அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 29

தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சீலன்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -29


1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கித் தப்பிச்சென்றனர். அதன் பின்னர் பொலிஸ் நிலையம் இருந்த கட்டிடத்துக்கு தீ வைத்தனர் புலிகள். போராளிகளது நடவடிக்கைகள் நாளும் பொழுதும் வளர்ந்து வருவதை அவதானித்த ஜே.ஆர். அரசு அடக்குமுறைகளை அதிகப்படுத்தியது. யாழ் குடாநாட்டில் இராணுவம் வைத்ததே சட்டம் என்றாகியது. யாழ் அரசாங்க அதிபரைவிட வடமாகாண இராணுவ பிரிகேடியர் அதிகாரமுள்ளவராக விளங்கினார். இரவு நேரங்களில் யாழ்குடாநாட்டு மக்கள் நடமாடவே அஞ்சினார்கள். ஆணையிறவு, பலாலி இராணுவமுகாம்கள் வடமாகாணத்தின் ஆட்சி மையங்களாக மாறியிருந்தன.


தாக்குதல்
1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது.
யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள்.
தீடீர் தாக்குதலை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கித் தப்பிச்சென்றனர்.
அதன் பின்னர் பொலிஸ் நிலையம் இருந்த கட்டிடத்துக்கு தீ வைத்தனர் புலிகள்.
போராளிகளது நடவடிக்கைகள் நாளும் பொழுதும் வளர்ந்து வருவதை அவதானித்த ஜே.ஆர். அரசு அடக்குமுறைகளை அதிகப்படுத்தியது.
யாழ் குடாநாட்டில் இராணுவம் வைத்ததே சட்டம் என்றாகியது.
யாழ் அரசாங்க அதிபரைவிட வடமாகாண இராணுவ பிரிகேடியர் அதிகாரமுள்ளவராக விளங்கினார்.
இரவு நேரங்களில் யாழ்குடாநாட்டு மக்கள் நடமாடவே அஞ்சினார்கள்.
ஆணையிறவு, பலாலி இராணுவமுகாம்கள் வடமாகாணத்தின் ஆட்சி மையங்களாக மாறியிருந்தன.
ஆயுதம் ஏந்திய இயக்கங்களை ஒளித்துக்கட்ட ஜே.ஆர். அரசு வெளிநாட்டு உதவிகளை நாடியது.
போராளிகளுக்கு இந்தியா உதவியதால் ஜே.ஆர். அரசு அமெரிக்காவின் உதவியை கேட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் தலைவராக இருந்த திரு ஜோசப் அடாப்பூவின் தலைமையில் உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இலங்கை வந்தது.
அதனை அடுத்து அமெரிக்காவின் பிரதி உதவி வெளிநாட்டமைச்சர் திரு ஹோவர்ஹட் பிஷாபர் 21.02..84 அன்று இலங்கை விஜயம் செய்தார்.
இலங்கை அரசுக்கு 7கோடியே 38இலச்சம் டொலர்களை உதவியாக வழங்குவோம் என்று ஹோவர்ஹட் பிஷாபர் உறுதியளித்தார்.
இந்த அறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அமரிக்கவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது.
பிரிடிஷ் அரசாங்கமும் இலங்கைக்கு உதவமுன்வந்தது.
பிரிடிஷ் அரசுக்கு சொந்தமான “ஷேட் பிரதர்ஸ்” பிரிட்டனிள் உள்ள தனியார் நிறுவனமாக ஹெட்ஸபர் ஆகியவற்றிடமிருந்து பல கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஆயதகொள்வனவு மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.
20 கவச வண்டிகள் இருட்டில் வெளிவாக பார்த்துச் சுடக்கூடிய தானியங்கித் துப்பாகிகள் எளிய இயந்திர துப்பாக்கிகள் (S.M.G) வலுமிக்க கைகுண்டுகள், றிவோல்வர்கள், பிஸ்டல்கள் (L :M :G)ஆகியவை அரசபடைகளுக்காக தருவிக்கப்பட்டன.
மொசாட்டும் வந்தது
மனிதவுரிமை மீறல்களுக்கு பெயர் பெற்ற நாடாக அப்போதிருந்தது தென்னாபிரிக்கா.
