அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 115

இந்தியப் படையினர் ஹெலியில் இருந்து சாவகச்சேரி சந்தையை நோக்கி ஏவப்பட்ட ஷெல்கள்!! எங்கும் பரவிக் கிடந்த சடலங்கள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -115)


• இந்தியப் படையோடு போர்நிறுத்தம்
• புலிகள் மூன்று நிபந்தனைகள்!
• பெண் தாக்கினார்
யாழ் நகரைக் கைப்பற்றுவதற்காக கிட்டத்தட்ட 16 நாட்கள் இந்தியப் படை போரிடவேண்டியிருந்தது.
யாழ் நகர் இந்தியப் படையின் கையில் வீழ்ந்த பின்னரும் புலிகள் நகருக்குள்ளும் வெளியேயும் நடமாடித் திரிந்தனர்.

புலிகளின் அணிகள், சில தலைமையோடு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. தலைமையுடன் தொடர்பு கொள்ளும் வரை தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அந்தப் பிரிவுகளின் நோக்கமாக இருந்தது.
நவாலி, மானிப்பாய் பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் மறைந்திருந்தனர். யாழ் நகர் கடற்கரைப் பகுதிக்கு அருகிலுள்ள கவுதாரிமுனை, மண்ணித்தலை என்னும் பகுதிகளிலும் பல உறுப்பினர்கள் சென்று மறைந்திருந்தனர்.
புலிகளின் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரும், புலிகள் இயக்க மட்டக்களப்பு மாவட்ட தளபதியுமான அருணாவும் அவரது குழுவினரும் யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தனர்.
சுண்டிக்குளியில் குருசோ வீதிக்கு அருகில் அந்த வீடு இருந்தது. முழுவதும் கட்டி முடிக்கப்படாத வீடு அது. அங்கு இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்றுதான் அருணா குழுவினர் அங்கு தங்கியிருந்தனர்.
“யார் அந்த அருணா?” என்று விசாரித்தனர் இந்தியப் படையினர்.
“இலங்கை அரசுடன் நடைபெற்ற அகதிகள் பரிமாற்றத்தின்போது விடுதலையானவர். புலிகளின் தளபதிகளில் ஒருவர்.” என்று தெரிவிக்கப்பட்டது.
அது போதாதா? ஒரு படைப்பிரிவே புறப்பட்டுச் சென்று அருணா இருந்த வீட்டை முற்றுகையிட்டது.
மறைந்திருந்த வீட்டில் உறங்கி விட்டு காலையில் எழுந்து வெளியே வந்தபோதுதான் அருணாவும் குழுவினரும் சுற்றி வளைக்கப்பட்டனர்.
படையினரைக் கண்டதும் அருகிலுள்ள மதில் ஒன்றின் மீது தாவிப் பாய்ந்தார் அருணா. இந்தியப் படையினர் சற்று அயர்ந்திருந்தால் அருணா தப்பியிருப்பார்.
அருணா பாய்ந்த போது இந்தியப் படையினர் சுட்டனர். அருணா அப்படியே சாய்ந்தார். அவருடன் வந்தவர்களில் இரண்டு பேரும் இந்தியப் படையினரின் துப்பாக்கி வேட்டுக்களுக்கு பலியானார்கள்.
கிட்டுமீது மாத்தையா குழுவினர் கைக்குண்டு வீசினர்.
அப்போது புலிகளின் காவலில் இருந்த ஏனைய இயக்க உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கந்தன் கருணைப் படுகொலை என்றழைக்கபடும் அக்கொலை வேட்டையை மேற்கொண்டவர் அருணா என்று முன்னர் விபரித்திருந்தேன் அல்லவா? அந்த அருணாதான் சுண்டிக்குளி சுற்றிவளைப்பில் பலியானார்.

புகையிரத நிலைய பயங்கரம்
யாழ் புகையிரத நிலையத்திலும் அகதிகள் தங்கியிருந்தனர். யாழ்ப்பாணம் குருநகர் மற்றும சின்னக்கடைப் பகுதிகளை நோக்கி இந்தியப்
படையினர் ஷெல் வீச்சுக்களை சரமாரியாக மேற்கொண்டனர். அதனால் அப்பகுதிகளில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி புகையிரத நிலையத்துக்குள் தஞ்சமடைந்தனர்.
