Monday, 19 November 2018

மாவீரர்கள்- பிரிகேடியர் பால்ராஜ்

முதற்பயணம்

அது 1984 ஆம் ஆண்டு.

செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.

அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர்.

விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர்.

லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும்.

செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும்.

தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர்.
நம்பிக்கையோடு தொடங்கிய பயணம்;; இறுதிவரை நல்லபடியாக முடிய வேண்டும். உழவுப் பொறியொன்றில் எல்லோரும் ஏறினர்; மகிழ்ச்சியோடு அந்தச் செம்மண் வீதிகளைக் கடந்து விரைந்து கொண்டிருந்தனர்; தமது விடுதலைக்கான பயணத்தில்.

செம்மலையைத் தாண்டி ஒதியமலைக்குக் கிட்டவாக் உழவுப்பொறி விரைந்து கொண்டிருக்க அந்த விடிகாலையை பயங்கரமாக்கி; நடந்தேறியது அந்தத் துயரம்.

பற்றைக்காடுகளுக்குள் மறைந்து கிடந்த சிங்களப் பேய்கள்;; தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத ஒரு பதுங்கித் தாக்குதல்.

சுதாகரிக்கவோ.... நிதானிக்கவோ முடியாத அளவுக்கு; கடுமையான தாக்குதல். பெரும் எதிர்பார்க்கையோடு பயணித்த் அந்தப் புதிய போராளிகளை; எதிரி ஒவ்வொருவராகச் சரித்து வீழ்த்தினான். விடுதலைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியிலேயே சந்தித்த பெரும் இடர்; அந்தத் தாக்குதலில் தப்பிப்பிழைப்பதென்பதே பெரும் கெட்டித்தனமான் அதிஸ்டவசமான செயல்.

வீழ்ந்தவர்கள் பிணங்களாகச் சரிய உயிரோடு அதிலிருந்து தப்பியவர்கள்; இரண்டே இரண்டு பேர்தான்.

அந்த இரண்டு பேரில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். பயிற்சிக்காக வண்டியேற வேண்டியவர்; மருத்துவச் சிகிச்சைக்காக வண்டியேற வேண்டியதாயிற்று.
தமிழ்நாட்டில்; காயத்தைக் குணமாக்கி அங்கேயே ஒன்பதாவது பயிற்சி முகாமில்; பயிற்சி முடித்து வெளியேறினார் தளபதி பால்ராச்.

அந்தத் தாக்குதலில் தளபதி பால்ராச்சைப் போராளியாக இணைத்த லெப்.காண்டீபன் வீரச்சாவடைந்து விட அதுவே அவரின் முதல் துயராகவும்; முதற்களமாகவும் அமைந்தது.
மரணவலயம் 

மேஜர் பசீலன். வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.
இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்த லையில் குட்டிவிடுவதில்; வல்லவன்.

வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில்; புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள்; நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில்; தளபதி பால்ராச் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு; திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்குபடுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி; அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு; போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.
போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்;; திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும்; அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில்; போராளிகள் நிலையெடுக்க வேண்டும்;. ஒரு திகிலூட்டும் திட்டத்தை; மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள்;; கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி; நிலையெடுப்பர்; அந்தப் பகுதியை; தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு. அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும்;- அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும்;; இராணுவ ஆற்றலும்; வேண்டும்.

யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்; அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி ~பால்ராச். தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி; பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை; தளபதி பால்ராச் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.
சூட்சமம்

இளம் போராளிகளுக்கான் பயிற்சிக் கல்லூரி அது. அங்கே பல்வேறு நிலைப்பட்ட போராளிகளும் இருந்தனர்.களம் என்பது சாதாரணமானதல்ல மரணத்தோடு விளையாடி மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக் வெற்றியைச் சுவீகரிக்க வேண்டிய வீரத்திடல். அந்த வீரத்திடலில்; எதிரியோடு விளையாடி அனுபவம் பெற்ற எமது பல தளபதிகள்; நிறைந்த அனுபவங்களையும், போர்ப்பட்டறிவுகளையும் கொண்டிருந்தனர்.

இவ்வாறு பலமுறை வெற்றியோடு விளையாடிய தளபதிகளுள் ஒருவர் தளபதி பால்ராச்;; தன்னுடைய போர்க்கள அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு புகட்டினார். அவர்கள் முன்னிலையில் பல விடயங்கள் குறித்தும் பேசினார்.

எதிரிகளின் நோக்கம் - போர்க்களத்தின் எதிர்பாரா தருணங்கள் - சண்டையில் எதிரிகளை வீழ்த்தும் வியூகம் என எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்;தார். தான் களத்தில் கற்றவற்றையும் -சந்தித்தவற்றையும் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த இளம் வீரர்களுக்கு இந்த வீரனைப் பார்க்கவும் - அவர் சொல்வதைக் கேட்கவும் வியப்பாக இருந்தது அதிக விருப்பமாகவும் இருந்தது.

தளபதி பால்ராச்; அந்த இளம் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்து முடிய அவர்கள் தமக்கிருந்த சந்தேகங்களை - விருப்பங்களை தளபதியிடமிருந்து அறிந்துகொள்ள விரும்பினர். அப்போது ஒரு இளம் வீரன்;; தளபதி பால்ராச்சிடம் கேட்டான்; உங்களுக்குச் சண்டையில் பயம் வருவதில்லையா?

போர் வீரர்களுக்கு இருக்கக்கூடாத அம்சம்; பயத்தை நீக்கி வீரத்தைப் பெற அவர்கள் கேட்டுணர வேண்டிய ஆரம்பப் பாடம்;; அதை மாவீரன் பால்ராச்சிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த இளம்வீரன் விரும்பினான்.

தளபதி பால்ராச்; அந்த இளம் வீரனை நோக்கி கூறினார். 'எனக்குப் பயம் வருவதில்லை... அது போல உங்களுக்கும் பயம் வரக்கூடாது" அப்போது பயத்தை வென்று துணிவைப் பெறும் மந்திரத்தின் சூட்சுமத்தை; அவிழ்க்கத்தொடங்கினார் தளபதி பால்ராச்.

நீங்கள் முதலில் எந்தவேளையிலும்;; எந்த ஆபத்தையும்; எதிர்கொள்ளக்கூடியவாறு முழுத் தயார்நிலையில் இருக்கப் பழக வேண்டும்.

நான் காடாக இருந்தாலும் சரி... பெரும் வெளியாக இருந்தாலும் சரி... எந்தக் களச் சூழலில் இருக்கிறேனோ அந்தக் களச்சூழலில் எதிரி திடீரென எதிர்ப்பட்டால்; அவனை எப்படி எதிர்கொள்ளலாம் எனச் சிந்திப்பேன்.

சிந்திப்பதோடு மட்டும் நின்று விடாது அத்தகையதொரு எதிர்பாராத தாக்குதலை தடுக்கக்கூடியவாறு எனது மனதிற்குள் ஒரு கற்பனையான தாக்குதல் திட்டம் ஒன்றை ஒத்திகை செய்து... பார்ப்பேன். என்னை நான் எந்த நெருக்கடி நிலைக்கும் ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருப்பேன்...

அதனால் எதிரி எப்படி வந்தாலும்;.. பயமின்றி; பதட்டமின்றி எந்த என்னால் சூழலிலும் சிறப்பாகச் செயற்பட முடியும்.

இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள் என்றார்; இளம் வீரர்களை நோக்கி; அந்தப் பயமறியாத் தளபதி.


பெருமை

சிங்களப்படைகள் தமது முழுப்பலத்தையும்... வளத்தையும் ஒன்று திரட்டி யாழ்ப்பாணம் மீது படையெடுக்க தமிழர் படையை வன்னியை நோக்கி பின்னகர்த்தினார்; தலைவர். யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்துபோனதால்;; போராடும் திறனை; அவர்கள் இழந்து போனார்களென எக்காளமிட்டது சிங்களம்.யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வன்னி மீது போர் தொடுக்க தன்னைத் தயார்ப்படுத்தியது சிங்களம்.

அமைதியாய் - ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி; உள்ளே குமுறும் எரிமலை போல் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்; தலைவர்.

வெற்றி மமதையெடுத்து புலிகள் அடியோடு அழிந்தார்கள் என்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தலைவர்.
1996 யூலை 18

நந்திக் கடலோரம் அமைந்திருந்த முல்லைத்தளத்தை வீழ்த்த தலைவர் முடிவெடுத்தார்; தளத்தை அழிக்கும் முழுப் பொறுப்பையும்; தளபதி பால்ராச்சிடம் ஒப்படைத்தார். புலிகளின் அசுர அடி தளம் ஆட்டம் கண்டு வீழ்ந்துபோனது.

ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளை அழித்து தமிழர் படை எதிரியிடமிருந்து அந்த தளத்தையும் அங்கிருந்த ஆட்லறிகளையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியது.

போராட்டச் சக்கரம் புதையுண்டு போனதாய் புலம்பியவர்களெல்லாம்;; வாயடைத்துப் போனார்கள்.

வெற்றிப் பெருமிதத்தோடு; தலைவரின் தளம் நோக்கி விரைந்தார்; தளபதி பால்ராச். தலைவர் நினைத்ததை நினைத்தபடியே களத்தில் செய்துவிட்டு; தளபதி பால்ராச் வர தலைவர் மகிழ்ச்சியுடன்; தளபதியுடன் பால்ராச்சின் ஒரு கரத்தைப் பற்றிப் பாராட்டினார்.
2000 மார்ச் 26.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் போக்குத் திசையை எதிரியின் பிடியிலிருந்து புலிகளின் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தார்; தலைவர்.

இடிமுழக்கம்.... சூரியகதிர்.... சத்ஜெய.... எடிபல... ஜெயசிக்குறு என அடுத்தடுத்துப் படையெடுத்து புலிகளின் கதை முடிக்க முயன்றவர்களின்; கதை முடிக்கும்; ஓயாத அலைகள் படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார் தலைவர்.

வன்னியின் தென்முனை நோக்கிப்படை நடத்திய தலைவர்; சடாரென திரும்பிய புயல் போல் வன்னியின் வட திசையில் போர்ப்புயலை; வீசச் செய்தார். ஆனையிறவைச் சூழவிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழகளம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஓயாது வீசிக் கொண்டிருந்தவர்கள் ஓயாத அலை படை நடவடிக்கையின் மகுடமாய்;; நீண்ட காலமாக கைகளுக்கெட்டாமல்; நழுவி நிமிர்ந்து நின்ற ஆனையிறவுப் பெருந்;தளத்தை அடியோடு சாய்க்கத் தலைவர் வியூகமிட்டார்.

திட்டம் புலிகளுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான திட்டம். அகன்று விரிந்து கிடக்கும் பகைவனின் முற்றத்தில்; புலிகள் கூடாரமடித்து எதிரிகளை வேட்டையாட வேண்டும். சிங்க வேட்டைக்குத் தலைவர் தேர்ந்தெடுத்த இடம்;; இத்தாவில். அதை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்த தளபதி; பால்ராச்;. முப்பத்து நான்கு நாட்கள்; இத்தாவில் மட்டுமல்ல தளபதி பால்ராச்சும்... போராளிகளும்; நெருப்பில் குளித்து நிமிர்ந்தனர்.

முடிவு இனிமேல் எங்களால் முடியாது என்ற பகைவன்;; ஆனையிறவிலிருந்த தமது சகாக்களையும்;; ஆனையிறவை நோக்கிப் பலாலியிலிருந்து அனுப்பிய தனது படைகளையும் பின்னிழுக்கச்;; சிங்களச் சிங்கங்கள் குந்தியிருந்த் அந்தப் பெருங்கோட்டை உக்கி உப்பு வெளிக்குள்; உதிர்ந்து போனது.

அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த அந்த முப்பத்து நான்கு நாள் இத்தாவில் சமரை பால்ராச் வென்று ஏ-9 சாலையால் தலைவரின் தளம் விரைய தலைவர் மீண்டும் கைகொடுத்தார்; அந்தத் தளபதியைப் பாராட்ட ஆனால், ஒரு கையை அல்ல இரு கைகளையும் சேர்த்து.
-------------------------

பகைவன் கூட பாராட்டும் வகையில்; படை நடாத்திய அந்தப் பெருந்தளபதி... எத்தனையோ சண்டைகளை.... சமர்களை.... வென்ற வீரன்.

எதிரிகளோடு தனித்துச் சண்டை செய்து.... குழுவாகச் சண்டை செய்து... பெரும் படையாகச் சண்டை செய்து... அந்தப் பெரும் படையையே வழிநடாத்தும் பெருந்தளபதியாய் உயர்ந்து எங்கள் புருவங்களை உயரச் செய்த அந்த உன்னத தளபதி; முடியாது என்ற களத்தில்கூட தன்னால் முடியும் எனச் சாதித்துக் காட்டிய அந்தத் தளபதி.

பெருமையோடு தான் பெற்ற இந்த இரண்டு பெரும் பாராட்டுக்களையும் மனமிளகி மகிழ்ச்சியோடு தோழர்களிடம் நினைவு கூறுவராம்.
சமயோசிதம்

தளபதி பால்ராச் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கிய புலி வீரர்களும் வீராங்கனைகளும்; எதிரியின் முற்றமான இத்தாவிலில் ~பெட்டிகட்டி சடு...குடு... ஆடினார்கள்.

திகைத்துப்போன பகைவன்; இருந்தவர்களையும் - கிடந்தவைகளையும் வாரிச்சுருட்டிக் கொண்டு; புலிகளோடு மூர்க்கமாக மோதத் தொடங்கினான். தாக்குதலின் கடுமை இத்தாவில் சமர் சரித்திரம் மறவாத் சமராக மாறியது.

பல்லாயிரக்கணக்கான எதிரிகளுக்கு எதிராக சுமார் ஆயிரத்து இருநூறு போராளிகள் மட்டுமே எதிர்ச் சமராடினர்.

பகைவனின் இரும்புக்கோட்டையைச் சரிக்க தலைவரின் எண்ணத்தில் உதிர்த்த அற்புதமான போரியல் திட்டம்; அதைத் தளத்தில் அரங்கேற்றும் நாயகன்; எங்கள் பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் நம்பிக்கையான தெரிவு எப்போதும் தலைவர் எதிரிகளை கலங்கடிக்க எய்யும்; சக்திமிக்;க அம்பு.

உள்ளே பால்ராச் நிக்குதாம்; அறிந்து கொண்ட எதிரி; எரிச்சலோடும் மூர்க்கத்தோடும்; மோதினான்.


எப்படியாவது... எங்காவது ஒரு மூலையில் சிறு உடைப்பை ஏற்படுத்த முடியாதா என எதிரி திணறினான்.

படையணிகளை மாற்றி... படையதிகாரிகளை மாற்றி... மூர்க்கத்தோடு முட்டிமோதிய போதும்; அவனால்; முன்னேற முடியாமற் போயிற்று.

உள்ளே மோதிக் கொண்டிருக்கும் போராளிகள்; குறைந்த எண்ணிக்கையாலானவர்கள்;; அவர்கள் வசமிருந்த படைக்கலங்களும்; குறைந்த எண்ணிக்கையிலானவை.

தாக்குதல் களம்; எதிரியின் முற்றம். போராளிகள் நினைத்தவுடன்; எந்தப் பற்றாக்குறைகளையும் தேவைகளையும்... நிவர்த்தி செய்துவிட முடியாது.

