அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 34

பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற போராளிகள்: துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34)


1984 செப்டம்பர் 10 ஆம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கிறது செம்மலைக்கிராமம் அங்கு புலிகளின் தாக்குதல் பிரிவொன்று அதிரடித் தாக்குதலுக்கு தயாரானது. அந்த பிரிவில் 16பேர் இருந்தார்கள். முல்லைதீவிலிருந்து செம்மலைக்கு ஊடாக செல்வதுதான் முல்லைதீவு கொக்கிளாய் பிரதான பாதை. பிரதான பாதையில் புலிகள் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துவிட்டுக் காத்திருந்ததததனர். நேரம். காலை 10-15 மணி. ஒரு டிரக் வண்டி, இரண்டு ஜீப் வண்டிகள் சகிதம் இராணுவ அணி பிரதான பாதையில் வரத்தொடங்கியது. நிலக்கண்ணி புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தது ஜீப் வண்டி. (தொடர் கட்டுரை)


முல்லைதீவுப் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஜே.ஆர் அரசாங்க காலத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டன.
குடியேற்றங்களுக்கு பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்ட வகையில் ஒரு வலைபின்னல் உருவாக்கப்படும்.
படிப்படியாக குடியேற்றம் விரிவடையும். இராணுவ உதவியோடு தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்படும.
அதனால் தமது சொந்தக் கிராமங்களை விட்டு தமிழ் மக்கள் மெல்ல மெல்ல வெளியேற தொடங்கினர்.
திட்டமிட்ட குடியேற்றங்களின் நோக்கம் அதுதான்.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம். தமிழ் மக்களுக்கு என்று ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பே இல்லாமல் செய்துவிட்டால் தொல்லையில்லையல்லவா.
முல்லையில் குடியேற்றம்
அது தவிர முல்லைதீவு கடல் வளம். வனவளம். வயல் வளம் உள்ள பூமி.
மிகப்பிரதானமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து நிற்கும் இதயம் போன்ற பகுதி.
அதனால் முல்லைதீவை சுருட்டிக்கொள்ளக் கூடிய குடியேற்ற திட்டங்களை ஜே.ஆர்.அரசு முடுக்கிவிட்டிருந்தது.
1984இல் சிங்கள-தமிழ் மீனவர்கள் மத்தியில் முல்லைத்தீவில் பிரச்சனைகள் ஏற்பட்டன.
தமிழ் மீனவர்களின் வலைகளும் வள்ளங்களும் சிங்கள மீனவர்களால் அழிக்கப்பட்டன.
படையினரின் ஆசீர்வாதத்தோடு தான் அவை நடைபெற்றன.
முல்லைத்தீவு இராணுவ முகாம்தான் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பு அரணாக செயற்பட்டது.
முல்லைத்தீவில் நடந்த மின்னல் தாக்குதல்.
நிலக்கண்ணிகள்
1984 செப்டம்பர் 10 ஆம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கிறது செம்மலைக்கிராமம்
அங்கு புலிகளின் தாக்குதல் பிரிவொன்று அதிரடித் தாக்குதலுக்கு தயாரானது.
அந்த பிரிவில் 16பேர் இருந்தார்கள்.
முல்லைதீவிலிருந்து செம்மலைக்கு ஊடாக செல்வதுதான் முல்லைதீவு கொக்கிளாய் பிரதான பாதை.
பிரதான பாதையில் புலிகள் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துவிட்டுக் காத்திருந்ததததனர்.
நேரம். காலை 10-15 மணி.
ஒரு டிரக் வண்டி, இரண்டு ஜீப் வண்டிகள் சகிதம் இராணுவ அணி பிரதான பாதையில் வரத்தொடங்கியது.
நிலக்கண்ணி புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தது ஜீப் வண்டி.
நிலக்கண்ணி வெடிக்கவில்லை.
ஜீப் தப்பிவிட்டது.
இரண்டாவது ஜீப்வண்டியும் அந்த இடத்தை கடந்து கொண்டிருந்த போது நிலக்கண்ணி வெடித்தது.
இரண்டாவது ஜீப் வண்டி சிதறியது.
ஜீப் வண்டி சிதறிய சத்தத்திலிருந்து முன்னால் சென்ற ஜீப்பில் இருந்தவர்களுக்கு விசியம் புரிந்து விட்டது.
அந்த ஜீப் வண்டி வேகமாக சென்று மறைந்துவிட்டது.
பின்னால் வந்த டிரக் வண்டி சாரதி வண்டியை நிறுத்திவிட்டார்.
அதிலிருந்து குதித்த இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.
மோதல் தொடர்ந்தது. நான்கு இராணுவத்தினர் பலியானார்கள். புலிகள் தரப்பில் இழப்பு எதுவுமில்லை.
முல்லைதீவு இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் விரைந்து வருவதற்கிடையில் புலிகள் அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றனர்.

