அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 28

பிரபாகரனின் காதல்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -28

சாகும்வரை உண்ணவிரதமிருந்த ஒன்பது மாணவாகளில் நான்கு மாணவிகளும் இருந்தனர் என்று கூறினேன் அல்லவா? அந்த மாணவிகளில் ஒருவர் மதிவதனி.சென்னையில் புலிகளின் இல்லத்திலிருந்த மதிவதனியை பிரபாகரனுக்கு பிடித்துவிட்டது. இருவருக்கும் காதல் மலர்ந்தது. மதிவதனியை தனது வாழ்கை துணைவியாக்கி கொண்டார் பிரபாகரன். காதல், கல்யாணம் எல்லாம் போராட்டப்பாதையில் சுமையாகிவிடும். அதனால் இயக்கத்தில் இருப்பவர்கள் காதல் விவகாரங்களை தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார் பிரபாகரன். அந்த கருத்தை மாற்றிவிட்டார் மதிவதனி.இயக்கத்தில் சோ்ந்து ஐந்து வருடத்தை கடந்தவர்கள் விரும்பினால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார் பிரபாகரன்.


1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன்.
1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை தொடர்ந்த மாணவர் போராட்டம் பற்றி இடையில் குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறிவிட்டேன்.
யூலை 83 இனப்படுகொலை தென்னிலங்கையில் தமிழர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருந்தது.
தென்னிலங்கையிலிருந்து வடகிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் தென்னிலங்கை பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றவர்களும் இருந்தனர்.
பேராதனை,கொழும்பு, மொரட்டுவ பல்கலைக் கழகங்களில் கல்வி கற்ற தமிழ் மாணவர்கள் தாம் மீண்டும் திரும்பி செல்ல முடியாது என கூறினார்கள்.
யாழ்பாண, மட்டக்களப்பு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க கூடியதாக மாற்றம் தருமாறு அந்த மாணவர்கள் கோரினார்கள்.
இட மாற்றம் கோரிய மாணவர்களது கோரிக்கையை அரசு நிராகரித்தது.
“இடம்பெயர்ந்த மாணவர்கள் உடனடியாக தமது பல்கலைகழகங்களுக்கு திரும்ப வேண்டும்” என்று அரசு காலக்கெடு விதித்தது.
அரசின் அறிவிப்பை எதிர்த்து இடம்பெயர்ந்த மாணவர்கள் போராடத் தீர்மானித்தார்கள்.
போராளி அமைப்புக்களும் மாணவாகளது போராட்டத்தை ஆதரித்தன.
ஈழமாணவர் பொது மன்றம் (G.U.E.S) இடம்பெயர்ந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதராவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது.
கொலைகளம்
இடம் பெயர்ந்த மாணவர்கள் சிலர் மீண்டும் தென்னிலங்கை பல்கலைக் கழகங்களுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இந்த முடிவு இடம் பெயர்ந்த மாணவர்களது போராட்டத்தை பாதிக்கும் என பிரச்சனை எழுந்தது.
07-11-83 அன்று புலிகள் அமைப்பினர் ஒரு பிரசுரம் வெளியிட்டனர்.
“கொலைக்களத்துக்கு போகவேண்டாம்” என்ற தலைப்போடு அந்தப் பிரசுரம் வெளியாகியிருந்தது.
“சிறிலங்காவில் உள்ள பல்கலைகழகங்கள் வெலிக்கடையாக மாறும் நிலையுண்டு” என்று புலிகளது பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.
இடம் பெயர்ந்தவர்களது உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தது.
பொதுமக்கள் மத்தியிலும் என்றும் இல்லாதவாறு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு நிலை காணப்பட்டது.
ஜே.ஆர். அரசு எதற்கும் செவிசாய்க்கவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்தது.
இதனையடுத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவு செய்தனர்.
09-01-84 முதல் ஒன்பது மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சாகும்வரை உண்ணாவிரதமும்,தன்னை தார்மீக அரசு என்று சொல்லிக் கொண்ட ஜே.ஆர் அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் மாணவர்கள் மீது அனுதாபமும், அரசு மீது ஆத்திரமும் ஏற்பட்டன.
மக்கள் வெள்ளம் யாழ் பல்கலைகழகத்தின் முன் திரண்டது.
எங்கும் பதட்டம் நிலவியது.
அரசு உத்தரவு
யாழபாணம் எங்கும் கறுப்பு கொடிகள் பறந்தன.
ஹர்தால்கள், பாடசாலை பகி்ஷ்கரிப்புகள் நடைபெற்றன. அரச ஜீப்வண்டிகள் தீயிடப்பட்டன.
எங்கும் கொந்தளப்பு நிலை ஏற்பட்டதை அவதானித்தது அரசாங்கம்.
இடம்பெயர்ந்த மாணவர்கள் போராடடத்துக்கு ஆதரவாக துண்டுப்பிரசு்சரம் வினியோகித்த ராஜ்மோகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
யாழ் பல்கலைகழகத்தை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியது. அரசு ஏட்டிக்கு போட்டியாக நடந்ததே தவிர இணக்கமான போக்கை காட்டவில்லை.
மாணவர் கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
மாயமாய் மறைந்த உண்ணாவிரதிகள்
1984 ஜனவரி 16ஆம் திகதி பிற்பகல் உண்ணாவிரதிகளின் நிலை மோசமடைந்தது. மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.
ஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமடைந்ததுள்ளது என்று மருத்துவர் தெரிவித்தார். அந்த மாணவி சாவோடு போராடிக்கொண்டிருந்தார்.
இன்நிலையில் 16ஆம் திகதி இரவு ஒன்பது மாணவர்களும் திடீரென காணாமல் போனார்கள்.
ஆயதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களால் ஒன்பது மாணவர்களும் கடத்தப்பட்டார் என்பது தெரியவந்தது.
மாணவர்களது அறவழி போராட்டத்தை நிறுத்தியது சரியா?
ஈழமாணவர் பொது மன்றம், புளெட் ஆகியவை புலிகள் – மாணவர்கள கடத்திச்சென்றது தவறு என்று கண்டித்தன.
கண்டனங்களை அடுத்து புலிகள் தமது நடவடிக்கைகளுக்கு விளக்கமளித்தனர்.
“உண்ணாவிரதிகளை அழைத்துச்சென்று அவர்களது உயிர்களை பேணிக்காக்க நாம் முயன்றோம். உண்ணாவிரதிகளும் தமது பூரண சம்மதத்தை தெரிவித்தே எம்மோடு வந்தனர்.
மாணவ, மாணவிகள் எம்மோடு பாதுகாப்பாக இருக்கின்றனர்.
மாணவர்களது உயிர் போகக் கூடாது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பதால் அரச அதற்காக வருந்தவும் செய்யாது.
அறவழிப்போராட்டம் அரசின் செவிகளில் ஏறாது என்பதால் உண்ணாவிரதிகளை காப்பாற்றியதாக” புலிகள் விளக்கமளித்தனர்.
ஒன்பது மாணவ மாணவிகளும் படகு மூலம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரபாகரனின் காதல்
சாகும்வரை உண்ணவிரதமிருந்த ஒன்பது மாணவாகளில் நான்கு மாணவிகளும் இருந்தனர் என்று கூறினேன் அல்லவா?
அந்த மாணவிகளில் ஒருவர் மதிவதனி.சென்னையில் புலிகளின் இல்லத்திலிருந்த மதிவதனியை பிரபாகரனுக்கு பிடித்துவிட்டது.
இருவருக்கும் காதல் மலர்ந்தது.
மதிவதனியை தனது வாழ்கை துணைவியாக்கி கொண்டார் பிரபாகரன்.
காதல், கல்யாணம் எல்லாம் போராட்டப்பாதையில் சுமையாகிவிடும். அதனால் இயக்கத்தில் இருப்பவர்கள் காதல் விவகாரங்களை தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார் பிரபாகரன்.
அந்த கருத்தை மாற்றிவிட்டார் மதிவதனி.
இயக்கத்தில் சோ்ந்து ஐந்து வருடத்தை கடந்தவர்கள் விரும்பினால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார் பிரபாகரன்
வட்ட மேஜை.
1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய மற்றெரு நிகழ்வு வட்ட மேசை மாநாடு.
இயக்கங்களின் கோரிக்கைகள், கருத்துக்ககள் எதனையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஜே.ஆர்.அரசோடு பேச்சு நடத்தச்சென்றார் அமுர்தலிங்கம்.
கூட்டணியை நம்பவில்லை
ஜே.ஆர்.அரசோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது இயக்கங்களின் கருத்தை அலட்சியம் செய்தே சென்றனர்.
ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?
விடுதலை இயக்கங்களோடு தங்களுக்கு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று கூட்டணி கூறியதை தென்னிலங்கை இனவாதிகள் நம்பவில்லை.
தென்னிலங்கை பத்திரிகைகள் கூட கூட்டணிக்கும் புலிகளுக்கும் தொடர்புள்ளதாகவே செய்திகள் வெளியிட்டன.
“ஐலன்ட்” ஆங்கில பத்திரிகை ஒரு “கருத்தோவியம்” வெளியிட்டிருந்தது.
அமுதர் புலியோடு வட்டமேஜை மாநாடுக்கு செல்வது போன்று “கருத்தோவியம்” வரையப்பட்டிருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியோடு பேச்சு நடத்துவது ஏன்?
இந்தக் கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத்முதலி சொன்ன பதில் இது..
“இன்று தீவிரவாதிகளது நடவடிக்கை காரணமாவே ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியால் அரசோடு உடன்பாட்டுக்கு வரமுடியாமல் இருக்கிறது.
தீவிரவாதிகள் பலமுள்ளவர்களாகவும், மிதவாதிகள் பலமற்றவர்களாகவும் இருப்பதாலேயே அரசியல் தீர்வு எதனையும் காணமுடியாமல் இருக்கிறது.
அரசியல் தீர்வு எதுவும் காணமுடியாமல் இருக்கிறது.
அரசியல் தீர்வு ஏற்படவேண்டுமாயின் தீவிரவாதிகளை அடக்குவது முக்கியமானது.
மிதவாதிகளை பலமுள்ளவாகள் ஆக்குவதற்காகவே நாம் தற்போது முயற்சிக்கின்றோம்.”
அத்துலத்முதலியின் கருத்தை கூட்டணி மறுத்து பேசவில்லை.
வாகன தாக்குதல்
கூட்டணியை அரவனைத்துக்கொண்டு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டின் போன்ற நாடுகளிடம் போராளிகளை ஓழிக்க ஆயதங்கள் கோரியது அரசு.
ஜே.ஆர். அரசு உதவி கோரிய இன்னொரு நாடு. மனிதவுரிமை மீறலகளுக்கு பெயர் பெற்றிருந்த தென்னாபிரிக்கா.
அன்னிய உதவிகளோடு போராளிகளை ஒழிக்க அரசு திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது புலிகள் ஒரு தாக்குதலுக்கு தயாரானார்கள்.
போராளிகளை எதிர்த்து தாக்குதல் நடத்த இராணுவத்தில் புதிய படைப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது.
கஜபாகு ரெஜிமென்ட்” என்று அப்படைப் பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டது.
“கஜபாகு ரெஜிமென்ட்” படைபிரிவை சேர்ந்தவர்கள் கொழும்பிலிருந்து இரயில் மூலம் யாழ்பாண இரயில் நிலையத்துக்கு வந்திறங்கினார்கள்.
அவர்களை ஏற்றிக்கொண்டு இராணுவ “ட்ரக்”வண்டி யாழ்பாண ஆஸ்பத்திரி வழியாக சென்றுகொண்டிருந்தது.
பாதையோரத்தில் வான் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இராணுவ வண்டி அந்த வான் நின்ற இடத்தை கடந்தபோது.. அந்த வான் வெடித்துச்சிதறியது.
அதனால் இராணுவ “ட்ரக்”வண்டி சிதைந்து போனதுடன் அதனை தொடர்ந்து வந்த இராணுவ வாகனங்களும் சேதமாகின.
இராணுவ வாகனத்திலிருந்த இராணுவத்தினர் யாழ் புகையிரத நிலயத்தை நோக்கி ஓடிச் சென்று அங்கு மறைந்துகொண்டனர்.
வாகனம் ஒன்றை வெடிக்க வைத்து நடத்தப்பட்ட முதலாவது வாகனத் தாக்குதல் அதுதான்.
அது நடந்தது 1984 ஏப்பிரல் 09 ஆம் திகதி.


படையினரின் தாக்குதல்
அத்தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர்கள் கவச வண்டிகள் சகிதம் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஹெலிகொப்டர் ஒன்று வானத்தில் தாழப்பறந்து இராணுவத்தினருக்கு துணையாக வந்தது.
தாக்குதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை எடுத்துச் சென்ற பின்னர் படையினரின் தாக்குதல் ஆரம்பித்தது.
வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் சுட்டுத்தள்ளப்பட்டனர்.
யாழ்பாணத்தில் உள்ள சரித்திர புகழ்வாய்நத அடைக்கலமாதா தேவாலயம்இராணுவத்தினரின் கண்ணில் பட்டுவிட்டது.
“ரொக்கட் லோஞ்சர்கள்” மூலம் தேவாலயத்தை தாக்கினார்கள்.
யேசுநாதரின் சுருவமும் உடைக்கப்பட்டது.
1984 ஏப்பிரல் 10ஆம் திகதி காலை அந்த நாசம் அரங்கேறியது.
வீதியால் சென்றுகொண்டிருந்த கார்கள் அடித்து நொருக்கப்பட்டன. பல கார்கள் வீதிகளில் வைத்தே தீயிட்டு எரிக்கப்பட்டன.
யாழ் கூட்டறவு பண்டசாலையும், அருகிலிருந்த கடைகளும் தீயில் நாசமாகின.
அடைக்கலமாதா கோயில் தாக்கப்பட்ட செய்தி யாழ்பாணம் எங்கும் “தீ”யெனப் பரவியது.
யாழ் நகரில் பொதுமக்களால் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
திரண்ட மக்களிடம் எறிகுண்டுகள் புலிகளால் கொடுக்கப்பட்டன.
இராணுவ வண்டிகளை நோக்கி பெற்றோல் குண்டுகளையும் பொதுமக்கள் வீசினார்கள்.
எரிக்கப்பட்ட உடல்கள்
யாழ்பாண நகரில் ஸ்டான்லி வீதியில் இருந்த பௌத்தவிகாரை கிட்டத்தட்ட இராணுவ முகாம் போலவே செயல்பட்டு வந்தது.
யாழ் நகரிலிருந்து இருந்த சிங்கள மகாவித்தியாலயமும் இராணுவத்தினரின் தங்குமடமான பயன்பட்டு வந்தது.
ஏப்பிரல் 10ஆம் திகதி மாலை யாழ் நகரில் இருந்த நாகவிகாரை தாக்கப்பட்டது. சிங்கள மகாவித்தியாலயமும் தீயிடப்பட்டது.
அரச கட்டிடங்கள் பலவும் தீ மூட்டப்பட்டன.
இத்தாக்குதலுக்கு புலிகளே முக்கிய தூண்டுதலாக இருந்ததோடு தாமும் பங்கு கொண்டனர்.
புலிகளின் சார்பில் முன்னின்றவர்களில் கிட்டுவும் ஒருவர்.
விகாரையும், மகாவித்தியாலயமும் தாக்கப்பட்ட அறிந்த இராணுவத்தினர் பெரும்தொகையாக வந்து குவிந்தனர்.
எதிர்பட்டவாகள் மீதெல்லாம் துப்பாக்கி சூடுகள் விழுந்தன.
பலர் இறந்தனர். பெரும்தொகையானோர் காயமடைந்தனர்.
இறந்தவாகளது உடல்கள் நாகவிகாரைக்கு அருகில் தியிட்டு எரிக்கப்பட்டன.
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு நேரத்திலும் புலிகளது தாக்குதல் அணி ஒன்று புறப்பட்டது.
தொடரும்..
பிரபாகரன்- மதிவதனி காதல் மலர்ந்த கதை..
1983 செப்டெம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட 5 பேர் உண்ணாவிரம் இருந்தார்கள்.
அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சோர்வடைந்து இறக்கும் தறுவாயில் இருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு சென்றார் பிரபாகரன்.
அங்கே அவர்கள் சென்னையில் இந்திரா நகரில் உள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீட்டில் 5 பேரும் தங்கி இருந்தார்கள்.
பிரபாகரன் ஒரு போராளி அவர் ஒரு இயக்கத்தை கொண்டு நடத்துகிறார் என்று மக்களால் அறியப்பட்டவர். அவரை பார்த்தாலே பலருக்கு பயமாக இருக்கும்.
ஆனால் நான் அவர் மேல் மஞ்சல் தண்ணீரை ஊற்றுவேன் … எனக்கு அவர்மேல் பயம் கிடையாது என்று தோழிகளிடம் சவால் விட்டவர் வேறு யாரும் அல்ல மதிவதனி தான்.
இந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிப் பண்டிகை தினத்தில், பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு வரவே, சற்றும் பயப்பிடாமல் மஞ்சல் தண்ணீரை எடுத்து பிரபாகரன் மேல் ஊற்றிவிட்டார் மதிவதனி.
இதனால் சடுதியாக கோபம் அடைந்த பிரபாகரன் அவரை கடிந்து தள்ளினார்.
அழுதுகொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்த மதிவதனி அவ்விடத்தை விட்டு எழுந்துகொள்ளவே இல்லை.
நீண்டநேரம் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்ட தயாரான பிரபாகரன், அங்கே ஒரு முலையில் மதிவதனி உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதை கவனித்தார்.
கிட்டச் சென்று அழவேன்டாம் என்று ஆறுதல் கூறினார். அன்றில் இருந்துதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.
பின்னர் ஒரு நாள் அவர் பூ வாங்கிக்கொண்டு சென்று அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்றவேளை, அவர்கள் காதலை ஆதரித்து, ஆதரவு கொடுத்தது அன்ரன் பாலசிங்கம் தான். 1984ல் இவர்கள் இருவரும் திருமணம் முடித்தார்கள்.

No comments:

Post a Comment