அல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை - பகுதி-19

உள்ளூராட்சி  தேர்தலை நடத்தப்போவதாக ஜே.ஆர் அரசு அறிவித்தது.
தேர்தலில் பங்குகொள்வது என்று   தமிழர் விடுதலைக் கூட்டணி முடிவு செய்தது. புலிகள் இயக்கம், ஈழமாணவர்  பொதுமன்றம்(G.U.E.S), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOT)  ஆகிய அமைப்புகள்  உள்ளூராட்சி  தேர்தலை  நிராகரிக்க வேண்டும் என்று  முடிவு செய்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டிருந்தன.

சுதந்திரன் எதிர்ப்பு

கூட்டணியின்  குரலாக விளங்கிய  “சுதந்தரன்”  பத்திரிகை கூட்டணியின்  போக்கை கடுமையாக  சாடத்தொடங்கியது.
கூட்டணிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியில்   “சுதந்தரன்”  பத்திரிகையின் பங்கும் குறிப்பிடதக்க  ஒன்றாகும்.
“சுதந்தரன்”  பத்திரிகை தந்தை செல்வநாயகத்தின் மறைவின் பின்னர்  அவரது மகன் சந்திரகாசனின் பொறுப்பில் இருந்ததது.
கூட்டணியை கண்டித்து  “சுதந்தரன்”  வெளியிட்ட கருத்துகளை  சந்திரகாசனும்  தடுக்கவில்லை.
“சுதந்தரன்”  பத்திரிகைக்கு  போட்டியாக  தமிழர்  விடுதலைக்  கூட்டணி ஒரு பத்திரிகை  வெளியிட முன் வந்தது.  கூட்டணியின்  உத்தியோகபூர்வ  பத்திரிகை  என்ற     அறிவிப்போடு    “உதயசூரியன்”  வெளியிடப்பட்டது.
“சுதந்தரன்”  பத்திரிகையின்   பிரச்சாரத்தை  முறியடிப்பதே அதன்  நோக்கமாக   இருந்தது. ஆனாலும் “சுதந்தரன்”  பத்திரிகையோடு    “உதயசூரியனால் போட்டி  போட முடியவில்லை.
உதயசூரியன் பத்திரிகையிலே ” பறவைகளே… பறவைகளே”  எ ன்ற    தலைப்போடு  ஆசிரியர் தலையங்கம் வரும்.
சோறு வேண்டும்

சுந்தரனில் அதன் ஆசிரியராக  இருந்த கோவை  மகேசன்  எழுதும்  அரசில்  மடலுக்கு   ” பறவைகளே… பறவைகளே”  என்ற தலையங்கத்தின்  கீழ் பதில் வரும்.
சோறும்  வேண்டாம்  சுதந்திரமே  வேண்டும். பாலம்  வேண்டாம்… ஈழமே வேண்டும்.  என்று சுமந்திரனில் கருத்து வெளியிடப்படும்.
அதற்கு உதயசூரியன் பின்வருமாறு  பதில் சொல்லும்.    ” பறவைகளே… பறவைகளே  எங்களுக்கு சோறும் வேண்டும் சுமந்திரமும் வேண்டும்”. எங்களுக்கு பாலமும்  வேண்டும. அந்த  பாலத்தை  வைத்தே  ஈழம்  உருவாக்கும்  விவேகமும் வேண்டும்.
என்ற ரீதியில் பதில் சொல்லப்படும்.
சுவையான பதில்தான்.  ஆனால்  சோறும்  வேண்டும்  என்று  சொன்னவர்களை   துரோகிகள், எட்டப்பர்கள் என்று முன்னர் வசை  பாடியவர்களும்   தாங்களே  என்பதை கூட்டணியினர்  மறந்து  போனது  தான் வேடிக்கை.
போராளி  அமைப்புகள்  கடுமையாக   எதிர்க்க   தொடங்கியதால் , உதயசூரியன்  பத்திரிகை  பின்வருமாறு  எழுதியது..
” பறவைகளே… பறவைகளே….  நீங்கள் குழுக்  குழுவாய்  நிற்கிறீர்கள் புழுப் புழுவாய் போவீாகள்”
இதேவேளை  தமிழர் விடுதலைக் கூட்டணியில்    இருந்து “சுதந்திரன்”  பத்திரிகை ஆசிரியர்  கோவை மகேசன், ஈழவேந்தன், தர்மலிங்கம்  ஆகியோர் வெளியேறினார்கள்.
“தமிழீழ  விடுதலை அணி”  என்ற பெயரில் அவர்கள்  இயங்கத்தொடங்கினார்கள்.      கருத்தரங்குகள்  நடத்தி  கூட்டணியின் சரணடையும்   போக்கை  கடுமையாக  விமர்சித்தார்கள்.
இவற்றின்  மத்தியிலே தான்  தமிழர்  விடுதலைக் கூட்டணி   உள்ளுராட்சி  தேர்தலை சந்தித்தது. தேர்தல் இப்பொது வேண்டாம்    என்றனர் இளஞர்கள்.
வேட்பாளர் பட்டியலை தயாரித்தது  தமிழர் விடுதலைக் கூட்டணி.
புலிகள் எதிர்ப்பு

