அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 32

முதன் முதலில் சொந்தமாக போராளிகள் மோட்டார் ஷெல்கள் தயாரிப்பு: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -32)


1984 இல் மிகப்பெரிய தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலை படையானது தயாரானது. யாழ்பாண காரைநகரில் உள்ள பாரிய கடற்படை முகாமை தாக்கி அங்குள்ள ஆயுதங்களை கைப்பற்றுவதுதான் திட்டம். இதே நேரம் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவுக்கள் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன. மக்கள் விடுதலை பிரதம தளபதியாக டக்ளஸ் தேவானந்தா. ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவின் அரசியல் பீட உறுப்பினராகவும் அவர் இருந்தார். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்களிற்கிடையிலும் ஏற்பட்ட பிரச்சனைகளில் பத்மநாபா நடுநிலை வகிப்பவராக நடந்துகொண்டார். காரைநகர் கடற்படை முகாம்தாக்குதல் திட்டம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்தார்.யாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று.
1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக் கொடடிருந்தபோது புலிகளும் பதில் நடவடிக்கை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
சுன்னாகம் பொலிஸ் நிலையமும் தாக்கப்படலாம் என்று பொலிசாருக்கு தகவல்கிடைத்தது.
பொலிஸ் நிலையத்தை காலிசெய்து செல்ல அங்குள்ள பொலிசார் முடிவு செய்தனர்.
அறைக்குள் பூட்டிவைத்து
கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில்தான் வைக்கப்பட்டிருந்தனர்.
25பேர் வரை இருந்தனர்.
அவர்களது கைகளைகட்டி பிளாஸ்ரர் ஓட்டி ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள்.
வாசலில் குண்டைவைத்துவிட்டு பொலிசார் வெளியேறி சென்றுவிட்டனர்.
உள்ளே கிடந்த இளைஞர்கள் சிலர் பிளாஸ்ரர்களை அகற்றிவிட்டு அபயக்குரல் எழுப்பினார்கள்.
சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடிச்சென்று கதவை உடைத்தனர்.
அப்போது குண்டு வெடித்தது.
மாடிக்கட்டிடம் உடைந்து வீழ்ந்தது.
அறைக்குள் பூட்டப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில் இடிபாடுகளில் சிக்கி 22 பேர்வரை உயிரிழந்தனர்.
பொதுமக்கள் சடலங்களை மீட்டெடுத்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரும் பலியானார்கள்.
அமைச்சர் அறிக்கை
இதேவேளை அப்போது அமைச்சராக இருந்த எம்.எச்.முஹமட் (பின்னர் சபாநாயகராக இருந்தவர்) மன்னார் பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்தார்.
இராணுவத்தினர்தான் நுர்ற்றுக்கு பேற்பட்ட கடைகளை மன்னாரில் தீயிட்டு கொழுத்தினார்கள் என்று எம்.எச்.முஹமட் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து மன்னார் இராணுவ பொறுப்பதிகாரி கேர்ணல் மோரிஸ் பின்வருமாறு சொன்னார்.
” மது அருந்தியிருந்த 30இராணுவத்தினர் அத்துமீறி நடந்துவிட்டனர்.
திருமணவீட்டுக்கு சென்றோர் பிணமானார்கள்.
வவுனியாவிலும் சந்தைகள், கடைகள் எரிக்கப்பட்டிருந்தன.
“வேல் கபே” என்னும் உணவு விடுதிக்குள்ளும் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.
யாழ்பாணத்தில் இருக்கிறது கைதடி என்னும் கிராமம். தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி 16 போ திருமணம் ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்தனர்.
அந்த வாகனம் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டது.. துப்பாக்கிகள் வேட்டுக்களை பொழிந்தன.
பெண்கள்,குழந்தைகள் உட்பட பலர் இரத்த வெள்ளத்தில் உயிர் துறந்தனர்.
இராணுவ நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த போது புலிகளின் மற்றொரு தாக்குதல் அது நடந்தது மன்னாரில்.
மன்னாரில் இருந்தது தள்ளாடி இராணுவ முகாம். மன்னார் மாவட்டத்தில் கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் தள்ளாடி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
அதன் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதில்லை.
11-08-84 அன்று தள்ளாடி இராணுவமுகாமை சேர்ந்த 13 இராணுவ வீரர்கள் ஜீப் வண்டி ஒன்றில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
மன்னார்- பூநரி பிரதான பாதையில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.
ஜீப் வண்டி குறிப்பிட்ட இடத்தில் வந்ததும் நிலக் கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன.
30அடிவரை உயர்ந்து சிதறியது ஜீப் வண்டி. 13 இராணுவத்தினரும் பலியானார்கள்.
இது மன்னார் தாக்குதல்! மற்றொரு தாக்குதல் வல்வெட்டித்துறையில்.