கறுப்பின மக்களை காலடியில் போட்டு மிதித்து வைத்திருந்தது கொண்டிருந்தது.
தென்னாபிரிக்காவின் நிறவெறியரசு மீது நாகரீக உலகம் காறி உமிழ்ந்தது கொண்டிருந்தது.
ஜே.ஆர்.அரசு அந்தத் தென்னாபிரிக்கா அரசோடு கைகுழுக்கிக்கொண்டது. ஆயத உதவியும் கோரியது.
தென்னாபிரிக்காவும் உதவ முன்வந்ததது.
சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்தன.
பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலிக்கு ஒரு யோசனை வந்தது.
இஸ்ரேலிய உளவுப்பிரிவான “மொசாட்” அழித்தொழிப்புகளில் பெயர் பெற்றது.
பலஸ்தீன விடுதலைக்கு போராடிய பல தலைவர்களை வேட்டையாடி பிரபல்யம் பெற்றிருந்தது “மொசாட்”.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏ யும் மொசாட்டும் அண்ணன் தம்பிகள் போல அப்போது இணைந்து செயற்பட்டு வந்தன.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏ இலங்கை அரசுக்கு உதவி செய்யமுன்வந்தது.
முன்வந்தது மட்டுமல்லாமல் ஒரு பயங்கரமான யோசனையும் சி.ஜ.ஏ தெரிவித்தது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
பயங்கரமான யோசனை
50ஆயிரம் தமிழ் இளைஞர்களை ஒழித்துக்கட்டினால் தீவிரவாதத்தை “ப்பூ” என்று அணைத்துவிடலாம் என்பதுதான் சி.ஜ.ஏ சொன்ன யோசனை.
சி.ஜ.ஏ நெருக்கமாகிவிட்டது. இனி மொசாட்டும் வந்துவிட்டால் போராளிகளை அழித்துவிட்ட மாதிரிதான் என்று கனவு கண்டார் அத்துலத்முதலி.
மொசாட்டும் உதவ முன்வந்தது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் “இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு”இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
1970இல் பதவியில் இருந்த சிறிமா அரசு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தது.
உறவை முறித்துக்கொண்டதோடு நில்லாமல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தார்.
அப்போது பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா.
14 ஆண்டு கழித்து 1984இல் இஸ்ரேலுடன் இனிய உறவை ஆரம்பித்தது ஜே.ஆர்.அரசு.
ஜே.ஆர்.அரசின் நடவடிக்கையை சிறிலங்கா சுதந்திர கட்சி கண்டித்தது.
“இஸ்ரேலியர்களை வரவழைத்து அரபு நாடுகளின் முகத்தில் அடித்தது போன்ற செயல்” என்று பண்டாரநாயக்கா கூறினார்.
சவுதி அரேபியா,லிபியா,சிரியா, ஈரான், ஜோர்தான் போன்ற நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.
வடகிழக்கில்- முஸ்லிம் மக்கள் இஸ்ரேல் வருகைக்கு எதிராக ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.
போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவுழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது ஜே.ஆர்.அரசு.
இந்திரா பேட்டி
இலங்கையில் அன்னிய சக்திகளின் வருகை இந்தியாவை விழிப்படைய செய்தது. அப்போது இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி.
பிரான்சின் தலைநகரான பாரிசிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்று “லீ பிகாரே” அந்த பத்திரிகையின் சிறப்பு நிருபர் இந்திய பிரதமர் இந்திராவை பேட்டி கண்டார்..
அதில் ஒரு பகுதி இது.
கேள்வி : கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நலன் காக்கும் பிரிவு ஒரு தொல்லை என்று கருதுகிறீர்கள?
இந்திரா: இஸ்ரேலிய பிரிவை கொழும்பில் புகுத்தியது சம்பந்தமாக இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களிற்கிடையே தீவிர எதிர்ப்பு இருந்து வருகிறது.
எம்மை பொறுத்தவரையில் எமது கடல் எல்லையோரத்தில் இருக்கும் சிறிலங்காவில் அந்நியர் தங்க இடமளிக்கப்படுவது எமக்கெல்லாம் ஒரு பயமுறுத்தலாகும்.