இத்தாக்குதல் நடவடிக்கைக்கு மாத்தையாவே பொறுப்பாக இருந்தார்.
தாக்குதல் நடைபெற்ற பின்னர் முல்லைதீவில் குடியேறியிருந்த சிங்கள மீனவ குடும்பங்கள் பல தமது சொந்த ஊருக்குத் திரும்பி சென்றனர்.
மீண்டும் ஒரு முயற்சி
1984 இல் ஈ.பி.ஆர்.எல்.எப் நடத்திய தாக்குதல்களில் ஒன்று கிளிநெச்சி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்.
ரெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியிருந்தமையால், நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டோமே என்று ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலைப்படையின் யாழ். உறுப்பினர்களுக்கு வருத்தம்.
காரைநகர் கடற்படை முகாம் மீது தனது பொறுப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது தாக்குதல் தோல்வியில் முடிந்தமையால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு கவலை.
கிளிநொச்சியில் ஒரு சறுக்கல்
அதனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை தாக்கி அழிப்பது என்று திட்டமிட்டார்கள்.
தகவல்கள் திரட்டப்பட்டன. கவசவாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டது.
கவச வாகனத்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்தபடி பொலிஸ் நிலையத்துக்குள் முதலாவது அணி பிரவேசிக்கவேண்டும.
அதன் பின்னர் ஏனைய தாக்குதல் பிரிவுகள் செல்லவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. திட்டம் சரி.
தாக்குதல் நடத்த அணிகள் விரைந்தன.கவச வாகனம் உள்ளே செல்ல முடியவில்லை.
பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் உளவு இயயந்திரம் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தது.
அதனால் தான் கவச வாகனம் உள்ளளே செல்ல வழியின்றி போனது. பொலிசார் உஷாராகி துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.
இதேவேளை பொலிஸ் நிலையம் மீது போராளிகள் மோட்டார் ஷெல் தாக்குதலும் நடத்தினர்.
மோட்டார் ஷெல்கள் நிலைய வளாகத்துக்குள் இருந்த மரங்களிலும், கிளைகளிலும் பட்டு குறிதவறி விழுந்து வெடித்தன.
தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்புமாறு கூறிவிட்டார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு 1984.ல் இரண்டாவது பெரிய தோல்வி அது.
சுவையான சிக்கல்
இத்தாக்குதல் தொடர்பாக எழுந்த ஒரு சுவையான சிக்கல்.
கிளிநொசிசியில் தாக்குதல் நடந்த செய்தி தமிழ் நாட்டில் சென்னையில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்துக்கு எட்டிவிட்டது.
சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் ஈழ மக்கள் தகவல் தொடர்பு நிலையம் (EPIC) எனும் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இலங்கையில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் வெளியுலகுக்கு தெரிவிப்பதில் அது முக்கிய பங்காற்றியது.
அதற்கு பொறுப்பாக இருந்தவர் மித்திரன் (தற்போது விலகி வெளிநாட்டில் இருக்கிறார்)
அந்த நிறுவனத்தால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட செய்தி ஏடு “ஈழச் செய்தி”.
மாதாந்தம் பத்தாயிரம் பிரதிகள்வரை அப்போது தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பொறுப்பாளராக இருந்தவர் ரமேஷ்.
தமிழ் நாட்டிலிருந்து இலங்கை செய்திகளை வெளியிட்டு வந்த இன்னொரு நிறுவனம் தமிழ் தகவல் தொடர்பு மையம்.
இதன் முக்கியஸ்தராக இருந்து கஸ்ரப்பட்டவர் எஸ்.டி.சிவநாயம். மற்றவர் மகேஸ்வரி வேலாயும்.
எந்த இயக்கச் சார்பும் இல்லாமல் ஓரளவு சுதந்திரமாக இயங்கியது தமிழ் தகவல் தொடர்பு மையம்(TIC)
சிறு சந்தேகம்
கிளிநொச்சி பொலிஸ் நிலைய தாக்குதல் செய்தியை ஈழமக்கள் தகவல் தொடாபு நிலையம் உடனடியாக சகல இந்திய பத்திரிகைகள், மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டது.
இச் செய்தி அப்போது சென்னையில் இருந்த ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்துக்கும் கிடைத்துவிட்டது.
உடனடியாக அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபாவோடு தொடர்பு கொண்டார்.
“கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை நாம் தாக்குவதாக இருந்தது. நான் அனுமதியும் கொடுத்திருந்தேன்.
நீங்கள் தாக்கியதாக செய்தி கொடுத்துள்ளீர்கள்.
எதற்கும் ஒருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள்.
நானும் எனது ஆட்களுடன் தொடர்பு கொண்டு எனது ஆட்களிடம் கேட்கிறேன்” என்று சொன்னார் சிறீ.
இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப் குழப்பம்.
ரெலோ தாக்கியிருந்தால் பெரிய அவமானம்.
செய்தி கொடுத்தாகிவிட்டதல்லவா.
மறுநாள் யாழ்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் தாக்குதல் நடத்திய செய்தி சென்னைக்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர்தான் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் பிற்கு நிம்மதி.
சிறியும் யாழ்பாணத்தில் இருந்து உண்மையை அறிந்து கொண்டார்.
அந்த செய்தி மட்டும் தவறாக அமைந்திருந்தால் ஈழ மக்கள் தகவல் தொடர்பு நிலையம் (EPIC) அதன் பின்னர் மூடப்பட்டிருக்க வேண்டியதுதான்.