அதற்கு எதிரி; களத்தில் வாய்ப்பளிக்கப் போவதுமில்லை. இப்படித்தான்; களத்தில் எதிரி மோதிக்களைத்த நிலையில்; ஒருநாள் நேரடி மோதுகையைத் தவிர்த்து அகோரமான எறிகணைத் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.

அந்த முப்பத்துநான்கு நாள் சமரின் ஒருநாள்; போராளிகள் நிலைகொண்டிருந்த அந்தக் களமுனை முழுவதையும்; எறிகணைகள் துடைத்தழித்துக் கொண்டிருந்தன.

அப்போது எதிரி ஏவித்தொலைத்த அந்தப் பல்லாயிரக்கணக்கான எறிகனைகளில் ஒன்றோ சிலவோ அங்கே தாக்குதலுக்காகக் களஞ்சியப்படுத்தியிருந்த போராளிகளின் ஆயுதக்களஞ்சியம் மீது வீழ்ந்து வெடிக்கத்; தொடங்கியது திருவிழா!

உள்ளேயிருந்த் அத்தனை வெடிபொருட்களும்;; கடாம்... புடாம்... டமால்... எனப் பெரும் வெடியோசையோடு; தொடர் குண்டோசையாக் வெடித்துச் சிதறியது.

உள்ளே என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியவில்லை. எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிரியும் கூடக் குழம்பிப் போனான்.

குண்டுமழை ஓய்ந்தது போல் அந்தக் களமுனை சற்று அமைதியுற அங்;கு நிலைமையின் விபரீதம் கண்முன்னே விரிந்து கிடந்தது.

உள்ளே இருப்பவர்களின் இருப்பு இந்த வெடிபொருட்களின்; இருப்பிலும் தான் இருக்கிறது. அவை எதிரிகளை அழிக்காமலே அழிந்து போகுமானால் நிலைமையைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையதொரு நிலைமைதான் அந்தக் களத்தில்; தளபதி பால்ராச்சின் முன் ஏற்பட்டுவிட்டது.

எத்தகைய படைகளையும்... எந்த உறுதி மிக்கத் தளபதிகளையும்... படையதிகாரிகளையும்; குழம்பச் செய்துவிடக்கூடிய அழிவு.

களமுனையில் நின்றவர்கள்; ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து பதட்டத்தோடு தொலைத் தொடர்புக் கருவியில்; தளபதி பால்ராச்சை அழைத்தனர்.
லீமா... லீமா...
என்ன மாதிரி...?
ஏதும் சிக்கலோ...?
அறிந்து கொள்ளும் அவசரம்; எல்லோருக்கும்;; நிதானமாக் எந்தக் குழப்பமுமற்று அழைத்த எல்லாக் குரல்களுக்கும் லீமாவின் பதில் வந்தது தெளிவாக. அது ஒண்டுமில்லை நாளைக்கு நாங்கள் செய்யப்போகும் 'ஒழுங்குக்கு" இண்டைக்கு ஒத்திகை நடக்குது. என தொலைத் தொடர்வுக்கருவியில் ஒலித்தது. உறுதிகுலையாத ஒரு தளபதியின்; சமயோசிதக் குரலாக.
சுனாமி..!

2004 ஆம் ஆண்டு காலப்பகுதி...... தளபதி பால்ராச் அப்போது தென்தமிழீழத்தின்; வாகரையில் நின்றார். வடதமிழீழத்தின்; அனேகமான போர்க்களங்களில் நடமாடிய அந்தத் தளபதி; இப்போது தென்தமிழீழத்தில்...


அது ஒரு அமைதிக்காலம்; போர் ஒய்ந்திருக்க அந்தத் தளபதியும்; ஓய்வாக இருந்தான். அழகான கடற்கரையோரம்... அழகூட்டும் ஊர்மனை... கல...கலவெனச் சிரிக்கும் ஏதுமறியாச் சனங்களின் வீடுகள் என எல்லா இடமும்; அந்தத் தளபதி; பயணித்தான்.

வாகரையின் கடல்மணல் தொடும்; அந்தக் கடற்கரையோரம்;; தென்னைமரக் கூடலுக்குள்;; தளபதி பால்ராச்சின் பாசறை இருந்தது. 2006 டிசம்பர் 26 விடிகாலை. சத்தம் சந்தடி ஏதுமின்றி; இயற்கை மகள் சீறிச்சினக்க கரையோர மக்கள்; தண்ணீருக்குள்;; கண்ணீரோடு தவித்தனர். தென்னாசியாவின் கரையோரம் எங்கும்;; மனித உயிர்கள்; மண்மேடாய் குவிந்தன. எல்லோரும் அழுதார்கள்;;; ஏதேனும் ஒரு அசுமாத்தம் தெரிந்திருந்தால் கூட ஓடிப் பிழைத்திருப்போமே என குமுறிக் குழறினர்.

இயற்கை ஏன் எங்களை எச்சரிக்கவில்லை; கடலைச் சபித்து மண்ணள்ளித் தூற்றினர். சின்ன எச்சரிக்கை எங்களுக்காக் எங்கள் மீது பரிவுகொண்டு; எவரேனும் எங்களை எச்சரித்திருக் கூடாதா?; ஆதங்கத்தால் ஏங்கினர்.

இயற்கையின் விபரீதத்தை; உணரமுடியாமற் போனதா அல்லது இயற்கையின் எச்சரிக்கையை உணரத் தவறினோமா?; எவருக்கும் விடை தெரியாத அந்த நாளில்; குமுறி எழுந்த அந்தச் சுனாமி அலை கடலைவிட்டுத் தரைக்குத் தாவியபோது கரையோர மக்களுக்கு விபரீதத்தின் விளைவு புரியவில்லைத்தான்.

நின்று... நிதானித்து... சுதாகரிக்க எந்த அவகாசமும்; எவருக்கும் இருக்கவில்லைத்தான். வாகரையின் கரையோரத்தை நோக்கி; மலை போல சீறிவந்த கடலலை சூழ்ந்துகொள்ள அங்கிருந்த தளபதி பால்ராச்சின் பாசறையையும்;; கடல் நீர் விழுங்கத் தொடங்கியது.

இந்தக் கடல்நீர் வெளியேற்றம்;;; வழமைக்கு மாறானது ஆபத்தானது புரிந்து கொண்ட தளபதி பால்ராச்; இயற்கை விளைவித்த அந்த ஆபத்திற்கு மத்தியிலும்; ஒரு களத்தின் நடுவே நின்று செயற்படும் வீரனைப் போல் துரிதமாகத் துணிவோடு செயற்பட்டார்.

கடல்நீர் காலளவு... கையளவு தாண்டி கழுத்தளவு வந்துவிட அந்த முகாமிலிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும்; நீரிழுத்துப் போகாமல்; இருக்க தளபதி பால்ராச்; பெரும் போராட்டத்தையே நடாத்த வேண்டியிருந்தது.

அங்கிருந்த கனரக மோட்டரொன்றைக்; கயிற்றில் இணைத்து தென்னை மரத்தோடு கட்டியதோடு, ஏனைய போராளிகளை ஏவி; இயக்கத்தின் உடமைகளையும்; தமிழ்மக்களின் பாதுகாப்புக் கேடயங்களையும் காப்பதில்; முன்னின்றான் அந்தத் தளபதி.

சீறியெழுந்து; சுழன்றடித்துக் கொண்டிருந்த அந்த அலையின்; கொடூரப் பிடியின் நடுவே நின்றுகொண்டும்; தன்னுயிரைப் பாதுகாக்க வேண்டுமெனக் கொஞ்சமேனும் நினையாத அந்தத் தளபதி; ஆபத்திற்கு மத்தியிலும் அந்த முகாமிலிருந்த ஒரு துப்பாக்கியை கையிலெடுத்து வானை நோக்கி; ரவைக்கூட்டிலிருந்த அத்தனை துப்பாக்கி ரவைகளும் தீரும் வரை சுட்டுத் தீர்த்தாராம்.

துப்பாக்கி ரவையின் சத்தத்தையும்; அலையின் பேரிரைச்சலையும் கேட்டுச்; சனங்கள் ஏதோ ஆபத்து வருகிறதென எச்சரிக்கையடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடித்தப்பட்டும். சனங்களின் மீது அன்புகொண்ட எங்கள் தளபதி...
நம்பிக்கை..!

'சிங்கமுகச்" சிலந்தி போல் ஆனையிறவுப் படைத்தளம்; தனது பாதுகாப்பு வலைப் பின்னலை இறுக்கமாகப் பின்னி; குடாநாட்டின் தொண்டைக்குழிக்குள்; விரிந்துகிடந்தது. ஆயிரக்கணக்கில் போராளிகளை விதையாக்கிய பின்னும்; அந்தப் படைத்தளம் வீழாது வீங்கிப் பெருத்திருந்தது.

ஆனையிறவுச் சிலந்தியின்; ஒவ்வொரு பாதுகாப்பு வலைப் பின்னலையும்;; அது அகல விரித்திருந்த அதன் ஒவ்வொரு கால்களையும் அறுத்தெறிந்து பிணமாக்கத் தலைவர் முடிவெடுத்தார்.

ஒரு பகற்பொழுது; பரந்தனில் தொடங்கிய சண்டை விறுவிறுவென உமையாள்புரம் வரை அகன்று நின்ற ஆனையிறவின் கால்களையும்; மறுபுறம் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, புல்லாவெளிவரை நீண்டு கிடந்த கால்களையும் அறுத்தெறிய ஆனையிறவு ஒடுங்கிப் போனது. புலிகளுக்கேயுரிய திகிலூட்டும் ஒரு அதிரடி முயற்சியின் மூலம்; ஆனையிறவை அடியோடு வீழ்த்துவதே தலைவரின்; திட்டம். குடாரப்பில் தரையிறங்கி; இத்தாவிலில் உறுதியாக நின்று கொண்டு; ஆனையிறவின் கழுத்தை நெரிக்க வேண்டும்.

திட்டத்தை நிறைவேற்றும் அதிபதியாக் பால்ராச்சைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்; மிகப் பெரும் தரையிறக்க நடவடிக்கை தரைப் புலிகளும்... கடற்புலிகளும் இணைந்து மேற்கொள்ளப் போகும்; கூட்டு நடவடிக்கை.

எதிரியின் பயணப் பாதையில் சூறாவளியென சுழன்றடிக்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டித்; தலைவர் அனுப்பிவிட வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரையோரம் போராளிகள் ஒன்றுசேர்ந்தனர் ஒரு பெரும் வரலாற்றுப் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்போகிறது.

வெயில் பளீரெனச்; சுட்டெரிக்கும் ஒரு பகற்பொழுது அந்தக் கடற்கரையோரம்; தரையிறக்கத் தளபதி பால்ராச்சும்; கடற்படைத் தளபதி சூசையும்; ஒன்றாக அமர்ந்திருந்தனர். வந்திருந்த உணவுப் பொதியொன்றைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்க தளபதி சூசை மெதுவாக உரையாடலை ஆரம்பித்தார்.

அக்காலம்; மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டம்;; இயக்கம் ஒரு பெரும் தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுத்து வந்ததால்; வளப் பற்றாக்குறைகளைப் பெரியளவில் எதிர்கொண்டபடியிருந்தது. போராயுதங்களுக்கும்;; போரைப் பின்னின்று இயக்கும் பல அடிப்படைப் பொருட்களுக்கும் கூட பெரும் தட்டுப்பாடு.

இந்த நிலையில் கடற்புலிகளைப் பொறுத்த வரையில் தரையிறங்கப் போகும் ஆயிரக்கணக்கான போராளிகளையும்;; அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதத் தளபாடத் தொகுதிகளையும்; உள்ளே தரையிறக்குவதென்பது இமாலய சாதனை.

அதற்காக கடற்புலிகளின் கையிருப்பிலிருந்த பெருந்தொகை எரிபொருட்களையும்; படகுத் தொகுதிகளையும்; அவர்கள் செலவளிக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில்; கடற்புலிகளின் வசம் குடாரப்பில் தரையிறக்கப்பட வேண்டிய தளபதி பால்ராச் தலைமையிலான ஆயிரத்து இருநூறு போராளிகளையும்; அவர்களின் ஆயுதத் தளபாடங்களையும்; ஏற்றிச்செல்லக்கூடிய அளவு எரிபொருள் மட்டுமே தளபதி சூசையின் கையிருப்பில் இருந்தது.

சண்டை ஏதாவது சிக்கலாகி; நிலைமை நெருக்கடிக்குள்ளாகுமிடத்து அவ்வளவு தொகை போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும்; மீளவும் தளம் திருப்ப வேண்டும். ஆனால் அதற்கு தேவையான எரிபொருள்; கையிருப்பில் இல்லை.

நிலைமையின் தன்மையை கடற்படைத் தளபதி; தளபதி பால்ராச்சிற்கு சங்கடத்தோடு உரைக்க ஏற்கெனவே நிலைமையை நன்கு அறிந்திருந்த அந்தத் தளபதி; தனது இதழ்களில் தவழ்ந்த மெல்லிய புன்னகையோடு கண்களில் நம்பிக்கைத் தெறிக்க தளபதி சூசையை நோக்கிக் கூறினாராம்.

'என்னை உள்ள இறக்கி விட்டாக்காணும்.... நான் தரையால வருவன்" என்று.
கைதி..!

1983 க்கும் 1984 க்கும்; இடைப்பட்ட காலம். வன்னியில் புலிகள் இயக்கம்; வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பால்ராச் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள்...

அதாவது போராட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாக.... பகுதி நேரப் போராளியாக அவர்; இயங்கிக் கொண்டிருந்தார்;. ஒருநாள்.........

இயக்க வேலையாக் தண்ணீரூற்று.... முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு; மிதிவண்டியில்; முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்; இளைஞனாக இருந்த தளபதி பால்ராச்சை இடைமறித்தனர்.

அப்பாவி இளைஞனாக் காட்டிக்கொண்ட போதும்;; அவரைச் சிங்களப் படைகள் கைது செய்தனர்.

தளபதி பால்ராச் முல்லைத்தீவு முகாமில்; மூன்று நாட்கள்; சிறை வைக்கப்பட்டார்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும்;; சிறிலங்காப்; படையினரும் பொறுப்பதிகாரிகளும்... அவரை மிரட்டியும்... வெருட்டியும்; பல்வேறு உபதேசங்களைச் செய்தனர்.

தளபதி பால்ராச்;சைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன் என்றோ... அல்லது பகுதிநேரப் போராளியென்றேர் அடையாளம் காணாத சிங்களப்படைகள்;; சின்னப் பெடியள் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது என போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை; விதைக்க விளைந்தனர்.

தளபதி பால்ராச் எல்லாம் அறிந்தும்;; அறியாதது போல மௌனம் காக்க சிங்களப் படைகள் அவரை விடுவித்தது. பின்னர், தளபதி பால்ராச்; போராளியாகி; தளபதியாகி; சிங்களப் படைகளுக்கு எதிராகத்; தொடர் போராட்டங்களையே நடாத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக் தளபதி பால்ராச் எந்த இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டாரோ அந்த இராணுவ முகாம் பின்னாளில் தளபதி பால்ராச் தலைமையில்; தாக்கியழிக்கப்பட்டு வரலாற்றில் பதிவாகியது. ஒரு முன்னாள் கைதியின் எழுச்சி; ஒரு இராணுவ முகாமின்; அழிவாகிப் போனது.
போரியல் புத்தகம்..!

போராட்டம் வளர்ந்துவிட்டது. போர்க்கலையில் வல்ல புலிகளாக் போராளிகளும் வளர்ந்து விட்டார்கள்.

ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த விடுதலைப் போராட்டம்;; ஆட்லறிகளையும்... டாங்கிகளையும் கொண்ட பெரும் படையாக உயர்ந்து நிற்கிறது.

காலமும்... சூழலும் மாற... மாற... போரும் அதன் தன்மைக்கேற்ப மாறிவிட்டது.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர்;; மரவுவழிப்படை நடத்தலை மேற்கொள்ளும்; அளவுக்கு வளர்ந்தாயிற்று.

காலத்திற்கு ஏற்ப போராளிகளும் மாறவேண்டும்;; அவர்களை மாற்றவேண்டும்.

வெறும்; சண்டைக்காரர்களாக மட்டுமல்ல அதிகாரிகளாக... தளபதிகளாக... சண்டைத்திறன் கொண்ட நிபுணர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

தலைவர்; இந்த விடயத்தில் எப்போதும் அதிக கரிசனை எடுப்பார்;. அவரே நேர்நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவார்.

நவீன கால போர் என்பது சாதாரணமானதல்ல ஆயுதங்களும் அதன் பயன்பாடுகளும் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம்; தந்திரங்களும்... உத்திகளும் செல்வாக்குச் செலுத்தும். ஆயுதப்பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வசதி; உத்திகளையும்... தந்திரங்களையும்; அறிந்துகொள்ளக் கிடைப்பதில்லை.

அது வெறுமனே எழுத்தில் வடிக்கப்பட்ட நூல்களிலிருந்து மட்டும்; கற்றுத்தெரிந்து கொள்ள முடியாது.

ஒவ்வொரு போர் அனுபவமும்... தந்திரமும்... உத்தியும்;; அதனதன் பௌதீகச் சூழலுக்கும் புவியல் அமைப்புக்கும் ஏற்ப மாறுபடும்; தளபதிகளின் திறமைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும்.

இதற்கேற்ப போரியல் அறிவை வளர்த்தெடுத்து இளம்புலி வீரர்களுக்கு புகட்ட வேண்டும். தலைவர்;; இளம் வீரர்களுக்கான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியொன்றை ஆரம்பித்திருந்தார். தகுதியானவர்களைக் கொண்டு; பல்துறை சார்ந்த போரியல் பாடங்களை அவர்களுக்கு ஊட்டினார்.

அங்கு உள்நாடு தொட்டு... வெளிநாடு வரையான போர்க்களங்களையும் போரியல் அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஒருநாள்; தலைவர்; பிரிகேடியர் பால்ராச்சை அழைத்தார்;. அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் கற்கும்; போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால்; ஒரு நிபந்தனையோடு...

நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம்; நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் பெரிய பாடம் என்றார். அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் பார்வையில்; மிளிர்ந்தார்.
திசைகாட்டி..!

இந்திய - புலிகள் போரின் உக்கிரம்; மணலாற்றுக் காட்டுக்குள் தீவிரம் பெற்றிருந்த காலம். தலைவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில்;; இந்தியர்களுக்கு உற்சாகம். தமது சிறப்புப் படையணிகளை ஒன்றுதிரட்டி மணலாற்றுக் காட்டைச் சுற்றிவளைத்து தலைவரைக் கொன்றுவிடத் துடித்தனர்.

தலைவரை அழிக்கும் படை நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர்;; ~செக்;மேற். இந்தியர்கள் அந்தப் பெரும் நடவடிக்கையை; மணலாற்றுக் காட்டுக்குள் மேற்கொண்ட போதும்;; தலைவர் அங்கிருந்து பின்வாங்கவோ இடம்மாறவோ விரும்பவில்லை. இந்திய - புலிகள் போரின் இறுதி முடிவை இந்த மணலாற்றுக் காட்டுக்குள்; வைத்து தீர்மானிக்க அவர் விரும்பினார்.

வேட்டையாட வந்தவர்கள்; அங்கே வேட்டையாடப்பட்டார்கள். அது ஏறத்தாழ கோலியாத்துகளுக்கும்; தாவீதுகளுக்கு மிடையிலான யுத்தம். இந்த யுத்தம் அரங்கேறிய இடமோ பெரும் வனாந்தரம்.

அக்காலம்; காடு முழுவதுமாக போராளிகளின் உள்ளங்கைகளுக்குள்; அகப்பட்டுவிடவில்லை. ஒருபுறம்; இந்தியர்களோடு போராடிக்கொண்டு; காட்டின் விசித்திரங்களையும் விடுபடாத முடிச்சுகளையும் அவர்கள் அவிழ்க்க வேண்டியிருந்தது. காடு எந்தச் சலனமுமற்று இருளால் மூடிக்கிடந்தது. எங்கோ கத்தித் தொலைக்கும் விசித்திரப் பறவைகள்;; எட்டுமுட்டாகச் சந்தித்தால் துள்ளிப் பறந்தோடும் காட்டு விலங்குகள்; எவருக்கும் வளைந்து கொடுக்காது இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் காட்டு மரங்கள்;; எனக் காடு காடாகவிருந்தது.

மனிதர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கும் இந்தக் காட்டுக்குள்தான்;; தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்;; ஒரு வல்லரசிற்கெதிரான போர்; நடந்து கொண்டிருந்தது. உள்ளே தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட இந்தியர்கள்; பேராசையோடு காட்டைச் சூழ்ந்தார்கள்;; காட்டுக்குள் குவிந்தார்கள்.

பெரும் வல்லரசு ஒன்றின்; ஒருமுகப்படுத்தப்பட்ட படை அவர்களுக்கு எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் தலைவரின் தலைமையில் நின்ற போராளிகளுக்கு...? போராளிகளைப் பொறுத்த வரையில்; காடு நண்பனாகவும் இருந்தது எதிரியாகவும் விளங்கியது. அது இயற்கையின் ஒரு விந்தையான படைப்பு.

ஆற்றல் உள்ளவர்களுக்கும்;; அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வழிகாட்டும். அது எத்தனை ஆற்றல் படைத்தவர்களையும்; அனுபவம் கொண்டவர்களையும் கூட சிலவேளைகளில் சறுக்கி விழுத்தி விடும்.

காட்டு அனுபவம் இல்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்;; காட்டுக்குள் நிறைந்து கிடக்கும் எதிரியிடமோ மாட்டிவிடும். அந்த வனத்துக்குள் அனாதையாய் அலையவிட்டு; வேடிக்கை பார்த்து நிற்கும். அனுபவத்தின் மனக்குறிப்பைக் கண்களுக்குள் விரித்து காடு முறித்து பாதையெடுத்தால் மாத்திரம் தான்; போராளிகளின் பயணங்கள் இலகுவாகும். மற்றும்படி பயணத்தை இலகுவாக்கப் போராளிகளிடம்; போதிய திசையறி கருவியும் கிடையாது வரைபடக் குறிப்பும் கிடையாது. இத்தனைக்கும்; எதிரிகளின் சுற்றிவளைப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும்; தொடரவேண்டிய பயணங்கள்.

அந்த நேரங்களில்; திசையறிகருவி இல்லாமலேயே காடுமுறித்து மனக்குறிப்பால் போராளிகளை அழைத்துச் செல்லும்; காட்டனுபவம் உள்ளவர்கள் வேண்டும். ஆம்; மணலாற்றுக் காட்டுக்குள்; காட்டனுபவமும்-ஆற்றலும்-அறிவுமுள்ள பல திறமைசாலிகளை தலைவர் தன்வசம் வைத்திருந்தார். அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். அக்காலம்; தளபதி பால்ராச் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு திசையறிகருவி.
முற்றுகை..!
இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறியிருந்தன இல்லை வெளியேற்றப்பட்டிருந்தன. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களப் படைகள் திமிர் எடுத்து மண் பசியுடன்; தமிழர்களை வேட்டையாட வெடித்தது இரண்டாம் கட்ட ஈழப்போர். விளைவு சிங்களப் படைகளிற்கு எதிரான போர்; தீவிரம் பெறத் தொடங்கியது.

அந்தநேரம் கொக்காவில்... மாங்குளம்... முல்லைத்தீவு என பல இடங்களிலும்; சிங்களப் படைகள்; குந்தியிருந்தன. இவ்வாறு வன்னியை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படை முகாம்கள்;; எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அதேநேரம். அவர்களுக்கெதிராக பதுங்கித் தாக்குதல்கள்... கண்ணிவெடித் தாக்குதல்கள்... காவலரண்கள் தகர்ப்பு... மினிமுகாம்கள் கைப்பற்றல் என போரின் பரிமாணம் மாறத்தொடங்கியிருந்தது. ஈழப்போர் இரண்டாம் கட்டத்திற்குத் தாவியிருந்த அதேநேரம்;; இயக்கம் வளப்பற்றாக் குறைகள்... ஆளணிப் பிரச்சினைகளென இல்லாமைகளோடு மோதியபடி தான் முன்னேறியது.


ஆயினும்;; நம்பிக்கையை முதலீடாக்கி; கொஞ்ச நஞ்சமாக இருந்த ஆயுத இருப்பைத் துணையாகக்; கொண்டு; பல சிங்களப் படைத் தளங்களை புலிவீரர்கள்; ஒவ்வொன்றாக வீழ்த்தத் தொடங்கினர்.

முல்லைத்தீவில்... நீண்ட நெடுநாட்களாக ஒரு இராணுவ முகாமை நிறுவி; அந்த மக்களின் அன்றாடச் சீவியத்தில்;; மண்ணள்ளிக் கொட்டினர் சிங்களப் படைகள். எப்படியும் இந்த இராணுவ முகாமை தாக்கியழிக்க வேண்டும்.

இயக்கம் முடிவெடுத்து... வேவு எடுத்து... சின்ன ஒத்திகை பார்த்து... முன்னேறித் தாக்கத் தொடங்கியபோது இல்லாத அந்த வளப் பற்றாக்குறைகள் இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது.

முகாமைச் சுற்றிவளைத்து வீழும் என்ற நம்பிக்கையோடு போராளிகள் தாக்கிய போதும்;; அது கைநழுவிப் போனது.

முகாமில் குந்தியிருந்த சிங்களப் படைகள்;; தாம் பலமாக அமைத்து வைத்திருந்த காவலரண்களுக்குள்ளும்... காப்பகழிகளுக்குள்ளுமிருந்து கடுமையாகத் தாக்கினர். தாராளமாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி; பலமாகத் தாக்கினர்.

போதாததற்கு முள்ளிவாய்க்கால் பக்கமாக் கடல் வழியாகப் படைகளைத் தரையிறக்கம் செய்ய நிலைமை கைமீறிப்போனது.

முகாம் மீதான தாக்குதலுக்கே பற்றாக்குறை என்கிற நிலையில்தான் வெடிபொருட்கள் இருந்தன. இந்த நிலையில்; தரையிறக்கப்பட்டிருக்கும் படைகளுக்கு எதிரான சண்டைக்குத் தேவையான வெடிபொருட்களுக்கு; எங்கே போவது?

இருந்த பலமும்; வந்த பலமும் ஒன்றுசேர திரண்ட பலத்தோடு; உக்கிரமாக மோதத் தொடங்கினான்;; எதிரி.

இந்தளவுக்கும்; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளின் பல அணிகள் தளத்தின் முற்றத்திற்குள்; கடுமையாக மோதிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில்; தரையிறக்கப்பட்ட சிங்களப் படைகள்;; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளைச் சுற்றிவளைத்துவிட்ட நிலையில்; அணிகளைப் பின்னிழுக்க வேண்டியதாயிற்று.

ஆனால்; முகாமின் மையப்பகுதியில் மேஜர் றொபேட் தலைமையிலான அணியொன்று தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அந்த அணி தாக்குதலை நிறுத்தி வெளியேற முயல்கையில்; அவர்களை தனது இறுக்கமான முற்றுகைக்குள்; வளைத்துவிட்டான் தமது முகாமைத் தாக்க வந்த புலியணியொன்றை சுற்றிவளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன சிங்களப் படைகள்.

மீளமுடியாத நெருக்கடிக்குள்; அணி திணறியது. உள்ளே நிற்பவர்கள் வெளியில் வரவேண்டுமானால் வெளியிலுள்ளவர்களின் உதவி தேவை. உள்ளே இருப்பவர்களால்; முற்றுகையை உடைக்க முடியாத நிலை.

அப்படியாயின் முற்றுகையை உடைக்க யாரால் முடியும்...? தொலைத்தொடர்புக் கருவி; நம்பிக்கையோடு அழைத்தது. லீமா... லீமா...
லீமா...லீமா... ரொபேட்.
அழைத்த ரொபேட்டின் குரலுக்கு தளபதி பால்ராச் குரல் கொடுத்தார்.

'அப்படியே சண்டை பிடிச்சுக் கொண்டிருங்கோ இப்ப வாறன்..." சொன்னதோடு நிற்கவில்லை அந்தத் தளபதி. நெருப்பு மழையில் நீந்தி; முன்னேறி; நெருக்கடிக்குள்ளாகிய அணியோடு சேர்ந்தபோது உடைந்து நொருங்கியது எதிரியின் முற்றுகை.
ஓய்வறியாத் தளபதி..!
பூநகரிப் படைத்தளம் மீதான தாக்குதல். புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு; கடும் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

போராளிகள்-தளபதிகள்-பொறுப்பாளர்கள் என எல்லோரும் ஒரு சேர உழைத்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில்; புலிகள் இயக்கம் மேற்கொள்ளும்; பாரிய படை நடவடிக்கை. ஆகாய கடல்வெளி படை நடவடிக்கையின் பின்னர்; புலிகள் இயக்கத்தின் அனைத்து படையணிகளும்; பங்கு கொள்ளப்போகும் ஒரு நடவடிக்கை பெரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு ஈரூடகத்தாக்குதல்.

தளபதி பால்ராச் உட்பட அனைத்து தளபதிகளும், போராளிகளும் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளிலும்; ஒழுங்குபடுத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முந்திவிட்ட எதிரி ~யாழ்தேவி படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டான்.

ஆனையிறவிலிருந்து - கிளாலி நோக்கி எதிரியின் முன்னகர்வு யாழ்தேவி வேகமெடுக்க முதல் அதன் பயணப்பாதையிலேயே தடம்புரளச் முன்பு செய்ய வேண்டும். அதுவும் பூநகரி படைத்தளம் மீதான தாக்குதல் ஏற்பாடுகளுக்கு எந்தப் பழுதும் ஏற்படாத வகையில்; யாழ்தேவியை தடம்புரளச் செய்யவேண்டும்.
தலைவர் தளபதி பால்ராச் தலைமையில் படையணிகளை; யாழ்தேவி களத்திற்கு அனுப்பி வைத்தார்.

படையணிகள் களத்திற்கு விரைய ~யாழ்தேவி படை நடவடிக்கையை வழிநடத்திக் கொண்டிருந்த சிங்களத்தின் தளபதிகளுக்கு பிடித்தது ~அட்டமத்து சனியன் தளபதி பால்ராச் அவர்களும்- தளபதி தீபன் அவர்களும் களச்சூழலுக்கு ஏற்ப ஒரு அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டனர்.

பரந்து கிடந்த அந்த மணற்பாங்கான பகுதியில்; மணலைக் கிளறிப் போராளிகளை உள்ளே புதைத்த வேகமாக முன்னேறி வரும் பகைவன் நெருங்கி வந்தவுடன்; மண்ணுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்து புயலெனத் தாக்க எதிரி ஆடிப்போனான்.

