக்கள் முக்கியமானவை,
வடபுலப் போரில் இன்றுள்ள நிலவரத்தில் பிரபாவின் மனநிலை எப்படியிருக்கும் என்றும் ஊகிக்கவும் அந்தக் கருத்துக்களைத் தொிந்து கொள்ளலாம்.
அரசியல் தொடருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை போர்விமானம்…… வந்து மன்னிக்கவும் போர்விமானம் பற்றிய தகவல் வந்து ஆக்கிரமித்து விட்டது.

No comments:

Post a Comment