மீண்டும் பhலஸ்த்தீனத்தில்
பாலஸ்தீனப் போராளிகளிடம் தமிழ் இயக்கப் போராளிகள் பயிற்சி பெற்றது குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.
1984 இன் இறுதியில் மீண்டும் தமிழ் போராளிகள் பலஸ்தீனப் பயிற்சிக்கு சென்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும்,புளொட் அமைப்பும் தனித்தனியே பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியோடு (PFLF) தொடர்பு கொண்டன.
இரண்டு அமைப்புகளுக்கும் தனித்தனியே பயிற்சி வழங்க பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி முன்வந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக சென்ற குழுவை டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றார்.
(ஏற்கனவே அவர் லெபனான் பயிற்சி பெற்றிருந்தவர்)
பயறி்சிக்கு சென்ற குழுவில் பெண்களும் இருந்தனர்.
குழுவுக்கு தயாபரன் பொறுப்பாக இருந்தார்.
புளொ்ட் அமைப்பின் சார்பில் சென்ற குழுவில் மானிக்க தாசன், ஜான்மாஸ்ரர் மென்டிஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பெண்கள் யாரும் குழுவில் இருக்கவில்லை
புளொட் சார்பில் சென்றவர்கள் பாலஸ்தீன போராளிகளோடு சேர்ந்து இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.
ஜான் மாஸ்டர் இஸ்ரேலிய டாங்கி ஒன்றை ஆர்.பி.ஜி ரக ஆயுதத்தால் தாக்கி சிதறடித்தார் என்று அப்போது கூறப்பட்டது.
ஜான் மாஸ்டர்தான் பின்னர் புளொட்டிலிருந்து வெளியேறி “தீப்பொறி” என்ற பெயரில் இயங்கிய குழுவில் முக்கியமானவராக இருந்தார்.
இந்த நேரத்தில் இந்திய பத்திரிகையாளர் அனிதாப் பிரதாப் எனும் பெண்மணி எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.
கல்கியில் அனிதா
வெளியுலகம் முன்பு ஜே.ஆர்.அரசு எப்படி கணிக்கப்பட்டது அது சான்று.
5.8.84 அன்று தமிழக சஞ்சிகை கல்கி அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது.
இலங்கையில் ஒரு நடிகர் திலகம் என்பதுதான் அந்த தலைப்பு.
“சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரலாம், அரசியல் வாதிகள் சினிமா எடுக்கலாம். ஆனால் சினிமாத்துறையுடன் சம்மந்தப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதும், அவர் ரெம்ப நன்றாக நாடகமாடத் தெரிந்தவராய் இருப்பதும் சிறிலங்காவில் மட்டுமே நடக்கிறது.
ஆமாம்! ஜெயவர்தனா போன்ற சிறந்த நடிகர் வேறு யாராவது உண்டா என்பது சந்தேகமே!
அவரது நடிப்புத் திறமைக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்.