சுமார் 600 பேர் வரை புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தனர். யாழ் புகையிரத நிலையப் பகுதியில் புலிகளும் ஆயுதங்களுடன் நடமாடினார்கள்.
புகையிரதப் பாதை வழியாக இந்தியப் படையினர் முன்னேறிச் சென்றனர்.
ரயில் பெட்டிகளில் மறைவில் இருந்து கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
ஏற்கனவே காங்கேசன்துறை ரயில் பாதைவழியாக இந்தியப் படையினர் கொக்குவில் வரை முன்னேறி பரா கொமாண்டோக்களை மீட்டெடுத்தனர்.
அதனால் யாழ் நகருக்குள்ளும் புகையிரதப் பாதை வழியாக படைகள் முன்னேறலாம் என்று புலிகள் எதிர்பார்த்தனர்.
எனவே ரயில் பாதையோரங்களில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர்.
ரயில் பாதை வழியாக முன்னேறிய படையினர் கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டனர்.
கண்ணிவெடி வெடித்த சத்தமும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகளுக்குத் தெளிவாகக் கேட்டன.
கண்ணிவெடித்தாக்குதலில் படையினர் சிலர் பலியானதும், அவர்கள் பின்னால் வந்த படையினர் கடும் கோபம் அடைந்தனர்.
புலிகள் அப்பகுதியில் பெருமளவாக நிலைகொண்டிருப்பதாக நினைத்தனர்.

ரயில் பெட்டிகளின் மறைவுகளுக்குள் பதுங்கியிருந்து கொண்டு புலிகளின் துப்பாக்கிகள் முழங்கிக் கொண்டிருந்தன.
உண்மையில் புலிகள் பதினைந்து இருபது பேர்தான் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இந்தியப் படையினருக்கு அது தெரிய நியாயமில்லை.
நூற்றுக்கணக்கான புலிகள்தான் திரண்டுவந்து தாக்குவதாக நினைத்தனர்.
உடனடியாக ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர் இந்தியப் படையினர். ரயில் நிலையம் மீதும் ஷெல்கள் விழுந்தன. ரயில் நிலையத்தின் அருகிலுள்ள வீடுகளும் ஷெல்களால் நாசமாகின.
ரயில் நிலையத்துக்குள் இருந்த சுரங்கப்பாதைக்குள் அகதிகள் பலர் ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டனர். ரயில் நிலையத்துக்குள் விழுந்த முதலாவது n~ல் ஒருதாயையும் மகளையும் பலியெடுத்தது.
அதேநேரம் ரயில்வே கடவை அருகில் நின்றிருந்த இந்தியப் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். அத்தாக்குதலில் இந்தியப் படையினர் சிலர் கொல்லப்பட்டனர்.
திடீர்த்தாக்குதலை நடத்திவிட்டு புலிகள் பாய்ந்து சென்றுவிட்டனர். இந்தியப் படையினர் பதிலடியாக n~ல் தாக்குதலை உக்கிரமாக்கினார்கள்.
ரயில் நிலையத்தை நோக்கி சரமாரியாக சுட்டபடியே படைகள் முன்னேறின.
அவலக்குரல்
படையினர் சுட்டுக்கொண்டே முன்னேறி வருவதைக் கண்ட அகதிகள் அவலக்குரல் எழுப்பினர்.
தொடர்ந்து சுட்டுக் கொண்டே முன்னேறினார்கள் படையினர்.
‘ஐயோ, ஐயோ…’ என்று கதறியபடியே ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தப்பி ஓடத் தொடங்கினார்கள்.
கல்லோயா அபிவிருத்தி சபையில் பணியாற்றிய மூத்ததம்பி சாமுவேல் என்பவரும் ரயில்நிலைய முகாமில் இருந்து உயிர் தப்பியவர்களில் ஒருவர்.
‘முறிந்தபனை’ நூலாசிரியர்களுக்கு அவர் சொன்ன தகவல் கீழே வருகிறது.
“22ம் திகதி காலையில் சற்றே அமைதி நிலவியது. ஆனால் பின்னேரம் பலத்த ஷெல் தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன… பிற்பகல் 3.30 மணியளவில் நாங்களும் அங்கு போய்ச் சேர்ந்தோம்.