சண்டை வெகு கலாதியாக சூடுபிடிக்க எப்போதும் போல் கட்டளைப் பீடத்துள்ளிருந்து வழிநடத்தவேண்டிய தளபதி பால்ராச்; சண்டை தொடங்கிய வேகத்தோடு; போராளிகளோடு போராளிகளாக களத்தில் குதித்து விட டாங்கியிலிருந்து எதிரி ஏவிய ஒரு குண்டு வீழ்ந்து வெடித்ததில்; தளபதி பால்ராச் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் கிடக்க வேண்டியதாயிற்று.


எவ்வேளையிலும் களத்தில் சுழன்றாட வேண்டும் என்ற எண்ணம் தளபதி பால்ராச்சிற்கு நோய்ப்படுக்கையில் கிடப்பதென்பது மரண வேதனையாக இருந்தது. அதிலும் பூநகரி தளம் மீதான நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்; ஓய்வாகக் கிடப்பதென்பது கடினமாக இருந்தது.

களத்தின் நினைவுகளோடு; படுக்கையில் தளபதி பால்ராச் இருந்த ஒருநாள் பூநகரி தளம் மீதான தவளை நடவடிக்கையை ஆரம்பித்தார் தலைவர்;. போராளிகள் கடலாலும் - தரையாலும் உள்நுளைந்து தளத்தை வீழ்த்த மோதிக் கொண்டிருந்தனர். சண்டையின் போது பல இடங்களில் தடைகள் உடைந்தும்- உடையாமலும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. நிலையில்; தொலைத் தொடர்புக்கருவியில் இடையிடையே தளபதி பால்ராச் அவர்களின் குரலும் வந்து... வந்து போனது.

வைத்தியசாலையில் படுக்கையில் கிடக்கும் தளபதி பால்ராச்; எங்ஙனம் தொலைத் தொடர்புக்கருவியில் உரையாட முடியும்; வைத்தியசாலையில் தொலைத்தொடர்புக் கருவி இல்லையே. கேள்விகள் குழப்பத்தைத் தந்தன. தவளை நடவடிக்கையின் மையக்கட்டளைப் பீடத்தில்; நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவர்; உசாரானார்.

தளபதி பால்ராச் வைத்தியசாலையில் இரகசியமாக ஏற்படுத்திக்கொண்ட தொலைத்தொடர்புக் கருவியினூடாகவே உரையாடுகின்றார்; என்பதைப் புரிந்துகொண்டு; உடனடியாகவே ஒரு போராளியை அங்கு அனுப்பி; தாக்குதல் தொடர்பான களநிலைமையை உடனுக்குடன் தெரியப்படுத்த தான் ஏற்பாடு செய்யலாம் என்றும்; வைத்தியசாலையிலிருந்து கொண்டு தொடர்புக்கருவியில் உரையாடுவது பாதுகாப்பு இல்லையெனவும் கூறித்தான்; அந்த ஓய்வறியாத் தளபதியை ஓய்வெடுக்கச் செய்யவேண்டியிருந்தது.

சிறீ. இந்திரகுமார்

மாவீரர்கள்- லெப்டினன் கேணல் திலீபன்

லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987
தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை
1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் திலீபன் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த பன்னிரண்டு நாட்களையும் பன்னிரண்டு 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற பெயரில் வெளியிட்ட புத்தகத்தின் பன்னிரண்டு பகுதிகளும் -தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள.

'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"
தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.

இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.

அப்போது நடைபெற்ற சில விடயங்களை, எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்;.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".

ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.

தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!

இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் -நடாத்தினான். 'ஒரு சொட்டுத் தண்ண்Pர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"
அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.
உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.

('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! -

மாவீரர்கள்- லெப்டினன்ட் சங்கர்


ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..


ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.

ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.

தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான். 

ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

நன்றி - எரிமலை

இனப்படுகொலைகள்- யாரறிவார் வன்னிப் பெருந்துயரை...!1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.

'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்' என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.
'சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு' என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. அதாவது கீரைக் கறிக்குள் அரசின் வரியிருக்கின்றது. நிலவரி தொடக்கம் தானிய வரி உட்பட சந்தை வரியீறாக கீரைக்குள் அரசியல் இருப்பதைக் காணலாம். பிறப்புப் பதிவது தொடக்கம் இறப்புப் பதிவது வரை, மணம் செய்வது தொடக்கம் பிரசவிப்பது வரை, வாழ்வு அரசியற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருப்பதையே காணலாம். ஆதலால் எதனையும் அரசியலாகப் பார்க்கும் அணுகு முறை எதிலும் தலையாயது.

விஞ்ஞானமாயினும் சரி, இராணுவமாயினும் சரி அவை எதுவும் அரசியற் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவையாகும். நடந்து முடிந்த தமிழின வன்னிப் பேரழிவை வெறுமனே இராணுவ அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல், அதிகம் அரசியல் அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசின் வெற்றி ஓர் இராணுவ வெற்றியல்ல. உண்மையில் அது சிங்கள அரசின் ஓர் அரசியல் இராஜதந்திர வெற்றியே ஆகும். அவர்களது இராணுவ வெற்றியானது அவர்கள் தடம் அமைத்த அரசியல் வியூகத்துள் நிகழ்ந்த வெற்றியாகும்.

பார்வைக்கு சிங்கள அரசின் வெற்றி இராணுவ வெற்றி போல் தோன்றினாலும், உண்மையில் அது அவர்களுக்கோர் அரசியல் வெற்றியாகவும், தமிழர் தரப்புக்கோர் அரசியல் தோல்வியாகவுமே அமைந்துள்ளது. இராணுவத் தேரை சிங்களத் தலைவர்கள் அரசியற் குதிரை பூட்டி இராஜதந்திர சாரியால் சவாரி செய்துள்ளார்கள். பார்வைக்கு தேர் வென்றது போல தோன்றினாலும், உண்மையில் குதிரையின் பாய்ச்சலே பிரதானமானது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் தனது அக்குரோணி சேனைகள் அனைத்தையும் துரியோதனனிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தேரோட்டியாய் பாண்டவர் பக்கம் நின்றதாகக் கூறப்படும் அந்த ஐதீகக் கதையில் அரசியல் அர்த்தம் இருக்கின்றது. இக்கதை வரலாறு அல்லாத ஓர் ஐதீகமேயாயினும் இதன் அரசியல் அர்த்தம் கவனத்திற்குரியது. தேர்ச் சாரதியின் பக்கமே வெற்றி பெற்றதாக கதை முடிகிறது.

சிங்களத் தலைவர்களிடம் பிரபாகரன் மட்டும் தோற்கவில்லை என்றும், பல நூற்றாண்டுகளாக தமிழ் தலைமைகள் அனைத்துமே தோல்வியடைந்து வருகின்றன என்றும் கூறப்படுவதுண்டு. இராமநாதன்கள் முதல் செல்வநாயகங்கள் ஈறாக பிரபாகரன்கள் வரை தொடர்ந்து ஈழத்தமிழர் தோல்வியடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வரும் பிரபலமான அரசியல் கூற்றானது அதிகம் கருத்தில் எடுக்கத் தக்கதாகும்.

'காலில் கல்லடித்து விட்டது என்பதை விடவும், கால் கல்லுடன் மோதிவிட்டது' என்று கூறுவதன் மூலம் காயத்திற்கான தன் பக்க நியாயத்தை கண்டறியும் அணுகுமுறையை கருத்தில் எடுத்தலும் அவசியம்.

எம்மத்தியில் நிகரற்ற வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக் கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வல்ல, இராணுவத்தீர்வே இறுதியானது எனக் கூறியோர் அரசியல் வியூகத்தால் சுற்றிவளைத்து இராணுவச் சப்பாத்துக்களுக்குள் தமிழரைக் கொண்டு வந்துவிட்டார்கள். குதிரையின் முதுகில் ஏறியிருந்து அதன் தலையைத் தடவி சவாரி செய்வது போல் இப்போது தமிழரின் முதுகில் ஏறிநின்று தலையைத் தடவுகிறார்கள். இராணுவச் சப்பாத்துக்களையே தமிழருக்கு பானம் பண்ணுவதற்கான பாத்திரமாக கையளிக்கிறார்களே தவிர, கௌரவமான வேறு எவ்வகைத் தங்க, வெள்ளி பாத்திரங்களையும் தீர்வாக கையளிக்கப் போவதில்லை.
வன்னித் தமிழனப் படுகொலை யுத்தத்தில் 90,000 மக்களைக் காணவில்லை. 2006 ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கிய போது அங்கு 3,80,000 பேர் இருந்ததாக அரசாங்க உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதனை பல அரசாங்க உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் 2,70,000 பேர் இருப்பதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்பு 2,61,000 பொதுமக்களும், 11,000 சரணடைந்த போராளிக் கைதிகளும் இருப்பதாக இறுதியாக அறிவித்தது. அதாவது தடுப்பு முகாங்களில் இருந்து பின்பு பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் தொகையுடன் இத் தொகை இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

சரணடைந்த போராளிகளுள் ஒரு பெரும் தொகையினர் வன்னியின் கணக்குக்கு வெளியிலே இருந்து ஏற்கனவே இணைந்து போராளிகளாய் இருந்தோரும் அடங்குவர். எப்படியோ 3,80,000 பேருக்கு நாம் கணக்குக் கண்டாக வேண்டும். எஞ்சி இருக்கும் 2,70,000 பேருக்கும் அப்பால் (போராளிகள் தொகை உள் நீங்கலாகவோ அன்றி புற நீங்கலாகவோ என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்) 1,10,000 பேருக்கு கணக்குக் கண்டாக வேண்டும். இதில் குறைந்தது 90,000 பொது மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபாயகரமான கணக்கு எமக்கு தெரியவரும். இன்றைய தகவல் யுகத்தில் படுகொலை செய்யப்பட்வர்களது சரியான தொகையை கண்டறிவதில் கஸ்டம் இருக்க மாட்டாது.

சமாதான காலத்தில் கட்டுமானப்பணி, நிர்வாகப்பணி போன்ற பணிகளின் அடிப்படையில் வன்னிக்கு வேலை தேடி வந்தவர்களும், அவர்களது குடும்பங்களும் என ஒரு பெரிய தொகையின் கணக்கு உள்ளது. இத்தொகையினர் எத்தகைய அரசாங்கப் பதிவுகளிலும் இல்லை. மேலும் பிள்ளைகள் இயக்கத்தில் போராளிகளாக இருப்பதன் பெயரில் வன்னிக்கு வெளியே இருந்து உள்வந்தோரும், இராணுவ அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவ்வாறு உள்வந்தோரும் என அரச பதிவுக்குட்படாத இன்னொரு தொகையினரும் உண்டு.

மேலும் படுகாயம் அடைந்திருப்போர், வீட்டுக்கு வீடு மரணமடைந்திருப்போர், தம் சொத்துக்களையும் குடியிருப்புக்களையும் இழந்திருப்போர் என பாதிப்பின் பரிதாபம் வன்னிக்குள் நீடிக்கும் அதேவேளை வன்னிக்கு வெளியே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் வன்னியில் மாண்டு போன தமது சொந்தங்களால் துயருறும் அளவும் கருத்திற்கெடுக்க வேண்டிய பெரும் கணக்குகளாகும். அதாவது வன்னிப் படுகொலையால் பாதிக்கப்படாதவன் என்று ஒரு தமிழன் இருக்க முடியாத அளவிற்கு வன்னிப் படுகொலையின் கொரூரம் அமைந்துள்ளது.

சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் மதிப்பீட்டில் கலாச்சாரத்தின் வலிமை முக்கியமானது. இந்தியாவின் கருவியாக தமிழரைப் பார்ப்பதன் வெளிப்பாடாகவே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியல் காணப்படுகிறது. எனவே சிங்கள அரசியல் கலாச்சாரம் என்பது இந்திய எதிர்ப்பின் அடிப்படையிலான தமிழின எதிர்ப்பாக உள்ளது. இந்த வகையில் தமிழரை ஏமாற்றுவதை, தமிழரைத் தோற்கடிப்பதை, தமிழரை அழிப்பதை தமது அரசியற் கலாச்சாரமாக சிங்கள இனவாதிகள் கொள்கின்றனர். ஆதலால் அவர்களிடம் இருந்து தமிழர்கள் தமக்கு உரியதான உரிமைகள் எதனையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள தலைவர்களிடம் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதானது கண்களை கறுப்புத் துணிகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானவில்லை ரசிப்பதற்கு ஒப்பானது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பொருந்தும்.இருப்பதில் இருந்துதான் அடுத்ததைத் தேடவேண்டும் என்பதற்கு இணங்க இராஜதந்திர அணுகுமுறைகளை நாம் நிராகரிக்கப் போவதில்லை. ஆதலால் சிங்களத் தலைவர்களிடம் எதையாவது எதிர்பார்ப்பதாயின் மேற்கண்ட விளக்கமும் அதற்கு பின்னணியாய் இருக்க வேண்டியது அவசியம். எமது மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டு கால தோல்வியில் இருந்து விடுவிக்க நாம் நல்மனத்துடனும், ஐக்கிய உணர்வுடனும், ஜனநாயக எண்ணங்களுடனும் பரந்துபட்ட மனித நேயச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியது அவசியம்.


2. புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது
 
வன்னி மண்ணுக்கென ஒரு தனிமிடுக்கு வரலாற்றில் உண்டு. 1995 ஆம் ஆண்டு 'றிவரஷ' இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களும், மட்டக்களப்பு மக்களும் வன்னி மண்ணில் வன்னி மாந்தருடன் சங்கமிக்கத் தொடங்கினர். அந்த சங்கமிப்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்கள் திரண்டு இலட்சக் கணக்கில் வன்னி மக்கள் என அழைக்கப்படலாயினர். இந்த மக்களே ஒன்றரை தசாப்த காலமாய் யுத்தத்திற்கு நேரடியாய் முகங்கொடுப்போர் ஆயினர். வெளியுலகில் இருந்து பிரித்து அறுக்கப்பட்ட வன்னிக்கு உலகம் இருண்டிருந்தது. வெளியுலகின் கண்ணிற்கு ஒரு பாதாள உலகாய் அது காட்சியளித்தது. நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றிற்கு மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கீற்றுடன் மக்கள் வாழ்ந்தனர்.

அரசு பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெளியுலகத்துடன் வன்னிக்கான தொடர்புகளை அறுத்தது. மருந்தில்லை, உரிய உணவில்லை, கல்வியில்லை, அறிவியல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. வெறுமனே ஜீவாதார வாழ்வுக்கான அரிசி, பருப்பு என்பவற்றுடன் வன்னியின் கால்நடைகளும் மக்களைத் தக்கவைத்தன. அனைத்து சுமைகளும் மக்களின் தலைகள் மேல் சுமத்தப்பட்டன. எல்லாத் துயரங்களும் மக்களுக்கே என்ற நிலை ஏற்பட்ட போதிலும் மக்கள் சளையாது துயரத்திற்கு முகம் கொடுத்தனர்.

வன்னி அடையாள அட்டை என்றாலே அவர்கள் பாவக்கிரகத்து தீண்டத்தகாத மக்கள் என அரசு முத்திரை குத்தியது. உணவுத் தடையாலும், பொருளாதாரத் தடைகளாலும், மருத்துவத் தடைகளாலும் மற்றும் பெரும் இயற்கை நோய்களாலும் துயரத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. எறிகணைகள் மக்களை பதம் பார்த்தன. இராணுவ நடவடிக்கைகள் மக்களை ஊர்விட்டு ஊர் துரத்தின. மரணம் வீட்டுக்கு வீடு தவறாது நிகழ்ந்தது.