ஜெயவர்த்தனா
நான் போயிருந்த சமயத்தில் ஜயவர்தனாவின் உறவுக்காரப்பிள்ளை –பெயர் பிலிப் உபாலி வியாபார விஷயமாய் கிழ்கிந்திய நாடுகளுக்கு போய்விட்டு திரும்பும்போது, பாதி வழியில் விமானமே காணாமல் போய்விட்டது.
ஜெயவர்த்தனா நிலைகுழைந்து போயிருந்தார்.
இலங்கையில் ஒரே பரபரப்பு.
காணாமல் போன விமானத்தை தேடும் முயற்சி தீவிரமாய் நடந்துகொண்டிருந்தது.
(உபாலியை பற்றி : இலங்கையின் மிகப்பெரிய பணக்காரன். அவரை தன் வாரிசாக உருவாக்கிக் கொண்டிருந்தார் ஜெயவர்த்தனா. நான் இந்தியா வந்த பிறகு அந்த விமானத்தின் சில பகுதிகள் மலாக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன்.)
ஈழத் தமிழர் பிரச்சனையில் “ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒன்றும் நான் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.
ஏதோ சில காரணங்களால் அப்படி நடிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜெயவர்த்தனாவை சுருக்கமாக விமர்சிக்க வேண்டுமெனில், தந்திரத்தில் நரி.நழுவுவதில் விலாங்கு மீன்”
இதுதான் அனிதாப் என்ற நிருபரின் படப்பிடிப்பு.

உபாலி மர்மம்
அனிதாவின் கட்டுரையின் இடையில் கூறப்பட்டுள்ள உபாலியின் விடயம் தொடர்பான மர்மம் 84முதல் இன்றுவரை நீடிக்கிறது.
ஜே.ஆர்.உபாலியை தனது வாரிசாக நியமிக்கப் பார்த்தார். ஜனாதிபதி ஜயவர்தனவின் மைத்துனரே உபாலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிரேமதாசாதான் உபாலியின் மறைவிக்கு திட்டமிட்டார் என்று அப்போது எழுந்த பேச்சும் இதுவரை அப்படியே இருக்கிறது.
மட்டக்களப்பில்
மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள களவாஞ்சிக்குடி. அங்குள்ள பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனா.
தாக்குதலுக்கு புலிகள் தயாராகி கொண்டிருந்த தகவல் பொலிசாருக்கு கிடைத்துவிட்டது.
தாக்குதல் எந்தத் திகதியில் எத்தணை மணிக்கு நடத்தப்படும் என்பதையும் பொலிசார் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.
செப்டம்பர் 22.1984 புலிகள் வாகனமொன்றில் புறப்பட்டார்கள். பொலிசார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

No comments:

Post a Comment