திடுமென பருத்தித்துறை வீதியிலிருந்து ரயில் பாதை வழியாக புகையிரத நிலையம் நோக்கி இந்தியப் படை முன்னேறி வந்தது.
அவர்கள் எங்களை நோக்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். ஈவிரக்கமில்லாமல் அவர்கள் எல்லாவற்றின் மீதும் சுட்டுத்தள்ளினார்கள். அகதிகள் பயத்தில் சிதறியோடினார்கள்.
கிட்டத்தட்ட 30 முதல் 40 சடலங்கள்வரை எங்கும் பரவிக் கிடந்தன.
இரண்டு தோட்டாக்கள் என் தலையில் இரு மருங்கிலும் சீறிப்பாய்ந்து சென்றன. எனது மனைவிக்கு வயிற்றில் அடிபட்டு இரத்தம் பெருகி ஓடியது.
எனக்கும் காலில் அடிபட்டது. நல்ல துப்பாக்கிச் சூடு நின்றுவிட்டது. அது கடவுளின் கிருபையாக இருக்கலாம்.
எனது மனைவி இறந்து போனாள். என் மனைவியின் உடலை அன்றிரவு கொண்டு செல்ல முடியவில்லை!” என்று தன் சோகக் கதையை சொல்லியிருக்கிறார் சாமுவேல். அப்போது அவரது வயது 69.
சாவகச்சேரியில் விபரீதம்

1987 அக்டோபர் 27- சாவகச்சேரி சந்தையில் மக்கள் கூடியிருந்தனர். பொருட்களை வாங்கிக் கொண்டு போய்விடும் அவசரம்.
எப்போது ஊரடங்கு வரும், எப்போது முடியும். எப்போது மறுபடியும் கடைகள் திறக்கும் என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியாத நிலை.
திடீரென்று சந்தைக்கு மேலே இந்தியப் படை ஹெலிகொப்டர் ஒன்று வட்டமிட்டது. அப்பகுதியை நோட்டமிட்டது.
புலிகளின் வாகனம் ஒன்று தெருவில் சென்று கொண்டிருப்பதை ஹெலி கவனித்து விட்டது.
அது பின்புறம் கூரையில்லாத வாகனம். டட்ஸன் பிக் அப் ரக வாகனம். பின்புறத்தில் கலிபர் 50 ரக துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்தது. ஹெலி தாழப் பறந்து வந்ததால் அதனால் தாக்க முடியவில்லை.
ஹெலிகொப்டர் அந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை. நோட்டமிட்டுக் கொண்டு பறந்து மறைந்து விட்டது.
அதன் பின்னர் சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் அதே ஹெலிகொப்டர் சாவகச்சேரி சந்தையின் மேலாக பறந்து வட்டமிட்டது.
அப்போது அப்பகுதியில் எங்குமே புலிகளின் நடமாட்டமோ, வாகனங்களோ கிடையாது. மக்கள்தான் சந்தையில் கூடியிருந்தனர்.
திடீரென்று ஹெலியில் இருந்து சந்தையை நோக்கி ஷெல்கள் ஏவப்பட்டன. மக்கள் சிதறி ஓடினார்கள். கட்டிடங்களுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர்.
ஹெலி பறந்து சென்று விட்டது. ஷெல் சத்தங்கள் ஓய்ந்து விட்டன.
மரண ஓலங்கள் எழத் தொடங்கின.
முப்பது முப்பத்தைந்து பேர் வரை ஹெலி தாக்குதலில் பலியானார்கள்.

இந்தியப் பத்திரிகைகள் கண்டனம்
இந்தியப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை இந்தியப் பத்திரிகைகள் பல உடனுக்குடன் வெளியிட்டன.
இந்தியாவின் பிரபல ஆங்கில சஞ்சிகையான ‘இந்தியா ருடே’ நவம்பர் 15ம் திகதிக்குரிய தனது வெளியீட்டில், இந்தியப் படை
நடவடிக்கைகளை விமர்சனக் கண்ணோட்டத்தில் தெரியப்படுத்தியது.