போராளிகளாய் பிள்ளைகள் யுத்தகளத்தில் சமராடினர். பெற்றோரும் மற்றோரும் யுத்தகளங்களில் பதுங்குகுழி அமைப்போராய் எந்நேரமும் மரணத்தை தழுவுவோராய் காணப்பட்டனர். இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் மனம் சலிக்கவில்லை.

தாங்க முடியாத பொருளாதார சுமைகளும், யுத்த சுமைகளும் அவர்களின் முதுகை ஒன்றரை தசாப்தமாய் அழுத்திக்கொண்டே இருந்தது. குறைந்த வளத்துடனும் இத்துணை நெருக்கடிகளுடனும் மக்கள் வாழ்ந்த போதிலும் அவர்கள் அன்புக்கு குறைவற்றோராய் இலட்சியப் பற்றுமிக்கோராய் போராட்டத்தை நேசிப்போராய்க் காணப்பட்டனர்.

முழுத் தமிழீழ மக்களின் போராட்டச் சுமையையும் வன்னியில் வாழ்ந்த 4,00,000 மக்களே பெரிதும் சுமந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் தாம் கொண்டிருந்த முழு அளவிலான இந்திய எதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையும் 4,00,000 வன்னிமக்கள் மீதே முழுமையாய் பிரயோகித்தனர். வன்னியின் வீழ்ச்சி தமிழரின் வீழ்ச்சியாயும், தமிழரின் வீழ்ச்சி எதிர்காலத்தில் இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமையக்கூடிய அபாயம் உண்டு.

இவ்வாறு புரிந்துகொண்டால் வன்னி மக்கள் இப்பிராந்தியத்தின் சமாதானத்தையே தம் முதுகில் சுமந்திருக்கிறார்கள் என்ற உண்மையை வரலாறு எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளும். இக்கருத்துப் பின்னணியில் வன்னிப் படுகொலையை நாம் பார்க்க வேண்டும்.

கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஒன்றரைத் தசாப்தமாய் தொலைந்து போன அவர்களது வாழ்வின் வசந்தங்களையும், மறைந்து போன பிஞ்சுகளையும், இளசுகளையும் அவர்களின் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள எமக்கு ஓர் இதயம் வேண்டும். 'புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது' என்ற கூற்றுக்கிணங்க புள்ளிவிபரங்களைக் கடந்து துயரங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனமும் அதற்கான ஒரு பண்பட்ட உள்ளமும் வேண்டும்.
எல்லா வெற்றிக்கும் தளமாய் அமைந்தவர்கள், எல்லாச் சுமையையும் முதுகில் சுமந்தவர்கள், தோல்வியின் வாயில் இரையாய்ப் போயினர். யாரறிவார் வன்னி மண்ணின் பெரும் துயரை....!


3. சிங்கள இராணுவத்தின் பாலியல் சுகபோக முகாம்.
யாராலும் இதுவரை முக்கியத்துவப்படுத்தப்பட்டிராத சிங்கள இராணுவத்தின் செயல் திட்டம் ஒன்று இங்கு கவனத்திற்குரியது. பெண் போராளிகளை உயிருடன் கைப்பற்றுவதும், அவர்களை சிங்கள இராணுவத்தினரின் பாலியல் தேவைக்கு பலாத்காரமாய் பயன்படுத்துவது என்பதுமே அத்திட்டமாகும்.

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தாம் வெற்றி கொண்ட இடங்களில் பெண்களை கைது செய்து தமது இராணுவத்திற்கான சுகபோக முகாங்களை யப்பானிய இராணுவம் அமைத்துக் கொண்டது. இதுவரை இது உலகில் மிகப் பெரும் கண்டனத்திற்குரிய மனிதாபிமான பிரச்சினையாய் உள்ளது. (Japanese military comfort women) http://www.museology.org/japan.html. அதனைவிடவும் மோசமான முறையில் 21ஆம் நூற்றாண்டில் சிங்கள பௌத்த இராணுவம் தமக்கென சுகபோக முகாம் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளது.

காவல் கொட்டில்களிலும், எல்லைக் காவல் நிலையங்களிலும், யுத்த களங்களிலும் மற்றும் சுற்றி வளைப்புகளிலும் பெண் போராளிகளை இராணுவம் தமது இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடிப்பதில் அக்கறையாய் இருந்துள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் பெண்களை முழு நிர்வாணமாகவே எப்போதும் அவர்கள் வைத்திருந்துள்ளனர்.

பெண் போராளிகளை இவ்வாறு அவர்கள் பிடித்ததும், தாம் பலாத்காரம் புரியப்போகும் செய்தியை எல்லையில் இருக்கும் ஏனைய ஆண் போராளிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களது வோக்கிரோக்கியில் கேட்கக் கூடியவாறு பெண்கள் மீது பலாத்காரத்தைப் புரிவார்கள். அப்போது பெண்களின் அந்த அலறல் ஒலிகளை ஆண் போராளிகளுக்கு வோக்கிரோக்கி வாயிலாக கேட்கச் செய்துவிட்டு தமது அட்டகாசமான வார்த்தைப் பிரயோகங்களை சிங்களத்திலும், தெரிந்த தமிழிலும் பேசிக்காட்டுவார்கள். அவ்வாறு இராணுவத்தினர் பேசும் போதும் இழிவான வார்த்தைகளையும், தமது குதூகலத்தையும் வெளிப்படுத்துவது வழக்கம்.
இரட்டைவாய்கால் படுகொலைக் காலத்தில் படகின் மூலம் தப்பியோடிய போது ஒரு போராளியின் மனைவி படையினரால் பிடிக்கப்பட்டார். 

அப்பெண்ணை பற்றிய ஒரு நேர்முகப் பாலியல் வர்ணனையை வானொலியில் துடுப்பாட்ட வர்ணனை (commentary) சொல்வது போல கொச்சைத் தமிழில் வோக்கி வாயிலாக படையினர் செய்தனர். வன்னி வாய் பேசத் தொடங்கும் போது இத்தகைய கொரூரங்கள் மேலும் மேலும் வெளிவரும். இராணுவத்தினரே தமது ரசிப்புக்காக இவற்றை ஒளிநாடாக்களாக வைத்துள்ளதுடன் இவற்றை அவர்கள் வெளியிலும் பரவவிட்டுள்ளார்கள்.

பூலான்தேவியை தாகூர்கள் தமது வீட்டில் நிர்வாணமாக பணியாற்றச் செய்தது போன்ற சில சம்பவங்களை மட்டும் கேட்டு கண்ணீர் விட்ட எமது இதயங்கள் எமது தமிழ் பெண்களுக்கு நடந்திருக்கும் வெளிவராத இக்கதைகள் வெளிவரும் போது ஒரு பூலான்தேவியென்ன அதைப் போல் ஆயிரக்கணக்கான பூலான்தேவிகளை நாம் கண்ட துயரம் எமது மனங்களில் வடுவாய் வளரும். யாரெல்லாம் இதற்கு பதில் சொல்வார்கள்?

புனைகதைகளும், கற்பனைத் திரைப்படங்களும் கண்டிராத பெரும் பாலியல் கொடுமைகளும்; சித்திரவதைகளும் பௌத்தம் பேசும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் பெண்கள் மீது அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களும், தகவல்பட தயாரிப்பாளர்களும், புலனாய்வு நிபுணர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டு இத்தகைய மனித குல விரோத பாலியல் கொடுமைகளையும், அநாகரிகங்களையும் வெளிக்கொணரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்று நீதி நியாயத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும் நம்புவோமாக.சொல்லியழ எவருமின்றி!

யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.

அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. பின்னாளில் ஈழப் போரின் முழுச் சுமையையும் வன்னி மக்கள் முதுகில் சுமந்தனர். இலட்சியத்திற்காக உயிர், பொருள், உடமை, உழைப்பு, எண்ணம், உணர்வு, சிந்தை, செயல், பந்தம், பாசம், அனைத்தையும் அம்மக்கள் ஈழப்போரட்டத்திற்கு ஆகுதியாக்கினர்.

எதிரியோ தனது அனைத்து வளங்களையும் மஹிந்த சிந்தனையின் பெயரால் ஒருங்கு திரட்டி உலகை அரவணைத்தும், வன்னியை தனிக்கப்பிடித்தும் தனது கோரப் பற்களை வன்னியின் மீது கவ்வவிட்டார். தனது அறிவையும், ஆற்றலையும், சூழ்ச்சியையும், தந்திரத்தையும் கொண்டு, உலகை தன் கையில் கதாயுதமாய் ஏந்திய எதிரி, அப்பாரிய கதாயுதத்தால் வன்னி மண்ணை ஓங்கி உதைத்தார். மண்ணும் மக்களும், பயிர்களும் உயிர்களும், காடும் வயலும், பொன்னும் பொருளும், ஊரும் பெயரும் என அனைத்தையும் எதிரி தன் யுத்தத் தேர்க்காலுக்கு இரையாக்கினார். வன்னி மக்கள் தேர்க்காலில் சிதைந்து ஊர முடியாத அட்டைகளாய் நசியுண்டு இழுபட்டனர்.

சொந்தங்களை இழந்தனர். பந்தங்களையும் பாசங்களையும் இழந்தனர். சொத்துக்களையும் பத்துக்களையும் இழந்தனர். பத்து என்பதில் மானமும், மரியாதையும் தமிழர் ஏற்றிப் போற்றும் அனைத்து விழுமியங்களும் அடங்குகின்றன. எதிரி தன் கோரப் பற்களை பாலியல் பலாத்காரத்தில் தெளிவாக பதித்துக் கொண்டான்.

மேலங்கிக்காக போராடப் புறப்பட்டு, கோவணத்தையும் பறிகொடுத்த கதையாய் தமிழ் மக்களின் துயரம் உள்ளது. இதில் வன்னிமக்களின் துயரம் உச்சாணிக் கொம்பாய் காட்சியளிக்கிறது. வன்னி என்பது ஒரு நிலநூல் சொல்லாக மட்டுமன்றி, தமிழீழப் போராட்டத்தின் ஒரு குறியீட்டுப் பதமாகவும் மாறிய சொல் அது. தமிழீழம் எனும் இலட்சியத்தையும், உலகத் தமிழினத்தின் கனவையும் காவிநின்ற மண்ணாயும், மக்களாயும், பதமாயும் வன்னி அமைந்தது.

கடித்துக் குதறப்பட்ட அந்த மக்கள் இன்று எதிரியின் காலடியில் வீழ்ந்து கிடப்போராய், கைவிடப்பட்டோராய், அன்னியர்களின் தயவுக்கு கையேந்தி நிற்போராய் காட்சியளிக்கின்றனர். இந்த மக்களின் துயரத்தை வரலாறு சரிவரப் பதிவுசெய்ய வேண்டும். எல்லாத் துயரும் அவர்களுக்கே என்று எழுதி வைத்தாற் போல, துயரப்பட்ட அந்த மக்களை நோக்கி, எல்லாக் கவனமும் அந்த மக்களுக்கே என்று முதலில் நாம் எமது வளங்கள் அனைத்தையும் அங்கு திருப்ப வேண்டும்.

'சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்'. சிதைக்கப்பட்டிருக்கும் கிழக்கையும், வன்னியையும் கவனத்தில் எடுத்து அவர்களுக்கான வேலைத்திட்டத்தை முதலில் வகுப்பதே தமிழீழப் போராட்டத்தின் தலையாய பணியாய் தற்போது அமைய வேண்டும்.

வன்னிப் பெருந்துயரை எப்படிப் பதிவது. அது ஏடு தாங்காப் பெருந்துயரம். கடலாலும், காட்டாலும், இராணுவ வேலியாலும் சுற்றி மூடிக் கட்டப்பட்டிருந்தவர்கள் வன்னி மக்கள். இத்தகைய ஒரு கூட்டுக்குள் இருந்தும் அவர்கள் கூவத் தவறவில்லை. போரட்டத்திற்காக அனைத்துக் கடப்பாடுகளையும் அவர்கள் ஏற்றார்கள். எதிரியின் அனைத்துவகைத் திணிப்புகளையும் சுமந்தார்கள். எதிரியின் அனைத்து வகை பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தமது பொருளாதாரத்தைப் போராட்டத்திற்கு ஈய்ந்தளிக்க அவர்கள் தயங்கவில்லை. தங்கள் தலைப் பிள்ளைகளை போராட்டத்திற்கு உரமாக்கினார்கள். விரும்பியும், விரும்பாமலும் போராட்டத்திற்கான ஆள்பற்றாக்குறைக்கு அவர்கள் தம் பிள்ளைகளை மேலும், மேலும் கொடுக்க நேர்ந்தது. எல்லாவற்றையும் இலட்சியத்துக்காகவே சுமந்தார்கள்.

பிள்ளைகள் மட்டும் களங்களில் நின்று போராடினார்கள் என்றில்லை. எல்லா வகையிலும் அவர்கள் போராட்டத்திற்கு முதுகு கொடுத்தார்கள். இயக்கம் அழைப்பு விடுத்த அத்தனை படைகளுக்கும் முது வயதிலும் அவர்கள் பங்காளியானார்கள். அதிகாலையில் முதியவர்கள் ஆண், பெண் வேறுபாடிறின்றி கொட்டனுடன் பயிற்சி எடுக்கும் காட்சிகளை மனித குல வரலாறு வன்னி மண்ணிற்தான் பதிவு செய்திருக்கிறது என்பதை எமது கண்கள் காணத் தவறக்கூடாது. பிள்ளை போர்க்களத்தில், தாயோ பயிற்சிக் களத்தில் என வரலாறு நகர்ந்தது.

இத்தனை தியாகங்களையும் செய்த இந்த மக்களின் முதுகெலும்பில் ஓடிய இந்தப் போராட்டம் ஏன் தோல்வி கண்டதென்பது ஒரு துயரமான கேள்வி. எங்கள் கண்களை நாங்களே துடைத்துக் கொண்டு, ஏன் தோல்வி கண்டோம்? ஏன் குற்றுயிராய்க் கிடக்கிறோம்? இனி எப்படி எழும்பி நடக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளை நாம் தவறாமல் கேட்டு, எம்மை நாம் சுதாகரிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை இங்கு கூறுகிறேன். புதுக்குடியிருப்பு நோக்கிப் போகும் A 32 வீதியது. ரெட்பானா கழிந்து, புதுக்குடியிருப்பு நோக்கி போகும் அந்த வீதியில் உள்ள தேராவில் குளம் வீதியை முற்றிலும் மேவிப் பாய்கிறது. போக்குவரத்து அவ்விடத்தில் முற்றிலும் தடைப்பட்டுப் போய்விட்டது. காட்டுக்குள்ளால் ஒரு புதிய பாதையை சில தினங்களுக்குள் அமைத்து முடித்தாயிற்று. ஆனால் பாதை சேறும் சகதியும், முள்ளும் தடியும் நிறைந்ததாய் உள்ளது. அப்போதும் இராணுவம் தமது எறிகணைகளை கண்துஞ்சாது வீசிக்கொண்டிருக்கிறது.

புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து காட்டுப் பாதையினால் எனது உறவினரைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். அப்போது காட்டுப்பாதை கடந்து குளம் மூடியுள்ள விளிம்பு வீதியில் ஏறுகிறேன். அந்த வேளை வீதியைக் குளம் மூடியிருக்கும். அந்த விளிம்பில் குந்தியவாறு, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுத வண்ணம் இருக்கிறார். நான் அவரை அணுகுகிறேன். அவரது தோளில் கையை வைத்தவாறு அவரை வினவுகிறேன்.