இத்தேர்தலின் போது தான் தமிழர் விடுதலைக்  கூட்டணியை  “துரோகிகள்”  என்று முதன்முதலாக  புலிகள் பகிரங்கமாக  அறிவித்தார்கள்.
பிரபாகரன் பெயரில் புலிகளால் வெளியிடப்பட்ட  பிரசுரத்தில்  பின்வருமாறு  தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ  மக்கள் மீது  கட்டவிழ்த்து   விடப்பட்டிருக்கும்  அரச  பயங்கரவாத  ஓநாயின் வாயிலிருந்து    வடிந்துகொண்டிருக்கும்   குருதி கூட காயாத நிலையில், உள்ளூராட்சித்  தேர்தலில் எம் மக்களின் ஒரு சிலரின்     வாக்குகளை  வெற்றி  கொள்வதன்  மூலம்  வெளியுலகுக்கு  அரச பயங்கரவாதத்தை நியயாயப்படுத்த முனையும்   சிங்கள இனவாத அரசுக்கு சார்பாக  இனியும்  இங்கு  இயங்கிகொண்டிருக்கும்  துரோகிகளின் செயல்களை  இனியும்  எம்மால்  அனுமதிக்க முடியாது.
“தமிழீழ மக்கள்  சிறிலங்காவின்  தோ்தல் மாயையில் இருந்து விடுபடவேண்டும்  வெகுஜன ஆயுதபோராட்டதிற்கு  அணிதிரள வேண்டும்.”
இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி  சொன்ன பதில் இது.
“தமிழீழத்தின்  சகல நிர்வாக அமைப்புகளையும்   நாம்  கைப்பற்றவேண்டும். அதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை  நடத்திச் செல்லமுடியும். இதனை  தம்பிமார் விளங்கி கொள்ள  வேண்டும்”
என்று  சொன்னது கூட்டணித் தலைமை. அடிக்கடி அமிர் சொல்லுவார்.
“ஒரு கப்பலுக்கு ஒருமாலுமிதான் இருக்கமுடியும். அப்படியானால்தான்   கப்பல் கரைசேரும். தம்பிமார் மாலுமி தேவையில்லை என்கிறார்கள்” என்பதுதான் அமிர் சொல்லும் விளக்கம்.
கப்பல்   கவிழ்வதை  வேடிக்கை பார்க்கும்  மாலுமி வேண்டாம்  என்கிறார்கள் இளஞர்கள்.
கப்பல்  திசை மாறுகிறது  எ்னறு சொன்னால் “உங்களுக்கு விவேகம் போதாது’ என்று சொல்லி விட்டு, கப்பலில் இருப்பவர்களின்  உயிர்களை  பகடைகாய்களாக்கும் மாலுமிகள் தேவைதானா?
என்று  கருத்தரங்குகளில்  சுடச்சுட  பதில் கொடுத்தது  ஈழமாணவர் பொதுமன்றம்.
பொதுக் கூட்டங்களில்  டேவிட்சனும், கருத்தரங்குகளில் ரமேஷ், சிறிதரன் ஆகியோரும்     ஈழமாணவர் பொதுமன்றம் சார்பாக கூட்டணியின் கருத்துக்களுக்கு  உடனுக்குடன் பதில் அளித்தனர்.

மக்களின் சந்தேகம்

இந்த இடத்தில் ஒருவிடயத்தை சொல்லவேண்டும். கூட்டணிக்கு அப்போதிருந்த  பிடிப்பு பலமானது.
சட்டத்தரணிகள், ஆங்கில புலைமையாளர்கள், அனுபவசாலிகள் இருந்தால்தான் தலைமை மக்களில் ஒருபகுதியினர் கருதிக்கொண்டிருந்தனர்.
தம்மிடம்  இல்லாதது இன்னொருவரிடம  இருந்தால், தம்மை தாழ்வாக கருதிக்கொள்ளும் இந்த மனப்போக்கு தான் “திறமை”   என்ற பெயரில்  தவறான சிலர்  தலைவர்களாகவும்  காரணமாக இருந்தது.
கருத்தரங்குகளில்  மக்கள் நிறையக் கேள்விகள் கேட்டனர்.  எல்லாவற்றுக்கும்  ஈழமாணவர் பொதுமன்றம் பொறுமையாக பதில்சொன்னது.
நீங்கள்  சின்ன  பொடியல். பெரிய  தலைவர்களாலேயே முடியாத காரியத்தை  நீங்கள் எப்படி செய்யப்போகிறீர்கள்?
என்றெல்லாம்  கேள்விகள் எழுப்பப்பட்டன. கூட்டணி  தலைவர்கள் பிழையான வழியில் செல்கிறார்கள் என்பதை மக்கள்  ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் கூட்டணிக்கு  மாற்றாக  தலைமைத்துவத்தை   ஏற்படுத்த முடியுமா?  என்பதே  மக்களின்  கேளவியாக இருந்தது.
இந்த கேள்விக்கு பதில் சொல்வதிலும், இளைஞர்களாலும் அரசியல் நடத்த முடியும்  எனன்பதை நிரூபித்தாலும்  ஈழமாணவர்  பொதுமன்றம்   மேற்கொண்ட    பிரச்சார  முறைகள்   முக்கிய   பங்கு  வகித்ததை  மறக்க  முடியாது.
திட்டமிட்ட  உத்வேகமான  பிரச்சாரத்தை  குறைந்த ஆட்பலத்தோடு  வடக்கு-கிழக்கு   முழுவதும்  நடத்திக்காட்டியது   ஈழமாணவர்  பொதுமன்றம்.
எண்ணிப்பார்த்தால்  50பேர் கூட 1983க்கு  முன்னர்     ஈழமாணவர்  பொதுமன்றதில் முழு நேர உறுப்பினர்களாக இருக்கவில்லை.
ஆனால்  பிரச்சாரத்தில் மட்டும்   தேர்தலில்  போட்டியிடும் திட்டத்தை  நிறுத்த முடியுமா?
எச்சரிக்கை

எடுத்துச்சொன்னால்  கேட்கும்  மனப்பக்குவம்  இல்லாத போதுதான்  அடித்துச் சொல்லும் எண்ணம் உருவாகுகிறது. 1983 ஆம் ஆண்டு  உள்ளூராட்சி  தேர்தலிலும்   அதுதான் நடந்தது.
கூட்டணி  வேட்பாளர்களின்  வீட்டுக் கதவுகள்  ஆயுதமேந்திய  புலிகளால்  தட்டப்பட்டது.
தேர்தலில் போட்டியிடக்  கூடாது என்றார்கள் புலிகள்.
மறுநாளே  வேட்பு  மனுக்களை  வாபஸ் பெற்றனர் கூட்டணி வேட்பாளர்கள் சிலர்.
கூ ட்டணியின் பட்டியலில்  யாழ்.மாநகரசபை  மேயர்  பதவிக்கானவராக  போட்டியிட்டவர் சட்டதரணி நாகராசா. அவரும் எச்சரிக்கப்பட்டார்.
ஐக்கிய  தேசியக்  கட்சியின்  சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்கள்  எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.
“இனி நடவடிக்கைதான்” புலிகள்  முடிவு செய்தனர். திட்டம் தயாரிக்கப்பட்டது.
1983 ஏப்பிரல் 29 ஆம் திகதியன்று  பருத்திதுறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி ஆகிய  மூன்று இடங்களிலும்   புலிகள் நடவடிக்கைகளில்  இறங்கினர்.
மூவர் மீது பாய்ச்சல்

ஈ.வி.இரத்தின சிங்கம் (பருத்திதுறை), எஸ்.எஸ். முத்தையா (சாவகச்சேரி) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவரும் ஐ.தே.கட்சி  வேட்பாளர்கள்.
அதே  தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட   இன்னொருவர்   எஸ்.எஸ். இராஜரத்தினம்.  இவர் ஐ.தே. கட்சியின்  யாழ்.மாவட்ட அமைப்பாளராக   அப்போது   விளங்கியவரான   கே.கணேசலிங்கத்தின்  மெய்க்காப்பாளராக  இருந்தவர்.
கே.கணேசலிங்கம் தான் தற்போது  கொழும்பு மேயராக இருக்கிறார்.
இதையடுத்து ஐ.தே.கட்சி வேட்பாளர்கள்  பலர்   வாபஸ்  பெற்றனர்.
“… ஆகிய நான்  கட்சி உறுப்பினரோ   ஆதரவாளனோ இல்லை  என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்”   என்ற விளம்பரங்கள்  ” ஈழநாடு”  பத்திரிகையில்  வெளிவந்தன.   அவற்றை  கண்ட  வாசகர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
தனது ஆதரவாளர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்கியது  ஐ.தே.கட்சி அரசு.  கை துப்பாக்கியோடும், பாதுகாப்போடும்  அட்டகாசமாக நடமாடினார்   ராஐசூரியர்.
இவரை மண்ணென்ணை  ராஐசூரியர் என்று அழைப்பார்கள்.
ராஐசூரியர்   மண்ணென்ணை  கோட்டா  மூலம்  லட்சங்களை குவித்தவர்.
மேலும் இருவர்