தனது கட்டுரைக்கு ‘இந்தியா ருடே’ சூட்டியிருந்த தலைப்பு இதுதான்;:
‘இரத்தக்கறை படிந்த ஒப்பந்தம்’
இந்தியாருடே கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.
“…புலிகளின் பலத்தைப் பற்றியும், அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பற்றியும் இந்தியப் படையினர் தப்புக் கணக்குப் போட்டிருந்தனர்.
யாழ்நகரை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு பாதையிலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. தெருக்களின் நடுவே குழிகளில் வெடிமருந்துகள் நிரம்பிய பீப்பாய்கள் புதைக்கப்பட்டிருந்தன. பொறி வெடிகளும் பரவாலாகக் காணப்பட்டன.’
ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து இயக்கக்கூடிய வகையில் பொறிவெடிகள் வைக்கப்பட்டிருந்தன.
புலிகளிடம் இருந்த நவீனரக ஆயுதங்களும் இந்தியப் படைக்கு அபாயம் ஏற்படுத்தின. புலிகளின் தாக்குதலால் ஐந்து ஹெலிகள் சேதமாகிவிட்டன.
பிரமாதமாகப் பிரசாரம் செய்யப்பட்டது போல புலிகள் போதுமானளவு ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. பெருவாரியான ஆயுதங்களை யாழ் குடாநாடெங்கும் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கட்டிடங்களில் புலிகள் பொறிவெடிகளை வைத்திருந்தனர். அவற்றை தூரத்தில் இருந்து இயக்கினர்.
வீதிவழியாக தொடராகச் சென்ற இந்தியப் படையினர் 29 பேர் பொறி வெடித்தாக்குதலால் பலியாகினர். அதேயளவு தொகையினர் படுகாயமடைந்தனர்.
இதன் காரணமாக இப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ரி.52 ரக டாங்கிகள் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டது.
இரண்டாயிம் அடிகளுக்கு கீழே புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுப்பதற்காக எம். 24 ரக, குண்டு துளைக்காத உருக்கு கவசம் போர்த்திய ஹெலிகள் அனுப்பப்பட்டன.

பிரிகேடியர் பாராட்டு
கெரில்லா யுத்தத்தில் பயன்படுத்துதற்கேற்ற ஏ.கே.47, டாங்கி எதிர்ப்பு ஆயுதமான ஆர்.பி.ஜி-7, 60 மில்லிமீட்டர் ஷெல்களை வீசக்கூடிய மோடடார்கள் போன்றவை புலிகளிடம் ஏராளமாகக் காணப்பட்டன.
தென் பிராந்தியக் கொமாண்டின் துணைப்பிரிவு கொமாண்டர் பிரிகேடியர் குல்வந்த்சிங் பின்வருமாறு கூறுகிறார்.
“இலக்குகளைக் குறிபார்த்து சுடுவதில் அவர்கள் அவ்வளவு தேர்ச்சி பெற்றிக்காத போதும், உண்மையில் வேங்கைகளைப் பேலவே போரிட்டனர்.”
மார்தா படைப்பிரிவைச் சேர்ந்த 38 வயதான ராவ்சாஹேப் கபேத் கூறுகிறார்: “நாங்கள் எதிர்கொண்டு போரிடுவோர் பெரும்பாலும் சிறுவர்களே!
இருப்பினும் அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன. மழை பொழிவது போல சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.”
பெண் தாக்கினார்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வீட்டில் உயர் அதிகாரி ஒருவர் தேடுதலில் ஈடுபட்டார்.
அந்த வீட்டில் ஒரேயொரு இளம்பெண் மட்டுமே இருந்தார்.
தேடுதலை முடித்துக்கொண்டு அந்த உயர் அதிகாரி திரும்பிய போது ஒரு ‘ஸ்ரென் கண்’ அவருடைய முதுகைத் துளைத்தது.
பத்து வயதுக்கு மேற்பட்ட ஆணோ பெண்ணோ எவரையும் நம்பமுடியவில்லை.
சிறு பெண்கள் தங்கள் உடைகளுக்குள் துப்பாக்கிகளை மறைத்துவந்து சந்தர்ப்பம் பார்த்து சுட்டுவிட்டு ஓடுகிறார்கள். இதனை மற்றாஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த சிப்பாய் கோவிந்தன் கூறினார்.