கேள்வி: இஸ்ரேல், லெபனான் பிரச்சனை போல் இலங்கையிலும் உருவாகி வருவதாக சிலர் கூறுகின்றனரே! நீங்கள் அதை நம்புகிறீர்களா?
இந்திரா: இஸ்ரேலியர்களை சிறிலங்கா இறக்குமதி செய்திருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.
பயங்கரவாதிகளை சமாளிக்கவே அவர்களை தங்க வைத்திருப்பதாக ஜெவாத்தனா கூறுகிறார்.
ஆனால் முன்பு நடைபெற்றது போல பயங்கரவாத ஒழிப்பு என்றபோர்வையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
பிரதமர் இந்திராவின் கருத்து இந்தியாவின் மனநிலயை படம்பிடித்து காட்டியது.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா
இதனால் ஜே.ஆர். ஒன்றும் அசந்துவிடவில்லை.
ஜே.ஆர். என்னகூறினார் தெரியுமா?
அவர் கூறியது இதுதான்.
பயங்கரவாதிகளை அழிப்பதற்கு எந்த பேய் பிசாசுகளை உதவியினை பெறுவதற்கும் நாம் தயார்.
கூட்டணி நிலை
இந்த வேளையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்னசெய்து கொண்டிருந்தது என்ற கேள்வி வரும்..
1978இல் இராஜாங்க அமைச்சின் விருந்தினராக சென்றவர் அமர்தலிங்கம்.
அமெரிக்காவின் தீவிர விசுவாசி இயக்கங்களால் கூறப்பட்ட நீலன் திருச்செல்வத்துக்கு கட்சியில் இடமளித்தார் அமர்தலிங்கம்.
தமிழரசுக் கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த திருச்செல்லத்தின் மகன்தான் நீலன் திருச்செல்வம்.
தமிழர் போராட்டம் எதிலும் ஈடுபடாமல், அடிபடாமல், உதைபடாமல், சட்டை கசங்காமல் கூட்டணிக்குள் இடம்பிடித்தவர் நீலன் என்று விமர்சிக்கப்பட்டது..
அரசியல் சட்ட அறிவு இருக்கிறது என்பதுதான் நீலனை கட்சிக்குள் சேர்க்க கூட்டணி கூறிய காரணம்.
நீலன் திருச்செல்வம்.

நீலன் மீது கண்டனம்
1983 யாழபாணத்தில் சிறிதர் திரையரங்கம் முன்பாக மே தினக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ஈழமானவர் பொது மன்றம் (G:U:E.S) நடத்திய அந்த மே தினக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மு.டேவிற்சன்.
தனது பேச்சில் டேவிற்சன் ஒரு கேள்வி எழுப்பிவிட்டு பதில் சொன்னார். அது இதுதான்.
“யார் இந்த நீலன் திருச்செல்வம்?”
அமெரிக்க சி.ஜ.ஏ ஆள்தான் இவர்.
1984இல் புலிகள் தமது “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் நீலன் திருச்செல்வம் ஏ.ஜே.வில்சன் போன்றோர் குறித்து இப்படி எழுதியிருந்தனர்.
“அமெரிக்கா சார்பான சி.ஜ.ஏ உளவு ஸ்தாபனத்துடன் தொடர்புடைய தமிழ் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் இருந்து வருவது தெரிந்து வருவது தெரிந்த விசயமே.
அரசியல் யாப்பு நிபுணர்களாக, சட்ட ஆலோசகர்களாக ஜெவர்த்தனாவின் நண்பர்களாக இவர்கள் இயங்குகின்றார்கள்.
இவ்வாறான இனத்துரோக சக்கதிகளின் செயல்பாடுகள் பற்றி விடுதலை அமைப்புகள் விழிப்பாக இருக்கவேண்டும.”
இவ்வாறான பின்னணியில் கூட்டணியும் அமெரிக்க சார்பானதாகவே தமிழ் போராளி அமைப்புகளால் கண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் ஒரு தகவல் : அமெரிக்க சி.ஜ.ஏ நிறுவனத்தின் சின்னமும் கழுகு.
அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களோடு நல்ல நட்பும், அபிமானமும் கொண்டிருந்தவர் அத்துலத்முதலி,
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தனிக்கட்சி தொடங்கினார் அல்லவா அத்துலத் முதலி?
அப்போது தனது கட்சியின் சின்னமாக அவர் விரும்பியிருந்தது கழுகு சின்னம.
தமது பத்திரிகைக்கும் இராஜாளி என்றுதான் பெயர் வைத்தார்கள் அத்துலத் முதலி அணியினர்.
பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அத்துலத்முதலி போட்டிருந்த புத்திசாலித்தனமான திட்டங்களில் ஒன்று கூட்டணியை பலப்படுத்துவது.
ஏன் பலப்படுத்தவேண்டும்?
அவரே அதற்கான விளக்கமும் சொல்லியிருந்தார் அது இதுதான்.
“மிதவாதிகள் பலவீனமாகிவிட்டார்கள். தீவிரவாதிகள் பலமாக இருப்பதாலேயே கூட்டணியினர் எம்மோடு அரசியல் தீர்வுக்கு வரத் தயக்கம் காட்டுகிறார்கள்.
நாம் இப்போது செய்யவேண்டியது. தீவிரவாதிகளை பலவீனப்படுத்திவிட்டு மிதவாதிகளை பலப்படுத்துவதுதான்”
வந்தனர்-கண்டனர்
தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக –தகவல் சேகரிப்பிலும் பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா.
1984 மே மாதம் இரண்டாம் திகதி பருத்திதுறை பஸ்நிலையத்தில் சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் இளைஞர்கள்.
அவர்கள் யாரையோ தேடினார்கள் தேடப்பட்டவர் பஸ்ஸில் ஏறத்தயாராகிக் கொண்டிருந்தார்.
இளைஞர்களில் ஒருவர் அவரை நோக்கி சுடத்தொடங்கினார். பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள் ஓடத்தொடங்கினார்கள்.
சுடப்பட்டவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது பெயா நவரத்தினம் யாழ் விசேட பொலிஸ் பிரிவில் சார்ஜன்டாக இருந்தவர்.
இயக்கங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் சிறப்பாக செயல்பட்டதால் சப் இன்பெக்டர் பதவி அவருக்கு கிடைக்க இருந்தது.
1984 மே 4ஆம் திகதி இன்னுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்பாணம் சாவகச்சேரியில் உள்ள மீசாலை என்னுமிடத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கான்ஸ்டபிள் சுப்பிரமணியம் என்பது அவரது பெயர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர்.
இவர் ஏன் சுடப்பட்டார்?
புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சாள்ஸ் அன்ரனி.(சீலன்)
1983 யூலை 15ஆம் திகதி அன்ரனியும், அருள் நாதன் (ஆனந்தன்) என்னும் போராளியும் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
திடீர் சுற்றி வளைப்பு.
தப்பி ஓடிய போது படையினரின் துப்பாக்கிகள் சீறின.
சீலனின் நெஞ்சில் ரவைகள் பாய்ந்தன.
இனியும் தப்பும் முயற்சி சாத்தியமில்லை என்றுணர்ந்த சீலன் ஒரு முடிவுக்கு வந்தார்.
தன்னோடு வந்த சகபோராளியிடம் சீலன் கூறினார்.
“என்னை சுடாடா-சுடு”
அந்த போராளி தயங்கினான் சீலன் விடவில்லை வற்புறுத்தினார். இராணுவத்தினர் நெருங்கி கொண்டிருந்தனர்.
சீலனின் தலையில் துப்பாக்கியால் சுட்டார் அந்தப் போராளி.
அதே சமயம் ஆனந்தன் மீதும் இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளை பொழிந்தன.
சீலனும், ஆனந்தனும் உயிரிழந்தனர். 1983 யூலை 15இல் நடந்தது அது. சீலனும் ஆனந்தனும் மீசாலையில் தங்கியிருந்த வீடுபற்றிய தகவலை திரட்டிக் கொடுத்தவர்தான் கான்ஸ்டபில் சுப்பிரமணியம்.

No comments:

Post a Comment