துப்பாக்கியோடு    கார் ஒன்றில் சென்ற  ராஐசூரியர் 11.8.83 அன்று  புலிகளால்  வழி மறிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னர் 3.6.83 அன்று  ஐ.தே. கட்சியை  சேர்ந்த  திலகர் என்பவர் புலிகளால்  சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவற்றையடுத்து  ஆளும் கட்சி ஆதரவாளர்கள் ஓடி  ஒளிந்தனர்.  ஐ.தே.கட்சிக்கு வடக்கில் அமைப்பாளர்களே இல்லமல் போனார்கள்.
தமிழர் விடுதலைக்  கூட்டணி வேட்பாளர்கள்  பலர்  வாபஸ்பெற்றபோதும்  தேர்தலில்  போட்டியிடுவது  என்ற முடிவை  கூட்டணி மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று.

கூட்டணி வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட்டவர்  சண்முநாதன் (மணி). இவர் நல்லூர் கோயிலடியை   சேர்ந்தவர்.
தீவிரமான கூட்டணி அபிமானி. அவரது வீட்டுக்குச் சென்ற புலிகள், “தேர்தலில் போட்டியிட வேண்டாம்”  என்று கேட்டனர்.
சண்முநாதன் உடனடியாக    தலைவர் சிவாவுக்கு தகவல்  அனுப்பினார். சிவா அப்போது நல்லூரில் இருந்த கூட்டணி அலுவலகத்திலிருந்தார்.
தபால்கள் மூலமாக வாக்கு கேட்கும்  பிரச்சாரத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
“ஐயா! சண்முநாதன் விலகபோறாராம். போட்டியிட வேண்டுமானால் பாதுகாப்பு கேட்கிறார்”. என்றார் செய்தி கொண்டு வந்தவர். சிவா டென்ஷன் ஆகிவிட்டார்.
“நாங்கள் வீடுவீடாக பாதுகாப்பு கொடுக்க முடியமா?  விரும்பினால்  போட்டியிடட்டும். விருப்பம் இல்லாவிட்டால் விலகட்டும்.
கூட்டணி  திணறிப்போய்  கலகலகத் தொடங்கியதை அந்த உரையாடல் பிரதிபலித்தது.
1983 மே மாதம்  18ம் திகதி  உள்ளூராட்சி  தேர்தல்  வாக்களிப்பு ஆரப்பித்தது.  வாக்களிப்பு  நிலையங்களுக்கு   பலத்த  பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
கூட்டணித்  தலைமைக்கு  பலத்த அடி.  வாக்களிப்பு  மந்தமாகவே  நடந்துகொண்டிருந்தது.
தேர்தலில்  வாக்களிக்குமாறு  தமிழர்  விடுதலைக் கூட்டணி  விடுத்த வேண்டுகோளை  வடமாகாணத்தில்  80% வீதத்துக்கு அதிகமான மக்கள் நிராகரித்தனர்.
வாக்களிக்கும்  வசதியிருந்தும்  80%  வீதமான  மக்கள்   நிராகரித்த  தேர்தலை  ஜனநாயகம்  பேசிய  கூட்டணி  தலைமையினர்  வெற்றி   என்று   கொண்டாடியது  தான்  வேடிக்கை.

வாக்களிப்பு  நடந்து  முடிவதற்கு  இடையில்  தாக்குதல்  ஒன்றை  நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
யாழ்பாணம் கந்தர் மடத்தில்  இருந்த  பாடசாலையில் வாக்களிப்பு நிலையம்   ஒன்று இருந்தது. அதணை   நோக்கி  புலிகளின் அணி சைக்கிள்களில்  சென்றது.
அந்த அணியில்  கிட்டுவும்  இருந்தார். வாக்குச்சாவடியை  இராணுவத்தினரும், பொலிஸாரும்  கூட்டாக காவல் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment