அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-பகுதி - 22

இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார். இனப்படுகொலை செய்திகளும், அடைக்கலம் தேடி தமிழகம் நேக்கிச் சென்ற அகதிகளின் சோகங்களும் தமிழக மக்களிடம் அனுதாப அலையைத் தோற்றுவித்தன. இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரசனை குறித்து உரத்துப் பேச ஆரம்பித்தன. இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்பது இன உணர்வை வெளிப்படுத்தும் அடையாளமானது.  (தொடர் கட்டுரை)
தமிழகத்தின் கொதிப்பு:


இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார்.
இனப்படுகொலை செய்திகளும், அடைக்கலம் தேடி தமிழகம் நேக்கிச் சென்ற அகதிகளின் சோகங்களும் தமிழக மக்களிடம் அனுதாப அலையைத் தோற்றுவித்தன.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரசனை குறித்து உரத்துப் பேச ஆரம்பித்தன.
இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்பது இன உணர்வை வெளிப்படுத்தும் அடையாளமானது.
கலைஞர் கருணாநிதி உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கருதவேண்டும் என்பதில் விருப்பம் உடையவர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் கூடிய கரிசனம் உடையவராகக் காட்டுவதற்கு அவர் முயற்சி செய்தார்.
எம்.ஜி.ஆர் அதனைப் புரிந்து கொண்டார். கலைஞர் கருணாநிதியை முந்திவிட திட்டமிட்டார்.
83 ஜீலை கலவரத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த கலைஞர் தீர்மானித்தார்.
அதனை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர் தமிழக அரசு சார்பாகவே பொது வேலைநிறுத்தம்(பந்த்) நடத்தி கலைஞர் கருணாநிதியை ஓரம் கட்டினார்.
தமிழக அரசியல் போட்டி இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் எதிரொலித்தமைக்கு அது ஒரு சான்று மட்டும்தான். பல சம்பவங்கள் உண்டு. அவ்வப்போது சொல்லப்படும்.
கலைஞரும் டெலோவும்
இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தந்தை செலவா, தளபதி அமிர் போன்றவர்கள் கலைஞர் கருணாநிதியோடுதான் அதிக நெருக்கமாய் இருந்தார்கள்.
கலைஞரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இங்கே அரசியலாக்கி லாபம் தேடவும் தலைவர்கள் தவறியதில்லை.
கூட்டணியின் கையில் இருந்த தலைமைத்துவம் போராளிகள் அமைப்புகளிடம் சென்று விட்டதை கலைஞர் கருணாநிதி தெரிந்து கொண்டார்.
அதனால் – போராளி அமைப்புகள் மத்தியில் தன்னோடு நெருக்கமாகக் கூடிய ஒரு அமைப்பை கலைஞர் கருணாநிதி தேடினர். புளாட் அமைப்பை எஸ்.டி எஸ் சோமசுந்தரத்தின் மூலம் எம்.ஜி.ஆர் வளைத்துக் கொண்டர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கம்யூனிசத்தை நம்பும் அமைப்பாக கருதி அதனைக் கலைஞர் கருணாநிதி தவிர்த்து விட்டார்.
புலிகள் நெடுமாறனோடு நெருக்கமாக இருந்தார்கள். நெடுமாறன் அப்போது கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருந்தவர்.
ரெலோதான் பொருத்தமானதாகப் பட்டது.ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் சந்திரகாசனோடு நெருக்கமாக இருந்தார்.
தந்தை செல்வாவின் மைந்தனான சந்திரகாசன் தான் அப் பொது ரெலோவின் ஆலோசகர் என்றும் கருதப்பட்டார்.
சந்திரகாசன் கலைஞருக்கும் அப்பொது வேண்டப்பட்டவராக இருந்தார். சந்திரகாசன் மூலம் ரெலோவுடன் தனது உறவை இறுக்கிக் கொண்டார் கலைஞர் கருணாநிதி.
இதனை அறிந்த எம்.ஜி.ஆர் ரெலோ அமைப்பு மீது கசப்படைந்தார்.
அதனால் புளெட் அமைப்புக்கு எம்.ஜி.ஆர் அரசின் உதவி சற்று அதிகமாகவே கிடைத்தது.
தமிழ்நாட்டில் சட்ட சபை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் புளெட் அமைப்பினர் தங்கியிருக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது..
எஸ்.டி.எஸ் சோமசுந்தரத்தின் அனுசரணையோடு பயிற்சி முகாம்கள் அமைப்பதற்கான இடங்களையும் ” புளெட்” பெற்றுக் கொண்டது.
இதனால் “83” காலப் பகுதியில் ஆட்பலம், நிதி பலம் போன்றவற்றில் புளெட் அமைப்பே முன்னணியில் இருந்தது.
நக்சலைட் தொடர்பு
ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் க.பத்மநாபா “நக்சலைட்”என்றழைக்கப்படும் தீவிர கம்யூனிஸ்ட் அமைப்புகளோடு தொடர்புகள் வைத்திருந்தார்.
இந்திய மத்திய அரசையும் சோவியத் யூனியையும் தீவிரமாக எதிர்த்து வந்தன நக்சலைட் “குழுக்கள் .
தலைமறைவாக இயங்கிவந்த “நக்சலைட் “குழுக்கள் பல பிரிவுகளாக சிதைந்து கிடந்தன.
“மக்கள் யுத்தக் குழு” என்று அழைக்கப்படும் கோதண்டராமன் தலைமையிலான குழுவோடுதான் பத்மநாபா நெருக்கமாக இருந்தார்.
நிலப்பிரபு ஒருவரை கத்தியால் குத்திவிட்டு ஓடி வந்தார் “நக்சலைட் “குழு உறுப்பினர் ஒருவர் அவருக்கு சென்னையில் சூளைமேட்டில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் பாதுகாப்புக் கொடுக் கப்பட்டது.
“நக்சலைட் “குழுக்களோடு ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்பு தெரிந்திருந்தமையால் இந்திய உளவு பிரிவுகளும், தமிழக மாநில உளவுப் பிரிவுகளும் சந்தேகக் கண் கொண்டுதான் நோக்கிவந்தன.
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் பத்மநாபாவின் “நக்சலைட் ” ஆதரவு நிலைப்பாட்டை சுரேஷ் பிரேமச்சந்திரன், மணி, குணசேகரன்,ரமேஷ் ஆகியோர் விமர்சித்தனர்.
இந்தியப் பிரதிநிதியாக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய மத்திய அரசை விரோதிப்பது புத்திசாலித்தனமல்ல என்ற கருத்தக் கொண்டிருந்தார். இந்தியாவில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு சஞ்சிகை வெளியிட்டது. அதன் பெயர் “ஈழ முழக்கம்”
அதற்கு ரமேஷ் பொறுப்பாக இருந்தார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் அனுமதியுடன் சோவியத் யூனியனை ஆதரிக்கும் கருத்துகள் ஈழ முழக்கத்தில் வெளியாகின.
நபாவின் கருத்து
இந்திய அரசின் உளவுப் பிரிவுகளது சந்தேகங்களை தீர்க்க இக்கருத்து ஓரளவு உதவியது.
“இந்தியா ஒரு முதலாளித்துவ அரசு அது தனது நலனுக்கு மாறாக ஈழத்தில் சோசலிசப் புரட்சி நடத்த ஒத்துழைக்காது” என்பதே பத்மநாபாவின் கருத்தாக நம்பிக்கையாக அப்போதிருந்தது.
83 இன் ஆரம்பப் பகுதியில் பத்மநாபா தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பணம் திரும்பியிருந்தார்.  83 ஜூலை கலவரநேரத்தில் பத்மநாபா யாழ்ப்பாணத்தில் இருந்தார்.
தமிழ் நாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப் வேலைகளுக்கு சுரேஷ் பிரேமசந்திரன் பொறுப்பாக இருந்தார்.
முன்னுரிமை
இயக்கங்களுக்கு பயிற்சி கொடுக்க இந்திய முடிவெடுத்திருந்த விடையம் முதலில் ரெலோவுக்கு தெரியவந்தது.
சந்திரகாசனுகும், இந்திய ஆய்வு பகுப்பாய்வு பிரிவான “றோ” அதிகாரி உன்னிகிருஷ்ணனுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.
அதனால் பயிற்சி வழங்குவதில் ரெலோவுக்கு முன்னுரிமை கொடுக்க “றோ “தீர்மானித்தது.
பத்மநாபா, பிரபாகரன் ஆகியோர் அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.
ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம், புளெட் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்தனர்.
ரெலோவுக்கும் முன்னுரிமை கொடுத்தாலும் புலிகள், புளெட் ,ஈ.பி.ஆர்.எல்.எப் , ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுக்க “றோ ” முன் வந்தது.
வரப்பிரசாதம்.
” ஈரோஸ் ” அமைப்பு அபோது மிகச் சொற்ப உறுபினர்களோடுதான் இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள் ரெலோ புளெட் அமைப்புகள் போல பிரபலமாக அறியப்பட்ட அமைப்பாக “ஈரோஸ் இருக்கவில்லை.
இந்திய ஆயுதப் பயிற்சி என்பது ஈரோஸ் உயிர்வாழக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் போலவே அமைந்தது.
புலிகள் உட்பட சகல அமைப்புகளும் காலப்போக்கில் மறைந்து போகும். ஈரோஸ் மட்டுமே இறுதிவரை நின்று சோசலிச ஈழப் புரட்சியை நடத்தும் என்று தத்துவம் பேசிக் கொண்டிருந்தது ஈரோஸ்.
ஈரோஸுக்கு இருந்த பரிதாபநிலை என்னவென்றால் அதனை தமிழக சோசலிச வாதிகளும் நம்பவில்லை. மிதவாதிகளும் ஆதரிக்கவில்லை. தீவிரவாதிகளும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை
ஈ.பி.ஆர்.எல்.எப்புக்கு சுறு சுறுப்பான இரண்டாம் கட்டத் தலைமை ஒன்று இருந்தது. அதவே அந்த அமைப்பின் மிக பெரிய பலமாக அமைந்தது.
ஈரோஸுக்கு இரண்டாம் கட்ட தலைமை இல்லாமல் இருந்தது அல்லது மிகப் பலவீனமாக இருந்தது.
உதாரணமாக ஈரோஸ் “தர்க்கீகம்” என்றொரு பத்திரிக்கை வெளியிட்டது.
பத்திரிகை மாதாந்தம் ஒழுங்காக வெளிவந்தது பத்திரிகையில் உள்ள விடையங்கள் மட்டும் புரியும் வகையில் இருந்தது.
“தர்க்கீகம்” என்றால் என்ன அர்த்தம் ? விளக்கம் சொல்லவே அவர்களுக்குப் பக்கம் போதவில்லை.
எனவே இந்திய ஆயுதப் பயிற்சி ஈரோஸுக்கு உயிர்ப்பைக் கொடுக்கும் விதத்தில் அமைந்தது.
ஆட்சேர்ப்பு
பயிற்சிக்கு உடனே ஆட்கள் தேவை என்று கேட்டது “றோ”.
இந்தியாவில் இருந்த தலைவர்கள் உடனடியாக யாழப்பாணத்திற்கு செய்தி அனுபினார்கள்.
“உடனடியாக எவ்வளவு பேரை அனுப்ப முடியுமோ அனுபவும்” புலிகள் மட்டுமே ஆள்சேர்ப்பில் நிதானத்தைக் கடைப்பிடித்தார்கள்.
“வருபவரெல்லாம் வரலாம்” என்ற பாணியில் புலிகள் ஆள் திரட்டல் நடத்த முற்படவில்லை.
ரெலோ மினிபஸ் ஒன்றை வடைக்கு அமர்த்திக் கொண்டு ஆள் பிடித்துத் திரிந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப் யாழ்ப்பணத்தில் மட்டுமே நிதானமாக ஆள் திரட்டலில் ஈடுபட்டது.
பத்மநாபாவின் நேரடி உத்தரவு காரணமாக மட்டக்களப்பில் “வருபவரெல்லாம் வரலாம்”பாணியில் ஆள் திரட்டல் நடத்தப்பட்டது.
“ஆயிரம் பேர் வேண்டும் “ என்று மட்டக்களப்பில் இருந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் அறிவித்தார் பத்மநாபா.
மட்டக்களப்பில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர்கள் சிறையில் இருந்தனர்.
கட்டுப்பாட்டை விட உறுபினர்களது கூட்டுத்தொகை மட்டுமே முக்கியமாக இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப், புளெட் அமைப்புகளை வடக்கு -கிழக்கில் வலி நடத்திய இரண்டாம் கட்ட தலைமையினரின் அனுபவமே, கருத்துக்களே தமிழகத்திலிருந்த தலைவர்களால் கணக்கெடுக்கப் படவில்லை.
சிறுகச் சிறுகச் சேர்த்து கட்டிய வீடுபோல, திட்டமிட்டு செயற்பட்டு ஒரு அரசியல் – இராணுவ அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் வளர்ந்து கொண்டிருந்தது.
ஜனநாயக சக்திகளும்,இடதுசாரி சிந்தனையுடையவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.
எல்லாமே பறந்தது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திகொண்டிருன்தவர் கேதிஸ்வரன்.லாபம்தரும் தொழில். அவரை ஒரு நாள் சந்தித்தனர் மூன்று இளைஞர்கள்.
நீண்ட நேர விவாதம் பல நாட்கள் கலந்துரையாடல். தனது தொழிலை எல்லாம் துறந்து விட்டு ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் சங்கமித்தார் கேதிஸ்வரன். அந்த நேரத்தில் இது பெரிய காரியம்.
உறுப்பினர் சேர்ப்பிலும், கட்சியை உருவாக்குவதிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இரண்டாம் கட்ட தலைமை புதிய அணுகு முறையை கடைப்பிடித்தது.
தோழமை -கட்டுக்கோப்பு -விமர்சனம் -சுயவிமர்சனம் என்பவை மிகச்சிறப்பான தலைமைத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் தான் ஆள் சேர்ப்பு இடியாக வந்தது.
இயக்கத்தில் சேருவதற்கு தேவையான தகுதிகள் என்று கூறப்பட்டவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு ஆட்கள் சேர்க்கப்பட்டார்கள்.
“புளெட் “ அமைப்பிலும் இது தான் நடந்தது.
83 ஜூலை கலவரம் இயக்கங்களை நோக்கி இளைஞர்களை தள்ளியது.
ஒரு பேரலை போல அவர்கள் இயக்கங்களை நோக்கி வந்தனர்.
அந்த அலையை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாத இயக்கங்கள் அந்த அலைக்குள் மூழ்கிப்போயின.
“ரெலோவைப் பொருத்தவரை ஆள்சேர்ப்பில் கட்டுக்கோப்பு, அமைப்பு வடிவத்தில் புரட்சிகர தன்மை பற்றி எப்போதுமே கவலைப் படவில்லை.
எந்த இயக்கத்தில் சேருகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே ரெலோ.புளெட் , ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கங்களில் பல நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர்.
உறுப்பினர் தொகையைப் பார்த்த தலைவர்கள் பிரமித்து போனார்கள்.
“நங்கள் எவ்வளவு பெரிய இயக்கமாகிவிட்டோம்” என்று சுலபமான வளர்ச்சியில் மெய்மறந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் முகாமிலிருந்த ஒரு இளைஞர் தாள் ஒன்றில் பிரபாகரன் வாழ்கஎன்று எழுதினர்.
பொறுப்பாளர் அழைத்துக் கேட்டார்.”தோழர் என் இப்படி எழுதினீர்கள்?”
உறுபினருக்கு பொறுப்பாளர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று புரியவில்லை. உறுப்பினர் கேட்டார் இப்படி;
“ஏன் அவர்தானே எங்கள் இயக்கத் தலைவர்?’ 

No comments:

Post a Comment