அப்போது அவர் பெரிதாக அழத்தொடங்கினார். அழுது கொண்டு ஆற்றவியலாத் தன் கொடிய துயரை நைய்ந்த குரலில் சொல்லத் தொடங்குகிறார். ரெட்பானா பிரதேசத்ததின் முற்பகுதியில் அவர் குடியிருந்தார். எறிகணை வீச்சில் இருந்து தப்புவதற்காக அங்கு மக்கள் இடம் பெயரத் தொடங்கினர். அதில் இவரது குடும்பமும் ஒன்று. அவ்வாறு இவரது குடும்பம் ஓடி வந்து கொண்டிருந்த போது அகோர எறிகணைவீச்சு நிகழத் தொடங்கியதால், வீதியோரத்தில் ஏற்கனவே புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் வீடு இருந்தது. அந்த வீட்டுக்குள் ஒரு சிறிய பதுங்குகுழி இருந்தது. அப் பதுங்கு குழிக்குள் தாயும், தந்தையும், மூன்று பிள்ளைகளும் என இக்குடும்பம் பதுங்கிக் கொண்டது.

சிறிது நேரம் கழிந்ததும் பதுங்குழியில் இருந்த ஒரு பிள்ளை தண்ணீர் கேட்டது. தகப்பன் அவ்வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார். அவ்வேளை ஓர் எறிகணை அந்த சிறிய பதுங்கு குழியின் மீது வீழ்ந்து வெடித்தது. தந்தை ஓடி வந்தபோது தாயும், மூன்று பிள்ளைகளும் அச்சிறிய பதுங்கு குழியில் துடிதுடித்து இறந்தனர்.

தந்தை பின்வருமாறு சொன்னார். 'எனது கையால் எனது மூன்று பிள்ளைகளையும், எனது மனையையும் அந்த பங்கருக்குள் மூடிப்போட்டு வந்திருக்கிறேன். எப்படி ஐயா நான் தாங்குவேன். கொடிய கடவுள் என்னையேன் கொல்லவில்லை?'

மரணச்சடங்கு எதுவுமின்றி, கூட நிற்பார் யாருமின்றி, சொல்லியழ எவருமின்றி மூன்று பிள்ளைகளுக்கும், தாய்க்குமான புதைகுழி மூடப்பட்டது.

ஆனால், சில வாரங்களின் பின்பு, புதைப்பார் அற்று கைவிடப்பட்ட நிலையில் ஆங்காங்கே பிணங்கள் அநாதரவாய் கிடந்த காட்சியைக் கண்ட போது புதைக்கப்பட்டோர் பாக்கியவான்களோ! என்று மனம் வியந்தது.


யாருக்காக யார் அழுவது?

'ஏமாந்துவிட்டோம் - எதிரி எம்மை ஏமாற்றிவிட்டான்' என்று காலத்துக்கு காலம் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் கூறிவருவது வழக்கம். ஆனால் தொடர்ந்து ஏமாறுகிறோம் என்றால் தவறு எதிரியிடம் அல்ல - எம்மிடந்தான் இருக்கிறது.

இலட்சிய வேட்கையுடன் எழுவதும், பின்பு எதிரியின் காலடியில் மூச்சையற்று வீழ்வதும் எமது வரலாறாய் உள்ளது. கானல் நீரை வானத்து தேவதைகளாக எண்ணி முன்பின் பாராது ஓடிப் போவதும், பின்பு கையறு நிலையில் வெட்கித் தலைகுனிவதும் எமது அரசியல் வாழ்வாய் தொடர்கிறது.

குறைவற்ற இலட்சியப் பற்றும், அளவற்ற தியாகமும், நிகரற்ற அர்ப்பணிப்பும் நிரம்பிய மக்கள் நாம். ஆனால் தோல்வியையும், வேதனைகளையும், தலை குனிவுகளையும் தவிர வரலாற்றில் இதுவரை வேறு எதனையும் அறுவடை செய்ததில்லை.

வீழ்ச்சிக்கும், தோல்விக்கும், துயருக்கும், இழப்புக்கும் பின்பு நாம் அதற்கான உண்மைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக எதிரியை திட்டித் தீர்ப்பதிலும், விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று வரட்டு வியாக்கியானம் அளிப்பதிலும் அளப் பெரிய நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கின்றோம்.
நாங்கள் ஏன் காலம் காலமாய் தோற்கிறோம்?

ஏன் எதிரிகளின் காலடியில் கதியற்று வீழ்கிறோம்?

எங்கள் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் ஏன் வீண் போகின்றன?

ஏன் எந்த வெற்றியையும் அடையவோ அன்றி, அடைந்தவற்றைத் தக்க வைக்கவோ முடியாதவர்களாய் இருக்கிறோம்?

தோல்விகளுக்கான பொறுப்புக்களை எதிரியில் சுமத்துவதா?

அல்லது நாங்கள் ஏற்பதா?

யார் பொறுப்பு?

இத்தகைய கேள்விகளுக்கு நாம் நியாயபூர்வமாகவும், நாகரீகமாகவும் பதில் காணத் தவறுவோமேயானால் தோல்விகளை இன்னும் நூற்றாண்டுக் கணக்கில் காவிச்செல்ல நேரும். அதற்காக வரலாறு எம்மை எள்ளி நகையாடும்.
வன்னிப் படுதோல்வியும், வன்னி இனப்படுகொலைகளும் 21 ஆம் நூற்றாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தையும், ஒரு புதிய படிப்பினையையும் வரலாற்று அரங்கில் தோற்றுவித்துள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் நூற்றாண்டுக் கணக்கான சங்கிலித் தொடர் தோல்விக்கான காரணங்களுள் ஒன்று சர்வதேச அரசியல் பற்றிய பார்வையும், பொருத்தமான ஒரு வெளியுறவுக் கொள்கை பற்றிய நோக்கு நிலையும் நூற்றாண்டுக் கணக்காய் தமிழ் தலைமைகளிடம் இருக்கவில்லை என்பது.

முள்ளிவாய்க்காலில் இனவாதமும், சர்வதேச சக்திகளும் ஒரு பரிசோதனையை நடாத்தி முடித்துள்ளன. இதனை ஓர் உள்நாட்டு பரிமாணத்தில் மட்டும் விளங்காது சர்வதேச அரசியல் ஒழுங்கிலும், 'சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு' என்ற படச்சட்டக் கட்டுக்குள்ளும் வைத்து விளங்க வேண்டிய அவசியம் எம்முன் உண்டு.

எல்லாவற்றுக்கும் அப்பால் எம்மிடம் எது எஞ்சியிருக்கிறதோ அதுதான் அடுத்த கட்ட வரலாற்றை காவிச் செல்லப் போகிறது. எனவே எஞ்சியிருப்பதைப் பற்றிய மதிப்பீடும், காவக்கூடிய சுமையும், செல்லக் கூடிய தூரமும், செல்வதற்கான வழிவகைகளும், செல்வதற்கேற்ற ஏதுக்களும் பற்றிய கணிப்பீடு மிகவும் சரியாக அமைய வேண்டும். இவற்றின் அடிப்படையில் யதார்த்தபூர்வ அடியெடுப்புடன் மட்டுமே நாம் பயணிக்க முடியும்.
வன்னிப் பெருநிலத்தில் எல்லாவகைப் பரிசோதனைக் களமாகவும் எங்கள் மக்கள் ஆக்கப்பட்டார்கள். அக்கினிக் குண்டுகளுக்கு எங்கள் மக்கள் இரையானார்கள்.

இறந்துபட்டோர் பற்றிய துயரம் ஒருபுறமும், அக்கினிக் குண்டுக்கு ஆகுதியாய் இறக்கப் போகின்ற இனியவர்கள் பற்றிய துயரம் இன்னொரு புறமுமாய் வன்னி வாழ் மக்கள் தங்கள் துன்ப துயரங்களை சுமந்தார்கள். என்நெஞ்சில் கனக்கும் துன்பங்களையும், துயரங்களையும் நான் எழுத்தில் வடிப்பது ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டும் இருப்பதற்கல்ல. இத் துன்பத்துக்கு முடிவுகட்ட வேண்டிய தீர்வு காணும் பொறுப்பின் பொருட்டுமாகும்.

என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு குடும்பத்தின் காலம் ஓராண்டு மட்டுமே. ஆயினும் அக்குடும்பம் என் இதயத்தில் பதித்த தாக்கம் பெரிது. அவள் க.பொ.த. உயர்தர மாணவி. மிகவும் அழகாகவும் துடுக்காகவும் இருப்பாள். அவள் பிறந்த அன்று அவளின் தாய் இறந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு அக்காக்களும், இரண்டு அண்ணாக்களும் இருந்தனர். தந்தை அவளை மிகவும் செல்லமாக வளர்த்தார். அவளது ஓர் அக்கா யாழ் பல்கலைக்கழக பட்டதாரி. அவள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் பணிபுரிந்தாள். மற்றைய அக்கா மணமாகி விட்டார். ஓர் அண்ணன் கடற்புலிப் போராளி. மற்றைய அண்ணன் க.பொ.த. உயர்தரம் கல்வி கற்றுக்கொண்டிருந்தான்.

இவளது ஆசை தான் ஒரு மருத்துவராய் வரவேண்டும் என்பது. மிகவும் கெட்டிக்காரி. வெட்டொன்று துண்டிரண்டாய் பேசும் இயல்புள்ளவள். ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய அறிவிருந்தது. எல்லோருக்கும் இவளே வீட்டில் செல்லம். ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பில் குடும்பத்தில் இன்னொருவர் இணைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. தாயின்றி தாம் செல்லமாக வளர்த்த இவளை போராளியாக்க யாரும் தயாராய் இருக்கவில்லை. மற்றைய அண்ணன் தங்கையைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக போராளியாகினான்.

இப்போது குடும்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகளும் போராளிகள் ஆகிவிட்டனர். ஆனால் அண்ணன் போராளியானது தங்கையையும், ஏனைய சகோதரிகளையும் பெரிதும் வாட்டியது. இப்போது இரு அண்ணன்களும் போராளிகள் என்ற போராளி அட்டை கையில் இருப்பதால் இவள் வெளியே நடமாடுவது சாத்தியப்பட்டது. இந்நிலையில் அவள் அவ்வப்போது என்னைப் பார்க்கவும், என்னுடன் ஏதாவது பேசி ஆறுதல் பெறவும் வருவாள். இவளது பட்டதாரி அக்கா என்னைக் கண்டதும் தன் போராளித் தம்பிமாரைப் பற்றி சொல்லிக் கண்கலங்கத் தொடங்குவாள்.

தற்போது தொடர்ச்சியான இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. சில நாட்களே ஓரிடத்தில் தங்கலாம் எனும் நிலை. இப்போது நாம் இடம் பெயர்ந்து சுதந்திரபுரத்தில் அரசாங்கம் அறிவித்த 'பாதுகாப்பு வலயத்தில்' இருக்கிறோம். உணவு, நீர், கழிப்பிட வசதியின்மை என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஓயாது கூவி விழும் எறிகணை வீச்சுக்கள்.

இந்த எறிகணையில் ஒன்று இவளது கூடார வீட்டின் மீது வீழ்ந்தது. தந்தையும் இவளும் காயமுற்றனர். காயமுற்ற தந்தையையும், தங்கையையும் நாடி பட்டதாரி அக்கா ஓடிப் போகிறாள். ஒரு எறிகணை அவளுக்கென்று ஏவினாற் போல அவளுயிரைப் பலிகொண்டது.

சுதந்திரபுரத்தில் வைத்தியசாலைக்கு அருகே குடியிருந்த எனக்கு இச் செய்தி கிடைத்ததும் நண்பர்கள் சிலருடன் இவர்களது வீட்டுக்குச் செல்கிறேன். செல்லும் வழியில் மணம் செய்து ஓராண்டு பூர்த்தியாகாத ஓர் ஆசிரியையின் துணைவன் சில நாட்களுக்கு முன் எறிகணை வீச்சில் இறந்து விட்டார் என்றும் அவரது வீடு அந்த வழியில் இருப்பதை அறிந்து அந்த வீட்டுக்குச் செல்கிறோம். அவள் தனது துணைவனின் கோர மரணத்தைச் சொல்லி கதறியழும் காட்சி எமது நெஞ்சைக் குடைந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாதவாறு தனது நீண்ட காலக் காதலையும், பெரும் போராட்டத்தின் பின்பான தனது திருமணத்தையும் சொல்லி, அது நிலைக்காது போன வேதனையை அவள் தன் கதறலால் வெளிப்படுத்திய போது இந்தப் பூமியே திரண்டழுவது போல் எனக்கிருந்தது.

எம் பயணம் எறிகணை வீழ்ந்த வீட்டை நோக்கி நகர்கிறது. அந்த துடுக்கான அழகி காயத்துடனும், துவண்ட உருவத்துடனும் தன் அக்காவின் இழப்பை எண்ணிக் கதறியழுகிறாள். அவளின் மனத்தில் அவளின் தந்தைக்குரிய ஸ்தானம் எனக்கிருந்தது. அவளின் திறமையைப் பாராட்டுவதிலும், அவளை ஊக்குவிப்பதிலும் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. இப்போது அந்த துயர்தோய்ந்த முகத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கேற்பட்டது.

என்னைக் கண்டதும் தன்னிடம் இருந்த சக்திகள் அனைத்தையும் வரவழைத்து ஓவென்று கதறியழுதாள். 'ஐயோ! அக்கா தானே எனக்கு அம்மா. உங்களுக்கு தெரியும் தானே -அக்கா என்மீது உயிரையே வைத்திருத்தாள் என்று. என்னைக் காப்பாற்ற வந்துதானே அக்கா சாகவேண்டி வந்தது. ஐயோ நானும் சாகப்போறன்' என்று என்முன் அவள் கதறிப் புழுவாய்த் துடித்த காட்சி என் கண்முன் இன்னும் படமாய் உள்ளது.

அங்கிருந்து நான் கூட வந்தவர்களுடன் வீடு திரும்புகிறேன். அப்போது வழியில் தெரிந்த இன்னொரு குடும்பத்தினர் என்னைக் கண்டு மறிக்கின்றனர். நான் அவர்களுடன் பேசிக்கொள்ள என்னுடன் வந்தவர்கள் வைத்தியசாலையில் காயப்பட்டோருக்கு உதவுவதற்காக முன்னே செல்கிறார்கள். சிறிது நேரம் கழிந்து விட்டது. எம்மைக் கடந்து சென்ற ஓர் எறிகணை சுமாராக 200 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்தது. நான் பேசுவதை நிறுத்திவிட்டு எறிகணை வீழ்ந்த இடம் நோக்கி நகர்கிறேன். எட்டு அல்லது ஒன்பது வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான். தாய் கதறியழுகிறாள்.

மீண்டும் ஓர் எறிகணை தலைக்கு மேலாய் கூவிச் செல்கிறது. மக்கள் அங்கிங்காய் ஓடுகின்றனர். ஐயோ! என்ர குஞ்சுகள் என்று கூறியவாறு தாய் ஏனைய இரண்டு பிள்ளைகளை கையில் பிடித்த வண்ணம் அவர்களை பாதுகாப்பதற்காக பதுங்குழி ஒன்றை நோக்கி ஓடுகிறாள். இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் பிள்ளையை அப்படியே விட்டுவிட்டு எந்தொரு தாயும் ஓடுவாள் என்று கற்பனை செய்ய முடியாது. ஆனால் இங்கு அவள் ஓடுகிறாள்.

தன்னுயிரைக் காப்பதற்காக அவள் ஓடுகிறாள் என்று நான் நினைக்கவில்லை. தனது ஏனைய இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக அவள் ஓடுகிறாள். அன்பும் பாசமும், பொறுப்பும் பண்பாடும், கடமையும் உணர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு இரத்தமும் தசையுமான யதார்த்தத்தால் நிறுத்துப் பார்க்கப்படும் ஒரு கொடிய அனுபவம் இது.

எந்தவொரு தாயாலும் இரத்த வெள்ளத்தில் இருக்கும் தனது பிள்ளையை விட்டுவிட்டு ஓடமுடியுமா? ஆனால் இங்கு அப்படித்தான் யதார்த்தம் எல்லோரையும் வழிநடத்தியது. இறந்து போன தமது பாசத்திற்குரியவர்களின் துயரம் ஒரு புறமும், உயிருடன் இருக்கும் தம் இனியவர்களை இழந்திடுவோமோ என்ற ஏக்கம் அதை விடப் பெரிதாகவும் அலைமோதிய ஒரு துயரத்தை என் மனத்தராசில் அளந்து பார்க்க முற்படுகிறேன். இவ்வாறு சொல்லும் போது, இதனை அளக்கக்கூடிய ஒரு பொருளென்று நான் கருதவில்லை. ஆனால் அப்படி ஒன்றுடன் ஒன்று மோதிய அந்த வினோதமான அனுபவத்தை இப்படித்தான் என்னால் வெளிப்படுத்த முடிகிறது.

யாருக்காக யார் அழுவது? எறிகணை துரத்த நானும் ஓடுகிறேன். இறந்துவிட்ட சிறுவன் அனாதரவாய் அப்படியே கிடக்க நாங்கள் எல்லோரும் கையறு நிலையில் ஓடுகிறோம். நாம் இருக்கும் வைத்தியசாலைச் சூழலை அண்மிக்கிறேன். வாசல் நிறைய காயப்பட்டோர் அடுக்கடுக்காய் கட்டாந்தரையில் கிடத்தப்படுகின்றனர். அழுகுரலும், அவலமும், கையாலாகாத்தனமும் எம்மைக் கயிறு திரித்தாற் போல் திரித்தெடுக்கிறது.
யாருக்காக யார் அழுவது?

கஞ்சிக் கொட்டில் படுகொலைகள்
 
ஆயுதப் போராட்டம் உருவாகி 30 ஆண்டுகள்தான். இதனைத்தான் சிங்கள அரசு 'பயங்கரவாதம்' என்று கூறுகிறது. ஆனால் இனப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. சமாதான வழியில் அப்பிரச்சினையை தீர்க்க தமிழ்த் தலைவர்கள் முயன்ற போது, சிங்கள அரசு அதனைத் தீர்த்திருந்தால் இலங்கைத் தீவில் இரத்தக் களரி ஏற்பட்டிருக்க முடியாது.

இதனைத்தான் திரு.இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறினார். அரசு கூறும் 'பயங்கரவாதப் பிரச்சினை' தோன்ற முன்பே இனப்பிரச்சினை இருந்தது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டு அதனை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக வர்ணிப்பது தவறு என்ற அர்த்தத்தில் அமைந்திருந்திருந்த அவரின் கருத்து இங்கு மிகவும் கவனத்திற்குரியது.

அரசுகள் தமது தேவைகளுக்கு ஏற்ப போராட்டங்களை 'பயங்கரவாதம்' என்றும், 'விடுதலைப் போராட்டம்' என்றும், 'புரட்சி' என்றும், 'கிளர்ச்சி' என்றும், 'குழப்பம்' என்றும், 'நாசகாரச் செயல்கள்' என்றும் வர்ணிப்பதே சர்வதேச அரசியலில் ஒரு வழக்கமாக உள்ளது. ஓர் அணி நாடுகள் ஒரு போராட்டத்தை 'விடுதலை' என்றழைத்தால், அதன் எதிரணி நாடுகள் அப்போராட்டத்தை 'பயங்கரவாதம்' என்று அழைக்கும். ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலின் பின்பு உலகில் உள்ள எல்லா ஆயுதப் போராட்டங்களையும் 'பயங்கரவாதம்' என்ற சர்வவியாபக பொருளுக்கு உலக அரசியல் கொண்டு வந்துவிட்டது.

இப்பின்னணியில் தமிழீழ மக்களின் மீதான இன ஒடுக்குதலை பயங்கரவாதத்திற்கு எதிரானது என்ற அணிக்குள் போட்டு அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்துயரத்தை ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை, பரிதாபகரமான இனப் படுகொலையை ஒரு கணம் இந்த உலகம் தம் கண்களைத் திறந்து பார்ப்பது அவசியம்.

புதுமாத்தளனில் இருந்து வெள்ள முள்ளிவாய்க்கால் வரையான ஒரு சிறு நிலத்துண்டில் இலட்சக்கணக்கான மக்கள் 'பாதுகாப்பு வலயம்' என்ற பெயரில் அடைக்கப்பட்டாயிற்று. அரசு கூறிய 'பாதுகாப்பு வலயத்தின்' மீது எறிகணைகளும், துப்பாக்கி ரவைகளும் பாய்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு மேலால் விமானக் குண்டு வீச்சுகளும் இன்னொருபுறம் உண்ண உணவின்மை, குடிக்க நீரின்மை, அடிப்படை மருத்துவத்திற்கான மருந்தின்மை, கழிப்பறை வசதியின்மை என ஒருபுறமும், இவற்றின் மத்தியில் இயக்கத் தடையை மீறி வெளியேறத் துடிக்கும் மக்கள் என இன்னொரு புறமுமாய் அங்கு நிலைமைகள் உள்ளன.

இப்பின்னணியில் ஒரு நேர உணவுக்கு வழியில்லாத சூழல் உருவாகிவிட்டது. எறிகணை துரத்தி மக்கள் ஓடும் போது கையில் இருக்கும் ஒரு பிடி அரிசியை எடுத்துக் கொண்டு ஓடத்தவறினால் உணவின்றிச் சாக வேண்டிய துயரம் மறுபுறம் இருந்தது. எறிகணை வீழ்ந்து ஓடும் போது ஒரு பிடி அரிசியைத் தூக்கத் தாமதிப்பவர், மறுகணம் எறிகணையில் சிக்குண்டு இறந்தோரின் பட்டியலில் வருவார். இதனைப் புரிந்து கொண்டாற்தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்த கஞ்சிக் கொட்டில் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.

சுமாராக 500 மீற்றர் இடைவெளிக்கு ஒன்றாக கஞ்சிக் கொட்டில்கள் அமைக்கப்பட்டன. கஞ்சி காய்ச்சத் தேங்காய்ப் பால் இல்லை. ஆரம்பத்தில் பால்மாவைக் கஞ்சியில் கலந்து கஞ்சி காய்ச்சி வார்க்கப்பட்டு வந்தன. பின்பு பால் மாவும் இல்லாது போன நிலையில் அரிசியும், உப்பும் போட்டு கஞ்சி காய்ச்சி வார்க்கப்பட்டது. ஒவ்வொரு கஞ்சிக் கொட்டிலிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி நிற்பர்.

இவ்வாறு பொக்கணையில் ஒரு கஞ்சிக் கொட்டிலில் காலை, மதியம் என இருநேரத்திற்கும் பொதுவாக பகல் 11 மணியளவில் ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமி நின்றனர். இக்கஞ்சிக் கொட்டில்களில் தாய்மார்களும், சிறுவர்களுமே கஞ்சிக்கு காத்திருப்பது வழக்கம். ஏனெனில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சி வயது வந்தோர் மறைவிடங்களில் ஒதுங்கியிருப்பர். இதனால் இக்குழந்தைகளும், தாய்மார்களும் நிரம்பி வழிந்த இக்கஞ்சிக் கூடமே எதிரியின் எறிகணைக்கு இலக்காகப் போகிறது.

வானத்தில் ஒரு வேவு விமானம் இதனைப் படம் எடுத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது. தெளிவாக அவர்களுக்கு இங்கு குழுமியிருப்பது குழந்தைகளும், தாய்மார்களும் தான் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அந்த அரக்கத்தனமான கண்கள் எவ்வித இரக்கமும் இன்றி இலக்குத் தவறாது முதலாவது எறிகணையை வீசியது. குழந்தைகளும், தாய்மாரும் உடல் சிதறி மாண்டனர்.

எறிகணை வீசுவதில் ஒரு தந்திரத்தை எதிரி பயன்படுத்தி வந்தான். அதாவது முதலாவது எறிகணை வீழ்ந்து சுமாராக 5 நிமிடங்களுக்கும், 10 நிமிடங்களுக்கும் இடையேயான இடைவெளியில் இரண்டாவது எறிகணை அவ்விடத்தில் வீழ்ந்து வெடிக்கும். ஏனெனில் முதலாவது எறிகணை வீழ்ந்ததும் காயப்பட்டோரைத் தூக்குவதற்கென சற்று நேரத்தில் மக்கள் கூடுவர். அந்த நேரம் அவ்வாறு காயப்பட்டோரைக் காப்பாற்ற வருவோரைக் குறிவைத்தே இரண்டாவது எறிகணை வீசப்படும்.

ஆனால் இங்கு எதிரி தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டான். அதிகம் மக்கள் குழுமியிருந்ததனால் மக்கள் கூட்டம் கலைய முன்பே அடுத்தடுத்து இரண்டு எறிகணைகளையும் கணப்பொழுது இடைவெளியில் எதிரி வீசினான். இதில் 50க்கு மேற்பட்டோர் அவ்விடத்திலேயே மாண்டனர். காயப்பட்டோர் தொகை இன்னும் அதிகம். இவ்வாறு குழந்தைகளும், தாய்மாரும் காந்திருந்து ஏந்திச் செல்லும் கஞ்சியில்தான் அந்தக் குடும்பங்கள் முழுவதினதும் உயிர் தங்கியிருப்பது உண்டு. ஆனால் இங்கு கஞ்சிச் சட்டியோடு உயிரும் போய்விட்டது. இப்படிக் கஞ்சிக் கொட்டிற் கதைகள் பல.

இவ்வாறே சில தினங்களின் பின்பு பொக்கணை ஆரம்ப சுகாதார மையத்தினரால் குழந்தைகளுக்கென பால்மா விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் நிகழ்ந்த இந்த சோகத்தையும் பொருட்படுத்தாமல் தாய்மார் கைக் குழந்தைகளுடன் பால்மாவுக்கு வரிசையில் காத்திருந்தனர். இதுவும் அந்த வேவு விமானத்தின் கண்களில் படமாய்ப் பதிய நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற இராட்சத நெஞ்சங்கள் இதன் மீதும் ஓர் எறிகணையை வீசியது. டசின் கணக்கில் குழந்தைகளும், தாய்மாரும் மாண்டனர். அந்த வீதி ஓரே இரத்தாறாய் காட்சியளித்தது. இதற்கு 'மனிதாபிமான இராணுவ நடவடிக்கை' என்று சிறிதும் வெட்கப்படாது பெயர் வைத்தார்கள்.

மனித நாகரிகத்திற்கு சிறிதும் பொருந்தாத இத்தகைய கொடும் செயல்களை அரங்கேற்றித்தான் தமது இராணுவ நடவடிக்கைகளை படையினர் முன்னெடுத்தார்கள். இதனை விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என அவர்கள் கூறினாலும் இது புலிகளுக்கு எதிரானது அல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரான ஓர் இனப்படுகொலை தான் என்பதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் மட்டும் போதுமானது.

அதாவது இத்துணைப் படுகொலைக்குப் பின்பும் இலங்கை ஒரே நாடு, ஓரே இனம், ஒரே மக்கள், ஓர் ஒற்றை ஆட்சியரசு என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது 'சுதந்திரதின' உரையில் தமிழ்த் தேசிய இன உரிமையை நிராகரித்து முழு இலங்கையையும் ஒரே சிங்கள இனமயமாக்குவதே தனது கொள்கையென தீவிர சிங்கள இனவாதம் பேசியுள்ளார். அதாவது வேறு எந்த இனத்திற்கும் இங்கு உரிமையில்லை. காகம் கூட சிங்களத்திற்தான் கரையவேண்டும் என அவர் கட்டளையிடுவாரா? அப்படி காகத்திற்கு இருக்கும் தனித்துவம் கூட, தமிழருக்கு இல்லாது போகும் துயரத்தை எந்த இராணுவ நடவடிக்கையாலும் நியாயப்படுத்த முடியாது.
உலக ஜனநாயகமும், மனிதகுல நாகரிகமும் இதனை பார்த்து வாழாதிருக்குமா? இனியும் தான் சர்வதேச சமூகம் இன ஒடுக்கு முறைக்கு ஒத்துப் போவதற்கு நியாயம் கூற முடியுமா?

அனைத்துவகை நெருக்கடிகளின் மத்தியில் 'பாதுகாப்பு வலயம்' எனும் சிறுநிலக் கொலைக் களத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அடித்துப் போடப்பட்ட குற்றுயிர்ப் பாம்பென நெளிந்து துடித்த பெருந்துயரை ஜனநாயகத்தின் பெயரால் 21ஆம் நூற்றாண்டு மனித குல நாகரிகம் எப்படிப் பதிவு செய்யப் போகிறது?

ஒரு வேளை உலகளாவிய ரீதியில் தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு ஈழத்தமிழரை 'ஜினி பிக்' (Guinea pig) எனும் ஒரு மருத்துவ பரிசோதனைப் பிராணியாக உலகம் பயன்படுத்தியுள்ளதா எனும் துயர்மிகு கேள்விக்கு இந்த நாகரிக உலகம் பதில் சொல்லியாக வேண்டும்.


இனப்படுகொலையும் பண்பாட்டுப் படுகொலையும்
கொழும்பில் ஐ.நா. சபைக்கான பேச்சாளராய் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்ற கோர்டன் வைஸ் அளித்த தகவலின் படி, இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியுள்ள தகவல் உலகின் பார்வையை ஒருகணம் ஈழத்தமிழர் பக்கம் நோக்கித் திருப்பியுள்ளது.

ஒரு தகுதிவாய்ந்த, அங்கீகாரம் உள்ள ஒரு தலையாய சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு வெளிநாட்டவரது தகவல் என்ற வகையில் அவர் கூறியுள்ள இத்தகவல் சர்வதேச அரங்கில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதனுடன் கூடவே ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் திருமதி. நவநீதம்பிள்ளை, இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டுமென்று, ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பான தற்போதைய நிலையில் மீண்டும் வலியுறுத்தியிருப்பது அதிக கவனத்தை இலங்கைபாற் திருப்ப உதவியுள்ளது.

வெறுமனே ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்காது, இதனை ஓர் இனப்படுகொலை என்ற பரிமாணத்தில் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதாவது சாதாரண மனித உரிமை மீறல் என்ற அளவுக்கோ அல்லது மேலெழுந்தவாரியாக ஒரு யுத்த மீறல் குற்றம் என்ற அளவுக்கோ இதனைப் பாராது, இது ஒரு திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை (Genocide) என்ற பரிமாணத்தில் பார்க்கப்படவேண்டிய அளவிற்கு இப்படுகொலை பற்றிய நிகழ்வுகள் உள்ளன.

படுகொலை செய்யப்பட்டோர் தொகை 40,000 என்று ஒரு தகுதி வாய்ந்த சர்வதேச அதிகாரியின் கூற்று வந்திருப்பது என்ற வகையில் இது ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஆகும். ஆனால் இத்தொகை இதனை விடவும் இரண்டு மடங்குக்கு மேல் என்ற உண்மையை சர்வதேச சமூகம் கண்டுகொள்ள இன்னும் அதிக தூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் தகவலின்படி வெறும் 3,000 பேர் மட்டுமே யுத்தத்தில் சிக்குண்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் விஞ்ஞானபூர்வமான ஒரு கணக்கெடுப்பை உத்தியோகபூர்வமாக செய்ய முற்பட்டால் 80,000 திற்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டுகொள்வது சாத்தியம்.

கொல்லப்பட்டுள்ளவர்களின் மண்டை ஓடுகளை எண்ணி கணக்கெடுக்கலாம் என்ற நிலையில்லை. ஆனால் கொல்லப்பட்டுள்ளோரின் தொகையை கண்டறிய புள்ளிவிபர முறையில் இடமுண்டு.

நேரடியாக நான் வன்னியில் பணிபுரிந்த அரசாங்க அதியுயர் அதிகாரிகளுடன் வன்னியில் வைத்துப் பேசியுள்ளேன். அதில் அத்தகைய ஓர் உயர் அதிகாரியின் தகவலின்படி, யுத்தம் தொடங்கிய நாளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிப்பகுதியில் மொத்தம் 3,80,000 (மூன்று இலட்சத்து எண்பதாயிரம்) பேர் வாழ்ந்ததற்கான பதிவு தம்மிடம் உண்டு எனக் குறிப்பிட்டார்.

தமது நிர்வாக தேவைகளுக்கான உத்தியோகபூர்வ உள்ளுர் கணக்கெடுப்புக்களின் படி இத்தொகை கண்டுகொள்ளப்பட்டது என்றும், கொழும்பில் இருக்கும் அரசாங்கத்திடமும் இத்தொகை நிர்வாக தேவைக்காக கையளிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிடார். மேலும் இத்தொகை வன்னியில் பணிபுரிந்த அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தலின்படி சுமாராக 2,70,000 பேர் அகதி முகாங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. யுத்த காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றோர் தொகை வெறும் 3,000 பேர்தான். அத்துடன் போராளிகள் என்றதன் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொகை 11,000 பேர் என அரசு சொல்லுகிறது. இத்தொகை மேற்படி 2,70,000 அகதிகளின் தொகைக்கு உள்ளடங்கலானதா அல்லது புறநீங்கலானதா என்பதை அரசின் கணக்கு தெளிவுபடுத்தவில்லை.

மேலும் வன்னிக்கான பாதை மூடப்பட்ட காலத்தில் வன்னியிலிருந்து பாஸ் நடைமுறையின் மூலம் வெளியே சென்றிருக்கக் கூடிய மக்களின் தொகை ஆகக் கூடியது 10,000 பேரைத் தாண்டமாட்டாது. அதேவேளை வன்னிக்கான உள்வரவுத் தொகையும் இங்கு கணக்கில் எடுக்கப்படவேண்டும்.

இந்த 11,000 கைதிகளையும் புறநீங்கல் என்று எடுத்துக் கொண்டாலும் கூட உள்வரவுத் தொகையையும் குறைந்தது 3,000 பேர் எனக் கணக்கெடுக்கும் இடத்து, சுமாராக 90,000 பேரைக் காணவில்லை. இது வரை 7,000 பேர் வரையே கொல்லப்பட்டுள்ளதாக பக்க சார்பற்ற சர்வதேச பதிவுகள் உள்ளன. ஆனால் இந்த 40,000 என்ற தகவல் வந்தபோது மேற்படி 90,000 பேருக்கான நிகழ்தகவுகள் இங்கு கண்ணுக்குத் தெரிகின்றன.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், கடைசி மூன்று மாதங்களில் கொல்லப்பட்டோர் தொகைதான் 40,000 பேர் என கோல்டன் வைஸ் கூறியுள்ளார். அப்படியாயின் 2006 மத்தியில் யுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து 2009 மே மாதம் யுத்தம் முடிந்த வரையான காலத்தில் மேற்படி 90,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்க முடியும் என்ற கணக்கு இலகுவில் நிரூபணமாகக் கூடியது.

சாதாரணமாக உயர் அரசாங்க அதிகாரிகளை பக்கசார்பற்ற முறையில் விசாரணை செய்தாலே அரசாங்கப் பதிவேடுகளின் அடிப்படையில் அல்லது வாய்முறைப்பாடுகளின் அடிப்படையில் இத் 90,000 பேர் பற்றிய விபரத்தை தெளிவுறக் கண்டுகொள்ள முடியும்.வன்னி மண்ணில் உலகின் கதவுகளை மூடிவிட்டு, சர்வதேச நிறுனங்களையும் வெளியேற்றிவிட்டு, இப்பெரும் இனப்படுகொலை நடந்துள்ளமை 21 ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் இந்த உலக சமூகம் பதில் சொல்ல வேண்டிய ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே தற்போது 40,000 என்று வெளிவந்திருக்கும் தகவலும், பக்கசார்பற்ற விசாரணை வேண்டுமென்ற நவநீதம்பிள்ளையின் வலியுறுத்தலும் இக்கட்டத்தில் மேலும் உண்மைகளை கண்டறிவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளன.

இங்கு கண்கண்ட சாட்சிகளை வைத்துக் கொண்டு மட்டும் அரசின் இனப்படுகொலை பற்றிய எண்ணிக்கையை நாம் கண்டறிய வேண்டுமென்று இல்லை. அதற்கான சாட்சியங்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், அரசுக்கு அஞ்சி பலர் சாட்சியம் அளிக்க முன்வரப் போவதுமில்லை. களத்தில் கொல்லப்பட்டோரின் தொகையை ஒவ்வொன்றாய் எண்ணி கணக்கெடுத்தவருமில்லை. ஆதலால் மேற்படி பதிவேடுகளுக்கும், இப்பதிவுகள் பற்றிய வாய்முறைப்பாடுகளிலும் இருந்து எஞ்சியுள்ளோரின் கணக்கை வைத்துக் கொண்டு கொல்லப்பட்டோரின் கணக்கை கண்டறிவது இலகுவானது. அதன்படி அக்கணக்கு 90,000 பேர்வரை வருமென ஒரு குத்துமதிப்பீட்டுக்கு இப்போது வரலாம்.
மேற்படி இனப்படுகொலையையும் இதன் சூழலையும் நான் எனது பச்சைக் கண்களால் கண்டவன். குழந்தைகளும், பெண்களுமே இதில் அதிக தொகையில் மாண்டிருந்தனர் என்பதை தெருக்களிலும், வெளிகளிலும், குடியிருப்புகளிலும், கடற்கரை ஓரங்களிலும் நான் கண்டுள்ளேன்.

தாயைத் தேடிப் பிள்ளையும், பிள்ளையைத் தேடி தாயும் ஓடும் அவலத்தில் அவர்கள் எறிகணைகளுக்குள் இலகுவாக சிக்குண்டு விடுகிறார்கள். சிறுவர்களின் மனோநிலையில் அவர்கள் தொடர்ந்து அதிக நேரம் பதுங்கு குழிகளில் இருக்க மாட்டார்கள். அவர்கள் சிறிது நேரத்தில் பதுங்கு குழிகளுக்கு வெளியே வந்துவிடுவார்கள். தாய்மார் பிள்ளைகளுக்கான உணவு தேடலின் பொருட்டு அல்லது சமையலின் பொருட்டு பதுங்கு குழிகளுக்கு வெளியே அதிகநேரம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

இந்நிலையில் சிறுவர்களும், தாய்மாரும் பதுங்கு குழிகளுக்கு வெளியே நடமாடுவது அதிகம். எறிகணை வீச்சுச் சத்தம் கேட்கும்போது தாய்மார் பிள்ளைகளைத் தேடி ஓடுவதும், பிள்ளைகள் தாய்மாரை நோக்கி ஓடுவதுமான தருணங்களில் அவர்கள் இலகுவில் எறிகணைக்கு இலக்காகி விடுகிறார்கள்.

இந்நிலையிற்தான் கொல்லப்பட்ட பெண்களினதும் சிறுவர்களினதும் தொகை அதிகம் என்ற கணக்கு சாத்தியமாகிறது.

இக்காலகட்டத்தில் இவ்வாறாக காயமுற்றோரின் தொகை அதிகமாகி வைத்தியசாலைகளில் நிரம்பும்போது வைத்தியசாலை இரத்தாறாக காட்சியளிக்கும். அதேவேளை அங்கு பணிபுரிந்த மருத்துவர்களின், பணியாளர்களினதும் தொண்டும், சமூகப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வாறு அயராது பணிபுரிந்த வைத்தியர்களின் பெயர்களை என்னால் பட்டியலிட்டுச் சொல்லமுடியும். ஆனால் இங்கு நான் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.அவர்களின் பெயர் சொல்லி அவர்களின் அரும்பெரும் பணிகளை பாராட்டும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன். நான் நேரில் அவர்களை கண்ணால் கண்டு வாயால் பாராட்டி கைகுலுக்கியுள்ளேன். நான் ஒரு குடிமகன். சாத்தியமான இடங்களுக்குச் சென்று நிலைமைகளை எனது கண்களால் காண்பதிலும், அவர்களின் துயரங்களில் பங்கெடுப்பதிலும் எனக்கு அக்கறையிருந்தது. அந்த அக்கறையினால் அவர்களை நான் நேரில் பாராட்டியுள்ளேன்.

வெளியுலக மக்களுக்கு பல தகவல்களை சொல்ல வேண்டிய ஒரு சமூகப் பொறுப்பு எனக்குண்டு. அந்த வகையில் வன்னி மக்களின் துயரங்களைப் பதிகின்ற ஒரு சிறு ஆரம்பத்தை மட்டுமே என்னால் செய்யமுடியும். இப்பொறுப்பை வேறு பலரும் தொடர்வதற்கான தொடக்கமாக மட்டும் கருதியே இதனை ஆரம்பித்துள்ளேன். இன்னும் ஓரிரு தொகுதிகளுடன் வன்னித் துயர் பற்றிய எனது பதிவுகளை நான் நிறுத்திவிடுவேன்.

இங்கு இத்துயரைப் பதியும்போது இதில் உன்னதமாகப் பணிபுரிந்த மாந்தர்களைப் பற்றிய பதிவும் அவசியம் என நான் கருதுகிறேன். பலரது அரும் பெரும் பணிகள் எதிர்கால சமூகத்திற்கும், உலகின் கண்களுக்கும் முன்மாதிரியாய் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக மருத்துவம், சுகாதாரத்துறை சார்ந்தோரது பணிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களது பணிகளும், விரல் விட்டு எண்ணக் கூடிய அரசாங்க உயர் உத்தியோகத்தர்களது பணிகளும், பொறுப்பு வாய்ந்த தொண்டர் நிறுவனத்தோரது பணிகளும் அதிகம் கருத்தில் எடுக்கப்படத்தக்கவை.

சுதந்திரபுரத்தில் இரண்டு பெண்தாதிகள் எறிகணை வீச்சுக்கு கடமையின் போது பலியாயினர். அப்போது நான் வைத்தியசாலைப் பகுதியில் நின்றேன். தமது சக இரு பணியாளர்களும் கொல்லப்பட்ட அந்தப் பீதியையும் கடந்து அந்த வைத்தியசாலையில் மருத்துவர்களும், பணியாளர்களும் காயப்பட்டோர்களை கவனிப்பதிலேயே கண்ணாய் இருந்த காட்சி மிகவும் உருக்கமான சமூகவுணர்வு மிக்கதாக இருந்தது.

இந்த உலகம் கண்டு கொள்ளவேண்டிய முக்கியமான ஒரு விடயம் உண்டு. ஒரு சிறுநிலப் பரப்பில், அதுவும் போதிய உணவின்றி, வசதிகள் இன்றி மக்கள் இலட்சக்கணக்கில் அடைபட்டிருந்தபோது தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிக அதிகமானது. ஆனால் தொற்று நோய் பற்றிய சிறுபதிவிற்கான வாய்ப்பும் அங்கு இருக்கமுடியாத அளவிற்கு சுகாதார, வைத்தியத் துறையினரது பணி மிகவும் பெரிதாக இருந்தது.

காடடர்ந்த மருத்துவ வசதி குறைந்த வன்னியில் மலேரியா, மூளை மலேரியா, டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்பது இங்கு துலக்கமாகப் பெருமையுடன் பதியப்படவேண்டிய விடயம் ஆகும். உலகம் இதனை வன்னியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். எதிர்கால தமிழீழ அரசில் இவர்கள் சரிவர அடையாளம் காணப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களும் பரிசில்கள் வழங்கப்பட வேண்டியவர்களுமாவர்.

ஆங்காங்கே எங்கும் சிதறல்களாக பிரேதங்கள் காணப்படுவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உழவு இயந்திரப் பெட்டிகளில் 50 தொடக்கம் 60 வரையான பிரேதங்கள் குவியல் குவியல்களாக ஏற்றப்படுவதும், காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதும், இவ்வாறு அவர்கள் கொண்டு செல்லப்படும் போது மைதானத்தில் ஓட்டப் பந்தயத்திற்கு கோடுகள் வரைந்தாற்போல அந்தப் பாதைகளில் இரத்தக் கோடுகள் வழிநெடுங்கிலும் பதிந்திருப்பதும் மனத்தைவிட்டு அகல முடியாத துயர்நிறைந்த காட்சிகளாய் உள்ளன.

அப்பணியாளர்கள் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி அவசர கதியில் பிரேதங்களை ஏற்றிச் செல்கையில் பிரேதங்களின் கால், கை, தலை போன்ற பாகங்கள் உழவு இயந்திரப் பெட்டிகளில் தொங்குவதைப் பார்க்கும் போது, மிகப் பக்குவமாக பண்பாட்டுப் பரிமாணங்களுடன் நிகழும் வழக்கமான மரணக் கிரிகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு மனம் வெதும்பும்.

எனவே வெறுமனே இவற்றை மரணங்களாக மட்டும் பாராமல் பண்பாட்டுப் படுகொலைகளாகவும் பார்க்க வேண்டும்.

வன்னியில் இறுதிவரை நின்ற ஓர் அரசாங்க உயர் உத்தியோகத்தரின் பணிகளை நான் நேரில் கண்டேன். அவர் அதிக சமூகப் பொறுப்புடனும், சிறந்த நிர்வாகத் திறனுடனும் 24 மணிநேரமும் பணிபுரிந்தார். பலதடவைகள் நான் அவரைச் சந்தித்துள்ளேன். அவரது சமூக உணர்வும், அவருக்கு அறிவியலில் இருந்த ஆர்வமும், அவரது நிர்வாகத் திறனும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. நான் அவரை மெய்மறந்து பாராட்டியுள்ளேன். நான் ஒரு சாதாரண குடிமகன்தான். அதில் நான் ஒரு குடிமகனாக நின்று அவரைப் பாராட்ட வேண்டிய அந்தப் பாத்திரத்தின் அளவில் நான் அவரைப் பாராட்டியுள்ளேன்.

ஆனால் எதிர்காலத்தில் அரச அதிகார அளவில் அல்லது நிறுவன அளவில் தமிழ் சமூகம் மேற்படி பணிபுரிந்த பல்வேறு துறையினரையும் அடையாளம் கண்டு எதிர்கால சமூகத்திற்கு முன்மாதிரிகளை உருவாக்கும் நோக்கத்தோடு அவர்களுக்குரிய முக்கியத்துவங்களை அளிக்கவேண்டும்.
துயரின் மத்தியில் மினுங்கும் விடயங்களையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். மேற்படி தகுதிவாய்ந்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் உண்மையான தொகையை வெளியே கொண்டுவர உதவுவதுடன் தாம் கண்ட கேட்ட வன்னித் துயரங்களை அவர்கள் பதிவுசெய்ய வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.