41வது இன்ஃபெண்டரி பிரிகேடைச் சேர்ந்த பிரிகேடியர் மஞ்சித் சிங் பின்வருமாறு கூறுகிறார்: “அவர்கள் நன்கு உற்சாகமூட்டப்பட்டவர்களாகப் போரிடுகின்றனர்.
ஆனால் நாங்களோ ஒரு கையைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு மற்றொரு கையினால் போரிட மட்டுமே வேண்டியுள்ளது. கட்டிடங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது எமக்கான கட்டளை.”
மாத்தையா நிபந்தனை
பாக்கு நீரிணையில் கடற்படைக் கண்காணிப்புக்களையும் கடந்து தமிழ்நாட்டுக்கு புலிகளின் படகுகள் சென்று திரும்புகின்றன.
இந்தியாருடேக்கு பிரபாகரனும், மாத்தையாவும் பேட்டி அளிக்கும் போது, ‘எமது கைவசம் போதுமான அளவுக்கு வெடிமருந்துகள் உள்ளன.
ஆயுதங்கள் போதாதுதான். ஆனால் எமது விநியோக பாதைகளை துண்டித்துவிட்டதாக அமைதிப்படை கருதுவது வெறும் கற்பனை” என்றனர்.
அக்டோபர் 27ம் திகதி (87) ‘இந்தியாருடே’க்கு மாத்தையா அளித்த பேட்டியில் போர் நிறுத்தம் தொடர்பாக மூன்று நிபந்தனைகளைக் கூறியுள்ளார்.
1. இந்தியப் படையினர் உடனடியாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
2. அக்டோபர் 10ம்திகதி தாம் நிலை கொண்டிருந்த இடங்களுக்கு இந்தியப் படை திரும்பிச் செல்ல வேண்டும்.
3. போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின்னரே ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடியும்.
இந்த நிபந்தனைகளை இந்தியா எந்நிலையிலும் ஏற்கப்போவதில்லை.
நிவாரண நடவடிக்கைகள்
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை தம் வசமாக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் உணவு மற்றும் அத்தியாவசிப் பொருட்களைக் கொண்டு சென்றுகுவித்துள்ளது.
உடைந்து தகர்ந்த கட்டிமங்களை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கலாம்.
அரச மருத்துவமனையை செப்பனிடவும், இயக்கவைக்கவும் டாக்டர்கள், தாதிமார்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டனர். தெருக்களைத் திருத்த பொறியியலாளர்களும் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவற்றின் மூலமாக ‘இடைக்கால நிர்வாகம்’ இயக்க வாய்ப்புக் கிட்டும். பொலிஸ் படையொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கைகளின் வெற்றி தோல்வி ‘ஒப்பரேஷன் பவான்’ நடவடிக்கையின் போது உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் தொகையை வைத்தே தீர்மானிக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் 200 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் இந்தியப் படையினரால் நிர்மூலமாக்கபட்டன. யாழ் மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானது என்று புலிகள் கூறுகின்றர்.
யாழ் கத்தோலிக்க ஆலயம் பொது மக்களின் இழப்பை 100 எனக் கூறியது. யுத்தம் தொடங்கும் போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்த வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பல கதைகளைக் கூறுகின்றனர்.
தங்களின் ஒரு படைவீரன் தாக்குண்டு வீழ்ந்தால் இந்தியப் படையினர் பொது மக்கள் மீது ஈவிரக்கம் இல்லாது தாக்குதல் நடத்தியதையும், பல தமிழ்ப் பெண்களை பாலியன் வன்முறைக்கு உள்ளாக்கியதையும் குறிப்பிடுகின்றனர்.
இதனால் மக்கள் ஐPமுகு என்பதை ஐNNழுஊநுNவு PநுழுPடுநு முஐடுடுஐNபு குழுசுஊநு (அப்பாவி மக்களைக் கொல்லும் படை) என்று வர்ணிக்கின்றனர்.
மேற்கண்டவையெல்லாம் ‘இந்தியா ருடே’ வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டவை.
‘இந்தியா ருடே’ கட்டுரையில் சில மிகைப்படுத்தல்களும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment