அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 31

“எம்.ஜி.ஆர் இல்லை என்றால்.. தீவிரவாதிகளின் கதை என்றோ முடித்திருக்கும்”!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -31)


1984 ஆகஸ்ட் 5ஆம் திகதியும் இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்தன. இஸ்ரேலிய “மொசாட்” பிரிட்டனிலிருந்த வரவழைக்கப்பட்ட “எஸ்’.ஏ.எஸ்” என்றழைக்கப்படும் படையினர் ஆகியோரின் ஒத்துழைப்போடு வேட்டைகள் தொடர்ந்தன. வடபகுதி வீதிகளில் தமிழர் பிணங்களும், தமிழர்களின் வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன. அதே நாள் மாலை 5.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது. பொலிசார் 50பேர்வரை அங்கு இருந்தனர். அதில் 30பேர் கொரிலாத் தாக்குதலுக்கு எதிரான பயிற்சி பெற்றவர்கள்.
1984 ஆகஸ்ட் 5ஆம் திகதியும் இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்தன.
இஸ்ரேலிய “மொசாட்” பிரிட்டனிலிருந்த வரவழைக்கப்பட்ட “எஸ்’.ஏ.எஸ்” என்றழைக்கப்படும் படையினர் ஆகியோரின் ஒத்துழைப்போடு வேட்டைகள் தொடர்ந்தன.
வடபகுதி வீதிகளில் தமிழர் பிணங்களும், தமிழர்களின் வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன.
இருபுற தாக்குதல்
அதே நாள் மாலை 5.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.
பொலிசார் 50பேர்வரை அங்கு இருந்தனர். அதில் 30பேர் கொரிலாத் தாக்குதலுக்கு எதிரான பயிற்சி பெற்றவர்கள்.
மாடிக் கட்டிடத்தோடு அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தின் பின்புறமாய்ச் சென்று புலிகள் பதுங்கு நிலையில் இருந்தனர்.


அதே சமயம் முன்புறமிருந்து புலிகளது இன்னொரு கொரிலா அணி தாக்குதலை ஆரம்பித்தது. முன்புறமிருந்தே தாக்குதல் வருவதாக நினைத்து பொலிசார் பதில் தாக்குதல் தொடுக்கமுற்பட்டனர்.
அதேநேரம் எற்கனவே பின்புறம் நிலைகொண்டிருந்த புலிகள் தாக்குதலை ஆரம்பித்தபடி உள்ளே புகுந்தனர். இருபுறமும் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
பொலிசார் ஆயதங்களை கைவிடுச் தப்பிச் சென்றனர். பொலிஸ் நிலையம் புலிகளின் வசம் வீழந்தது.   பொலிஸ் இன்ஸ்பெக்டர் கனேமுல்ல உட்பட எட்டு பொலிசார் கொல்லப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆயதங்களின் விபரம் இது..
நான்கு இயந்திர துப்பாக்கிகள் மூன்று 303 ரக ரைபிலகள்.நான்கு ரிபீட்டர் ரக துப்பாக்கிகள், இரண்டு 38ரக ரிவோல்வர்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள்.
பொலிஸ் நிலையமும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இத்தாகுதலை அடுத்து படையினரின் நடவடிக்கைகள் மேலும் உக்கிரமாயின.
தமது கோபத்தை எல்லாம் தமிழ் மக்கள் மீதும், அவர்களது உடைமைகள் மீதம் கொட்டித் தீர்த்தனர் படையினர்.

வங்கி ஒன்று கொள்ளை இரண்டு
யாழ்பாணம் ஸ்ரான்லி வீதியிலிருந்த வங்கியிலும் கொள்ளை ஒன்று நடந்தது. இக்கொள்ளை நடவடிக்கையை பற்றிய சுவாரசியமான விசயம் ஒன்று சொல்லுகிறேன்.  ஒரே நாளில் இரண்டு தடவை ஒரே வங்கி கொள்ளையிடப்பட்டது.
அது எப்படி தெரியுமா? ஸ்ரான்லி வீதியில் இருந்த வங்கி மீது ஈ.பி.ஆர்.எல்.எப் பின் மக்கள் விடுதலைப்படையும் கண்வைத்திருந்தது.
அதே சமயம் தமிழ் மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி (என.எல்.எப்.ரி)என்னும் இயக்கமும் குறிவைத்திருந்தது.
மக்கள் விடுதலைப்படை தமது தளபதி டக்ளஸ் தேவானந்தாவின் உத்தரவுக்காக தாமதித்திருந்தது.
தளபதி டக்ளஸ் தேவானந்தா அப்போது இந்தியாவில் இருந்தார். என.எல்.எப்.ரி முந்திக்கொண்டது.
வங்கிக்குள் புகுந்த என.எல்.எப்.ரி யினர் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இரும்புப் பெட்டிக்குள் இருந்த நகைகளை எடுக்கமுடியவில்லை.
அதனை உடைத்து திறப்பது உடனே நடக்கக்கூடிய காரியமில்லை.
தாமதித்தால் பொலிசார் வந்து சேர்ந்து விடலாம்.அதனால் வெளியே இருந்த பணத்தையும், நகைகளையும் திரட்டிக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
.இச்செய்தி மக்கள் விடுதலைப்படைக்கு எட்டிவிட்டது. உடனே இறங்கினார்கள். வங்கிக்குள் புகுந்து இரும்பு பெட்டியை தூக்கி வந்து உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றினார்கள்.
இரும்பு பெட்டி பலத்த கனமாக இருந்தது.
பொது மக்களும் ஆளுக்கொரு கைகொடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிவிட்டார்கள். இரகசிய இடமொன்றுக்கு கொண்டு சென்று இரும்பு பெட்டியை உடைத்து நகைகளையும், பணத்தையும் திரட்டிக்கொண்டனர்.
இரும்புப் பெட்டிக்குள் சில காணி உறுதிகளும் இருந்தன. அதில் ஒன்று யாழ் தொகுதி எம்.பியாகவிருந்த யோகேஸ்வரனின் காணி உறுதி.
இச் சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் வந்து சேர்ந்தனர் இராணுவத்தினர்.
ஸ்ரான்லி வீதியால் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
8வயது சிறுவன் உட்பட பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

வவுனியாவில் கோரம்
இதேநேரம் வடபகுதியெங்கும் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.  வவுனியாவில் நாலு தமிழ் பெண்கள் விமானப்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.  பின்னர் அவர்கள் பலாத்காரப் படுத்தப்பட்ட நிலையில் வீதிகளில் பிணமாக கிடந்தனர்.
கவச வண்டி நாசம்
1984 ஆகஸ்ட் 6ஆம் திகதி யாழ்பாண பொதுமருத்துவ மனைக்கு அருகில் கவச வண்டியோடு வந்திறங்கினார்கள் இராணுவத்தினர்.
கவசவண்டியின் பீரங்கியால் அருகில் உள்ள கட்டிடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினார்கள்.
தாக்குதல் நடத்திவிட்டு கவச வண்டி சகிதம் ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் நடந்தினார்கள்.
கவசவாகனத்தை நோக்கி புலிகள் கைகுண்டுகள் வீசினார்கள்.
கவச வாகனம் சேதமடைந்தது. ஒரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.
மன்னார் நகரில் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக மன்னர் நகரில் இருந்த பல கடைககுளும் வீடுகளும் எரிந்து சாம்பலாகின.
அடம்பன் கிராமத்திலும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கனக்கான மக்கள் அகதிகளாயினர்.
முஸ்லிம் கடைகளும் மொசாட்டும.
முருங்கன், சிலாவத்துறை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மன்னாரில் இராணுவத்தினரால் எரிக்கப்பட்ட கடைகளில் பெரும்பாலானவைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.
மொசாட் குழுவினரை சந்தோசப்படுத்தவே முஸ்லிம் கடைகளையும் இராணுவத்தினர் கொளுத்தியதாக நம்பப்பட்டது.
மன்னாரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் இந்திய பிரஜைகள்.
ஆறு பேரில் ஒருவர் சேது இராமலிங்கம் சில நாட்களில் அவர் இந்தியா செல்ல இருந்தார்.
திருகோணமலையில் இருக்கிறது தம்பலகாமம் சிவன் கோயில்.
சினம் கொண்ட இராணுவத்தினருக்கு சிவன் மீதும் கோபம். கோயிலையும் நொருக்கிவிட்டு, பிரதம குருக்களையும் பிடித்துச் சென்றனர்.
யாழ்பாணம் அச்சுவேலியில் இருந்த கடைகளையும், வீடுகளையும் இராணுவத்தினர் கொழுத்திய போது நீதிபதியின் வீட்டையும் விட்டுவைக்கவில்லை.
மல்லாகம் மஜிஸ்ரேட் திரு பாலசிங்கத்தின் வீடுதான் தீக்கிரையானது.
நிருபர்கள் பட்ட அவலம்.
கனடா வானொலி நிறுவனம் ஒன்றின் நிருபர் ஜோன் தன்மன். வடபகுதிக்கு நேரில் சென்று நிலைமையை அறிய விரும்பினார். அனுமதி கொடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அதனால் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கத்தோடு அவர் தொடர்புகொண்டார். அமுர்தலிங்கமும் வடக்கில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து விளக்கம் கொடுத்தார்.  அவர் சொன்னதையெல்லாம் தொலைபேசி ஒலிப்பதிவு கருவி மூலம் பதிவு செய்து கொண்டார் நிருபர்.
நன்றி சொல்லி ரீசீவரை வைத்துவிட்டு திரும்பிய நிருபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரிவோல்வர்களோடு சி.ஐ.டியினர் நின்றனர்.
கனடா நிருபர் கொழும்பில் உள்ள சிஐ.டி தலமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஒலிப்பதிவு நாடாக்கள், செய்திக் குறிப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒப்புதல் வாக்கு மூலம் கேட்டனர் சி.ஐ.டியினர்.
நிருபர் மறுத்ததால் ஏழரை மணிநேரம் கூண்டுக்குள் அடைபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
விமானம் ஏறமுன் கனடா நிருபர் சொன்னது இது
“மனிதவுரிமைகளுக்கு இலங்கையில் இடமேயில்லை”
இலங்கையில் பணியாற்றிய “இந்திய டூடே”
சஞ்சிகையின் நிருபர் பெயர் வெங்கட்ரமணி.
அவரையும் இராணுவத்தினர் கைது செய்தனா.
இந்திய தூதர் தலையிட்டு அவரை விடுவித்தார்.
இத்தனைக்கும் அவர் இலங்கை அரசுக்கு சாதகமாக எழுதிய கட்டுரை ஒன்று கைது செய்யப்படும் முன்னர் இந்திய டூடே யில் வெளிவந்திருந்ததது.
வடபகுதி நிலவரம் அறிய சென்ற “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பிரதம ஆசிரியரும் மேலும் மூன்று பத்திரிகையாளர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மணிநேரம் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தாக்குதல்கள் வெறியாட்டங்கள் பற்றியே அதிகம் கூறிவிட்டதால் இடையில் மேலும் ஒரு சுவாரசியமான செய்தி.
தனிநாடும் தனிவீடும்
” தனிநாடு அல்லது சுடுகாடு” என்று முழங்கியவர்கள் கூட்டணித்தலைவர்கள்.
1984இல் அவர்களில் சிலர் தமிழக அரசிடம்
“தனிவீடு அல்லது வாடகைவீடு” கேட்டார்கள்.
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
கூட்டணியினரின் தனிவீட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டணி தலைவர்கள் மூவருக்கு தனிவீடு தர முன்வந்தார்.
கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம், திருமலைக்காவலர் என்றழைக்கப்பட்ட இரா.சம்பந்தன்.
எல்லைக் காவலர் என்றழைக்கப்பட்ட வவுனியா தா சிதம்பரம் ஆகியோருக்கு தனிவீடுகள் கிடைத்தன.
இந்தவிடயம் இலங்கை பத்திரிகையில் வந்தபோது தலைவர் மு.சிவசிதம்பரம் சங்கடப்பட்டார்.
அத்துலத் முதலியின் அறிவிப்பு
“தமிழீழத்தை எதிர்க்கும் சகல சிங்கள மக்களிடமும் ஆயுதம் வழங்குவோம்” என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலி கூறினார்.

“தமிழகத்தில் 5கோடி தமிழூகளும் தமிழக அரசியல்வாதிகளும், எம்.ஜி.ஆரும் இல்லை என்றால் தமிழ் தீவிரவாதிகளின் கதை என்றோ முடித்திருப்போம்” என்றும் அத்துலத் முதலி கூறியிருந்தார்.
“எம்.ஜி.ஆர் உயிருக்கு தமிழகத்தில் தங்கியிருக்கும் போராளிகளால் ஆபத்து” என்று ஒரு கட்டுக்கதையையும் இலங்கையரசு பரப்பியிருந்தது.
அதற்கு பதிலடிபோல எம்.ஜி.ஆர் சொன்னது இது.
“எனது உயிருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு யாழ்பாணத்தில் எனது உடன்பிறப்புக்களான தமிழர்கள் மீது இராணுவத்தை ஏவிவிட்டு பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவிப்பதேன்?

எந்த கண்டணத்தையும் ஜே.ஆர். அரசு தனது காதில் போட்டுக் கொள்ளவில்லை.
படுகொலை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
அந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு சிகரம் வைத்தது போன்ற ஒரு சம்பவம் சுன்னாகத்தில் நடந்தது.
இரத்தத்தை உறைய வைக்கும் அந்தப் பயங்கரம் அடுத்தவாரம்.

No comments:

Post a Comment