ஒரு மணிநேரச் சமர்
யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்த பொலிஸ் நிலையம் அதிகாலை 4.30மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டது.
பொலிஸ் நிலைய பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த செக்யூரிட்டி லைட் மீது சூடு விழுந்தது. அதனால் பொலிஸ்நிலைய சுற்றுப்புறமும் இருளானது.
கைக்குண்டுகள் வீசி பொலிஸ் நிலையம்மீது தாக்குதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸ் கமாண்டோக்கள் திருப்பித் தாக்க தொடங்கினார்கள்.. சுமார் மணிநேரம் துப்பாக்கி சமர் தொடர்ந்தது.
பொலிஸ் நிலையத்தின் உள்ளே செல்லமுடியவில்லை.தாக்குதலை நிறுத்திவிட்டு புலிகள் திரும்பினார்கள்.
14.8.84 அன்று புலிகள் நடத்திய தாக்குதல் அது.
வவுனியாவில் குண்டு
வவுனியா மாவட்டத்தில் கெடுபிடி நடவடிக்கைகளோடு படுத்திப் பேசப்பட்டவர் எஸ்.பி.ஹேரத். வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியாக அவர்தான் இருந்தார்.
வவுனியாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதில் எஸ்.பி.ஹேரத் முன் நின்று செயற்பட்டார்.
வவுனியாவில் காந்தியம் என்னும் அமைப்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தது.
அதனால் ஹேரத்தின் கழுகுப்பார்வை காந்தீய அமைப்பு மீது வீழ்ந்தது.
காந்தீய அமைப்பு புளொட் அமைப்போடு தொடர்பாக இருந்தது
புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்த சந்ததியார் காந்திய அமைப்பின் ஊடாக வேலை செய்தார்.
1984 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் எஸ்.பி.ஹேரத் தனது அலுவலகத்தில் இருந்தபோது குண்டுவெடித்தது.
எஸ்.பி.ஹேரத் பலியானார்.
புளொட் அமைப்பே இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்பட்டமான பொய்கள்
வடபகுதி எங்கும் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையையும் பயங்கரவாதிகளின் கணக்கில் சேர்த்துகொண்டது அரசு.
இலங்கை வானொலி பின்வருமாறு அறிவித்தது.
“பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 24மணித்தியாலங்களில் மூன்று இடங்களில் நடைபெற்ற மோதலில் 31 கொரிலாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.”
கைதடியில் மேலும் 10பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.”
இதுதான் இலங்கையரசு தனது வானொலி மூலம் சொன்னசெய்தி.
வல்வெட்டிதுறையில் கடற்படையினர் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு
அமைச்சர் லலித் அத்துலத்முதலி என்னசொன்னார் தெரியுமா?
“கடற்படையிடம் பீரங்கிகளோ இல்லை. பீரங்கித் தாக்குதல்கள் வல்வெட்டித்துறையில் எங்குமே நடைபெறவில்லை”என்றார் அவர்.
இலங்கை வானொலிச் செய்திப்படி நூற்றிப் பதினொருபேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அத்தனைபேரும் பயங்கரவாதிகள்.
ஆனால் இயக்க உறுப்பினர்கள் என்று பார்த்தால் புலிகள் அமைப்பை சேர்ந்த இருவர் மட்டுமே மாண்டனர்.
ஏனையோர் அனைவரும் பொதுமக்களே.
தகவல் கிடைத்தது
யாழ்பாணத்தில் இருக்கிறது கரவெட்டி . கரவெட்டி மேற்கில் கல்லுவம் மண்டான் என்றழைக்கப்படும் பாதையில் புலிகள் காத்திருந்தனர்.
நிலக்கண்ணி வெடிகள் பாதையில் புதைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த தகவலை யாரோ இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திவிட்டனர்.
24.8.84 கொழுத்தும் வெயிலில் பகல் 12.30மணி கோபுரக் கவச வண்டி சகிதம் நிலக்கண்ணிகளை அகற்ற இராணுவ அணி விரைந்து வந்தது.
இராணுவத்தினர் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தைதேடி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
கோபுர கவச வண்டி நகர்ந்து நிலக்கண்ணி வெடிக்கு மேலே வந்தபோது பதுங்கியிருந்த புலிகள் அவற்றை வெடிக்க வைத்தனர்.
கோபுர கவச வண்டி குப்புறக் கவுழ்ந்து பற்றி எரிந்தது. இராணுவத்தினர் எட்டுபேர் பலியானார்கள்.
அதே நாளில் மற்றொரு நிலக்கண்ணி வெடித்தாக்குதல் நீர்வேலியில் நடைபெற்றது.
நீர்வேலி பிரதான பாதையில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.
இத்தகவல்களும் இராணுவத்தினருக்கு எட்டியதோ தெரியவில்லை.
வாகனம் பின்னால் நகர்ந்துவர முன்னால் நடந்து பாதையை ஆராய்நதபடி வந்தனர் இராணுவத்தினர்.
எனினும் நிலக்கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரில் மூவர் பலியானார்கள்.
இத்தாக்குதலும் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.

பாரிய தாக்குதல் திட்டம்
1984 இல் மிகப்பெரிய தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலை படையானது தயாரானது.
யாழ்பாண காரைநகரில் உள்ள பாரிய கடற்படை முகாமை தாக்கி அங்குள்ள ஆயுதங்களை கைப்பற்றுவதுதான் திட்டம்.
இதே நேரம் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவுக்கள் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.
மக்கள் விடுதலை பிரதம தளபதியாக டக்ளஸ் தேவானந்தா.
ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவின் அரசியல் பீட உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்களிற்கிடையிலும் ஏற்பட்ட
பிரச்சனைகளில் பத்மநாபா நடுநிலை வகிப்பவராக நடந்துகொண்டார்.
காரைநகர் கடற்படை முகாம்தாக்குதல் திட்டம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்தார்.
அப்போது அவர் தமிழ் நாட்டில் இருந்தார்.
மற்றொரு மத்திய குழு உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்பாணத்தில் இருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணம் வருவதற்கு இடையில் கடற்படை முகாம் மீதான் தாக்குதலை நடத்தி முடித்துவிட சுரேஸ் திட்டமிட்டார்.
கடற்படை முகாம் பாரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது.
ஆட்பலமும் அதிகமிருந்தது.
ஆனாலும் தாக்கி அழித்துவிடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நம்பியதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது.
அதுதான் மோட்டோர் ஷெல்.
தமிழ் அமைப்புகளிடையே முதன் முதலில் சொந்தமாக மோட்டார் தயாரித்ததது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புதான்.

உதவிய புத்தகம்
தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் வைத்து மோட்டார்களும் அதற்கான ஷெல்களும் தயாரிக்கப்பட்டன.
ஆனால் அது ஒன்றும் தலைமையின் திட்டமிட்ட முடிவினால் நடந்த காரியமல்ல.
திருமலையை சேர்ந்த சின்னவன்.
லெபானில் பயிற்சி எடுத்தவன் துணிச்சலுக்கு பெயா போனவர்.
குறிபார்த்து சுடுவதில் வல்லவர்.
ஒரு நாள் வெளிநாட்டு புத்தகம் ஒன்றை சின்னவன் காணநேர்ந்தது.
அது ஆயுத தளபாடங்கள் சம்பந்தப்பட்ட புத்தகம்.
அதில் மோட்டார்கள் மற்றும் ஷெல்கள் தயாரிக்கும் முறை பற்றிப் படங்களோடு விளக்கப்பட்டிருந்தது.
புத்தகத்தை எடுத்துக்கொண்டு நேராக ஆர்.பி.கே ஸ்ரான்லின் என்பவரை சந்தித்தார் சின்னவன்.
ஸ்ரான்லின் கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு தன் பல லச்சங்கள் பெறுமதியான சொத்துகளை கொடுத்தவர்.
திராவிட கழகத்தில் மாணவர் தவைராக இருந்தவர்.
ஆனால் வெளியே அதிகம். ஸ்ரான்லின் என்று அவருக்கு பெயர் வைத்தவர் தந்தை பெரியார்.
ஸ்ராலினிடம் கேட்டார் சின்னவன்.
“நாங்கள் மோட்டர் செய்து பார்க்கக் கூடாது”
ஸ்ரான்லின் கேட்டார்.
“உங்களுக்கு நம்பிக்கை இருக்குதுங்களா சின்னவன்?
“இருக்குது”
“செஞ்சுடுவோம்”
மோட்டார் தயார்

ஸ்ராலினுக்கு சொந்தமான பட்டறையில் வேலை தொடங்கியது.
சின்னவனுக்கும் ஸ்ரான்லினுக்கும் தூக்கமேயில்லை.
கிட்டத்தட்ட ஓயாத அலை.
மோட்டார் தயார்.
ஷெல்லும் தயார்.
இருவர் விழிகளிலும் ஆனந்த கண்ணீர்
கும்பகோணத்தில் வைத்து பரீசீலித்துப் பார்த்தார்கள். மோட்டாரில் ஷெல்போட்டார் சின்னவன்.
நேர்த்தியாக எழுந்துபோய் வெடித்தது.
“வெற்றி”
சின்னவன் கண்களில் இராணுவ முகாம்கள் தெரிந்தன.
சின்னவன் சொ்ன்னார்
“இனி ஒரு முகாமும் ஈழத்தில் இருக்காது”
அந்த மோட்டார் தாக்குதலை முதுகெலும்பாக வைத்து காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் திட்டமிடப்பட்டது.
மோட்டாரும் ஷெல்களும் வந்து யாழ்பாணத்தில் இறங்கின.
யாழ் பிராந்திய மக்கள் விடுதலைப்படை தளபதி சுபத்திரன் கேட்டார்.
“பரீசோதிக்கவில்லையா?
“தேவையே இல்லை. வெடிக்கும்” என்றார் சின்னவன்.
சிறிய வான் ஒன்றை எடுத்து கவச வண்டியாக தயாரித்தனர்.
முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கவச வண்டியும் அதுதான்.
தயாரித்தவர் மக்கள் விடுதலைப்படை யாழ்.பிராந்திய முக்கியஸ்தராக இருந்த சுதன்.
தாக்குதல் ஆரம்பம்.
தாக்குதல் ஆரம்பித்தது..
மோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தும் பொறுப்பை சின்னவன் ஏற்றிருந்தார்.
மோட்டாரில் இருந்து செஷல்கள் எழுந்துபோய் கடற்படை முகாம்களில் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் பல வெடிக்கவேயில்லை.
கவச வண்டி கடற்படை முகாம் வாசல்வரை சென்று மேற்கொண்டு செல்லமுடியாமல் மரம் ஒன்றுடன் சிக்கிக்கொண்டது.
கவச வண்டி செல்லக்கூடிய வழி இருப்பதாக மக்கள் விடுதலைப்படை உளவு பிரிவு சொன் தகவலினால் ஏற்பட்ட தவறு அது.
வெடித்த ஷெல்களால் கடற்படை முகாம் கட்டிடங்கள் சேதமடைந்தன.
கடற்படையினர் முகாமைவிட்டு பின்வாங்கிச் சென்று பதுங்கிக்கொண்டனா.
முகாமுக்கு வெளியே நின்ற மக்கள் விடுதலைப்படைக்கு உள்ளே நடந்தது எதுவும் தெரியாது.
அதனால் மக்கள் விடுதலைப்படையினரால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியவில்லை.
திட்டம் தோல்வி என்பதால் தாக்குதலை நிறுத்திவிட்டுத் திரும்பினார்கள்.
1. உரிய தகவல்கள் திரட்டப்படாமை
2. மோட்டார் ஷெல் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தமை.
3. யாழ் பிராந்திய மக்கள் விடுதலைபடை பொறுப்பாளர்களோடு கூடி ஆராயமை.
4. முதல் தாக்குதலையே பாரிய தாக்குதலாக திட்டமிட்டமையால் ஏற்பட்ட முன் அனுபவம் இன்மை.
போன்றவையே கடற்படைமுகாம் தாக்குதலின் தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.
கடற்படை முகாமை தாக்குவதற்கு முன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கலாம் என்று யாழ் பிராந்திய மக்கள் விடுதலைபடை பொறுப்பாளர்கள் கூறினார்கள்.
தலைமை தடுத்துவிட்டது.
ஆனால் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது ரெலோ குறிவைத்தது.

No comments:

Post a Comment